Showing posts with label இன்று - 28.06.2017. Show all posts
Showing posts with label இன்று - 28.06.2017. Show all posts

Wednesday, June 28, 2017

இன்று - 28.06.2017

இன்று -  28.06.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்


12 லக்னப் பலன்கள்!-                            முனைவர் முருகு பாலமுருகன்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்

பார் போற்றும் மேன்மை பெற பத்து வழிகள்!-
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -        -டாக்டர் இரா. ரகு M,Sc Astro

கிரகங்களுக்கு சிறப்பு பார்வை ஏன்?   -                     ஐயப்ப சர்மா

குறியீடுகளின் தத்துவம்! –                       சித்தயோகி சிவதாசன் ரவி

யாருக்கு என்ன தொழில் ஏற்றம் தரும்?!-                  ஜி.ஆர். வெங்கடேஸ்வரன்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

வாக்கியப் பஞ்சாங்கம்! -                   ஜோதிடரத்னா ஜி. -ஸ்ரீனிவாசன்

இல்லற வாழ்வை அல்லல் படுத்தும் புனர்ப்பு தோஷம்! –
அஸ்ட்ரோ சுந்தரராஜன்

குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்! –
                                                பி. ராஜசேகரன் M.Phil Astro

வார ராசிபலன் (02-07-2017 முதல் 08-07-2017 வரை) ஆனி 18 முதல் 24 வரை
முனைவர் முருகு பாலமுருகன்



இன்றைய  பஞ்சாங்கம்
28-06-2017, ஆனி- 14, புதன்கிழமை, பஞ்சமி திதி மாலை 06.33 வரை பின்பு வளர்பிறைசஷ்டி. மகம் நட்சத்திரம் இரவு 07.17 வரை பின்பு பூரம். சித்தயோகம் இரவு 07.17 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00



சுக்கி

சூரிய புதன் செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
28.06.2017



சந்தி ராகு

சனி(வ)
               
குரு 

இன்றைய ராசிப்பலன் -  28.06.2017
மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
ரிஷபம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்க கூடும். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாரத்ததை விட லாபம் பெருகும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறைந்து பிரச்சனை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். வியாபாரத்தில்  கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கடன் பிரச்சனைகள் குறையும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சேமிப்பு உயரும்.
கன்னி
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும்.
துலாம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகளும் அதிகரிக்ககூடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம். எதிர்பார்த்த கடனுதவி உரிய நேரத்தில் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும்.
தனுசு
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் அனுசரித்து சென்றால் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.
மகரம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.
கும்பம்
இன்று குடும்பத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மீனம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.