Showing posts with label இன்று - 26.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 26.01.2017. Show all posts

Thursday, January 26, 2017

இன்று - 26.01.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
26.01.2017, தை 13, வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 05.02 வரை பின்பு அமாவாசை, பூராடம் நட்சத்திரம் இரவு 08.32 வரை பின்பு உத்திராடம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, மாத சிவராத்ததிரி, சிவ வழிபாடு நல்லது, திருக்கணித சனிப்பெயர்ச்சி மாலை 07.31 மணிக்கு.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

செவ்




கேது 
சுக்கி  
               
திருக்கணித கிரக நிலை
26.01.2017




சூரிய
ராகு
புதன்
சந்தி
சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன் - 26.01.2017

மேஷம்
இன்று- உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.
மிதுனம்
இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வங்கி சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பொன்பொருள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும்.
சிம்மம்
இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்க்காத செலவுகள் தோன்றும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
கன்னி
இன்று உங்களுக்கு உறவினர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற காலதாமதமாகும். வியாபாரத்தில் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும்.
துலாம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சொத்துக்கள் வாங்க விற்க நல்ல அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று எடுக்கும் பமுயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மன கஷ்டம் குறையும். கடன் பிரச்சனைகள் தீரும்.
தனுசு
இன்று உங்கள் பேச்சு திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். பிள்ளைகள் தங்கள் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியை அடையலாம்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
மீனம்

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்சியை கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல பலனை தரும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.