Showing posts with label இன்று - 28.03.2017. Show all posts
Showing posts with label இன்று - 28.03.2017. Show all posts

Tuesday, March 28, 2017

இன்று - 28.03.2017

இன்று -  28.03.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


 வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

மின் சாதனங்களை எங்கு அமைக்கலாம்?-  -முனைவர் முருகு பாலமுருகன்

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்!-  -சரவணன் Gendral Sec ICAS


வார ராசிபலன் (02-04-2017 முதல் 08-04-2017 வரை) பங்குனி 20 முதல் 26 வரை 
முனைவர் முருகு பாலமுருகன்

இந்த வார பஞ்சாங்கம்!--                  முனைவர் முருகு பாலமுருகன்

உன்னதப் பலன்களை உடனடியாகத் தரும் 30 வகை பரிகாரங்கள்!-
ஜோதிட ஞானி சிரோன்மணி கடகம் இராமசாமி

குறியீடுகளின் தத்துவம்! –                  சித்தயோகி சிவதாசன் ரவி

உத்திராடத்தினரின் உயர்வு பெறும் வழிகள்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

ராகு காலத்திலும் நல்ல நேரம்!
-மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro

ஆபரண்ங்களை அள்ளிச் சேர்க்கும் ஆறுமுகன்! (வாரம் ஒரு பரிகாரம்)-                                                -விசு அய்யர்

ஒளிமயமான எதிர்காலம் மூவரிடத்தில்!
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

பாலாரிட்டங்கள்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பிராஜசேகரன் M.Phil Astro

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     
-முனைவர் முருகு பாலமுருகன்

இன்றைய  பஞ்சாங்கம்
28.03.2017, பங்குனி - 15, செவ்வாய்கிழமை, அமாவாசை திதி காலை 08.27 வரை பின்பு வளர்பிறை பிரதமை பின்இரவு 05.43 வரை பின்பு வளர்பிறை துதியை, உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 01.40 வரை பின்பு ரேவதி, அமிர்தயோகம் பகல் 01.40 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 0, முருக வழிபாடு உத்தமம், கரிநாள், புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சூரிய சந்தி
சுக்கி(வ)
செவ் புதன்



கேது 
திருக்கணித கிரக நிலை
28.03.2017



ராகு
சனி
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  28.03.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் முன்னேற்றமும் லாபமும் ஏற்படும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும்.
கடகம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். வியாபாரத்தில்  கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் ஏற்படும். தெய்வ வழிபாடு முன்னேற்றத்தை தரும்.      
சிம்மம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.
கன்னி
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.
துலாம்
இன்று குடும்பத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறைந்து பிரச்சனை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலும் அதற்குக்கேற்ப லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பணப்பிரச்சனை தீரும்.
தனுசு
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிறரிடம் கடன் வாங்க நேரிடும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும்.
மகரம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொன் பொருள் சேரும்.
மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாரத்ததை விட லாபம் பெருகும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வரும். உத்தியோக சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.