Showing posts with label இன்று - 26.03.2017. Show all posts
Showing posts with label இன்று - 26.03.2017. Show all posts

Sunday, March 26, 2017

இன்று - 26.03.2017

இன்று -  26.03.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

 வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

நலம் சேர்க்கும் குரு பார்வை!-  -முனைவர் முருகு பாலமுருகன்

இந்த வார பஞ்சாங்கம்!--முனைவர் முருகு பாலமுருகன்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்!-  -சரவணன் Gendral Sec ICAS

திருமணத்தை உறுதியாக்கும் பங்குனி உத்திர கல்யாண விரதம்! (வாரம் ஒரு பரிகாரம்)-            -விசு அய்யர்

காகம் சொல்லும் சகுணம்!- பிரசன்ன ஜோதிட வித்தகர் அம்சி விவேகானந்தன்

பிரம்மச்சரியத்தால் சாதனை படைக்கலாம்!
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

நலம் பெருக்கும் நாளும் செயலும்!
-மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

புராடத்தினரின் புகழ் பெருக்கும் பரிகாரம்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
-ஜோதிஷண்முகம்

ஐந்து வகை ஆயுள்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                              -பிராஜசேகரன் M.Phil Astro

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro


குறியீடுகளின் தத்துவம்!-        சித்தயோகி சிவதாசன் ரவி

வார ராசிபலன் (26-3-2017 முதல் 01-04-2017 வரை) பங்குனி 13 முதல் 19 வரை

                                    முனைவர் முருகுபாலமுருகன்




இன்றைய  பஞ்சாங்கம்
26.03.2017, பங்குனி - 13, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பகல் 12.29 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி, சதயம் நட்சத்திரம் மாலை 04.28 வரை பின்பு பூரட்டாதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, மாத சிவராத்திரி சிவ வழிபாடு உத்தமம், சுபமுகூர்த்த நாள்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,

சூரிய புதன்
சுக்கி(வ)
செவ்


கேது  சந்தி  
திருக்கணித கிரக நிலை
26.03.2017




ராகு
சனி


               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் - 26.03.2017
மேஷம்
இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும்.
ரிஷபம்
இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
மிதுனம்
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.
சிம்மம்
இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல்நிலை சீராகும்குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
கன்னி
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனை தீரும்.
துலாம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்
தனுசு
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருள் வாங்குவீர்.
மகரம்
இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.
கும்பம்
இன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பெண்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செயல்படுவார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
மீனம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.