Showing posts with label இன்று - 28.05.2017. Show all posts
Showing posts with label இன்று - 28.05.2017. Show all posts

Sunday, May 28, 2017

இன்று - 28.05.2017

இன்று -  28.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்


செல்வம் கொழிக்கச் செய்யும் தெய்வீக மூலிகைகள்!-  கடகம் இராமசாமி

வார ராசிபலன் (28-05-2017 முதல் 03-06-2017 வரை) வைகாசி 14 முதல் 20 வரை
முனைவர் முருகு பாலமுருகன்

தங்கம் பெருக தங்கமான தருணம்! -      அம்சி விவேகானந்தன்

தீய குணங்களை மாற்றும் தேய்பிறை அஷ்டமி யாகம்!-
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

12 லக்னப் பலன்கள்!-                       முனைவர் முருகு பாலமுருகன்

வெளிநாட்டு திட்டம் கைகூட வேண்டுமா? – (வாரம் ஒரு பரிகாரம்)-
விசு அய்யர்

சுவையாக உணவுண்ணும் யோகம்! -       பிராஜசேகரன் M.Phil Astro

100 சதவிகித வெற்றி தரும் ஹோரை பலம்! -
மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

விஷக் கன்னியர் பிறக்கும் கார்த்திகை!-- -        -டாக்டர் இராரகு M,Sc Astro

அரசியலில் வெற்றி தரும் சின்னங்கள்! –   சித்தயோகி சிவதாசன் ரவி

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்




இன்றைய  பஞ்சாங்கம்
28-05-2017, வைகாசி -14, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி பகல் 02.04 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 03.30 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0, ஜீவன் - 1/2. அக்னி நட்சத்திரம் முடிவு இரவு 07.33 வரை.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,

சுக்கி
புதன்

சூரிய

செவ்
சந்தி
கேது 
திருக்கணித கிரக நிலை
28.05.2017



ராகு
சனி(வ)
 

               
குரு (வ)

இன்றைய ராசிப்பலன் -  28.05.2017

மேஷம்
இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் மூலம் மகிழச்சி ஏற்படும். திருமண முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்
இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி தரும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
கடகம்
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கப்பெறும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனை தீரும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
கன்னி
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருள் சேரும்.
துலாம்
இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சனைகள் சற்று குறையும்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதங்கள் உண்டாககூடும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.
தனுசு
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
மகரம்
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் கிட்டும்.
கும்பம்
இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.
மீனம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.