Showing posts with label இன்று - 28.09.2017. Show all posts
Showing posts with label இன்று - 28.09.2017. Show all posts

Thursday, September 28, 2017

இன்று - 28.09.2017

இன்று -  28.09.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
28-09-2017, புரட்டாசி -12, வியாழக்கிழமை, அஷ்டமி திதி இரவு 09.36 வரை பின்பு நவமி. மூலம் நட்சத்திரம் பகல் 12.57 வரை பின்பு பூராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.






               
திருக்கணித கிரக நிலை
28.09.2017


ராகு
கேது
செவ்
சுக்கி 
சந்தி
சனி 

குரு    
  சூரிய புதன்

இன்றைய ராசிப்பலன் -  28.09.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
ரிஷபம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும். வருமானம் பெருகும்.
கடகம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
சிம்மம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை கூடும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிறரிடம் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் நீங்க பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள்.
கன்னி
இன்று உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.
துலாம்
இன்று உங்கள் வீட்டில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் தேக்க நிலை நீங்கி சற்று முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் விழியில் அலைச்சலும் அதற்குக்கேற்ப லாபம் கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் நண்பர்களால்  கிட்டும்
தனுசு
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.
மீனம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செயல்படுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.