Showing posts with label இன்று - 29.05.2017. Show all posts
Showing posts with label இன்று - 29.05.2017. Show all posts

Monday, May 29, 2017

இன்று - 29.05.2017

இன்று -  29.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்


செல்வம் கொழிக்கச் செய்யும் தெய்வீக மூலிகைகள்!-  கடகம் இராமசாமி

வார ராசிபலன் (28-05-2017 முதல் 03-06-2017 வரை) வைகாசி 14 முதல் 20 வரை
முனைவர் முருகு பாலமுருகன்

தங்கம் பெருக தங்கமான தருணம்! -      அம்சி விவேகானந்தன்

தீய குணங்களை மாற்றும் தேய்பிறை அஷ்டமி யாகம்!-
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

12 லக்னப் பலன்கள்!-                       முனைவர் முருகு பாலமுருகன்

வெளிநாட்டு திட்டம் கைகூட வேண்டுமா? – (வாரம் ஒரு பரிகாரம்)-
விசு அய்யர்

சுவையாக உணவுண்ணும் யோகம்! -       பிராஜசேகரன் M.Phil Astro

100 சதவிகித வெற்றி தரும் ஹோரை பலம்! -
மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

விஷக் கன்னியர் பிறக்கும் கார்த்திகை!-- -        -டாக்டர் இராரகு M,Sc Astro

அரசியலில் வெற்றி தரும் சின்னங்கள்! –   சித்தயோகி சிவதாசன் ரவி

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்



இன்றைய  பஞ்சாங்கம்
29-05-2017, வைகாசி -15, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.07 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 01.24 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் பகல் 01.24 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0, ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி. விநாயக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சுக்கி
புதன்

சூரிய

செவ்
சந்தி
கேது 
திருக்கணித கிரக நிலை
29.05.2017



ராகு
சனி(வ)
 

               
குரு (வ)

இன்றைய ராசிப்பலன் -  29.05.2017
மேஷம்
இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகள் தொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.
கடகம்
இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் காரியங்களில் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்க தாமதப்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
கன்னி
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.
விருச்சிகம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை தரும்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.
மகரம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்ககூடிய வாய்ப்புகள் உருவாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மீனம்

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.