Showing posts with label இன்று - 29.04.2017. Show all posts
Showing posts with label இன்று - 29.04.2017. Show all posts

Saturday, April 29, 2017

இன்று - 29.04.2017

இன்று -  29.04.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
29-04-2017, சித்திரை-16, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 06.56 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி திதி பின்இரவு 03.40 பின்பு வளர்பிறை பஞ்சமி. ரோகிணி நட்சத்திரம் பகல் 10.56 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 10.56 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.

சுக்கி

சூரிய
புதன்(வ)
செவ் சந்தி

கேது 
திருக்கணித கிரக நிலை
29.04.2017



ராகு
சனி(வ)
 

               
குரு(வ) 

இன்றைய ராசிப்பலன் -  29.04.2017

மேஷம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கப்பெறும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.
கன்னி
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பொறுமையுடன் இருப்பது நல்லது.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்க கூடும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.
தனுசு
இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். வேலையில் பணிச்சுமை குறையும்.
மகரம்
இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்க தாமத ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் மன நிம்மதியை தரும்.
கும்பம்
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படும். வெளி வேலைகளால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
மீனம்

இன்று பிள்ளைகளால் மனமகிழும் சம்பவங்கள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் மேலோங்கும்.