Showing posts with label இன்று - 30.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 30.01.2017. Show all posts

Monday, January 30, 2017

இன்று - 30.01.2017

இன்று -  30.01.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
30.01.2017, தை 17, திங்கட்கிழமை, திரிதியை திதி பின்இரவு 04.44 வரை பின்பு வளர்பிறை சதுர்த்திசதயம் நட்சத்திரம் இரவு 11.04 வரை பின்பு பூரட்டாதி, சித்தயோகம் இரவு 11.04 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, கரிநாள், சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

செவ் சுக்கி




கேது  சந்தி
               
திருக்கணித கிரக நிலை
30.01.2017


சூரிய
ராகு
புதன் சனி 


               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  30.01.2017
மேஷம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்
மிதுனம்
இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்க தாமதப்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமத பலனே கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
சிம்மம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்க கூடிய வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
கன்னி
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர்.
துலாம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை கொடுக்கும்.
தனுசு
இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
மகரம்
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். வெளி வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்
கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
மீனம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளுக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் தொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.