Showing posts with label இன்று - 25.07.2017. Show all posts
Showing posts with label இன்று - 25.07.2017. Show all posts

Tuesday, July 25, 2017

இன்று - 25.07.2017

இன்று -  25.07.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
25-07-2017, ஆடி- 09, செவ்வாய்கிழமை, துதியை திதி காலை 09.58 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ஆயில்யம் நட்சத்திரம் காலை 06.00 வரை பின்பு மகம் நட்சத்திரம் பின்இரவு 04.51 வரை பின்பு பூரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 0. முருக வழிபாடு நல்லது.
 இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.




சுக்கி

கேது 
               
திருக்கணித கிரக நிலை
25.07.2017


சூரிய சந்தி செவ்

புதன்
ராகு

சனி  (வ)
               
குரு 

இன்றைய ராசிப்பலன் -  25.07.2017
மேஷம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
ரிஷபம்
இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அதிருப்திக்கு ஆளாககூடும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
சிம்மம்
இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் அனுகூலப் பலன் கிட்டும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கொடுக்கல்& வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருள் சேரும்.
கன்னி
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெறும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
துலாம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்களை வழியில் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கை கூடும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
தனுசு
இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாக கூடும். சுபகாரியங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
கும்பம்
இன்று நீங்கள் துணிச்சலுடன் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்

இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் கொடுக்கல்& வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும்.