Showing posts with label இன்று - 05.07.2017. Show all posts
Showing posts with label இன்று - 05.07.2017. Show all posts

Wednesday, July 5, 2017

இன்று - 05.07.2017

இன்று - 05.07.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள் 
ஜுலை 2017 ஓம்சரவணபவா இதழுடன்
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - 2019
(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,
 அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது)  
96 பக்கம் இலவச இனைப்பு
இப்படிக்கு
ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பாலமுருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம்




இன்றைய  பஞ்சாங்கம்
05-07-2017, ஆனி- 21, புதன்கிழமை, துவாதசி திதி பின்இரவு 02.52 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. நாள் முழுவதும் அனுஷம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00




சுக்கி
சூரிய செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
05.07.2017

புதன்

ராகு

சந்தி சனி  (வ)
               
குரு 

இன்றைய ராசிப்பலன் -  05.07.2017

மேஷம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். புது முயற்சிகளை தவிர்க்கவும். மன நிம்மதி குறையும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.
மிதுனம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வெளி வட்டார நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பிரச்சனைகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இருந்த மன குழப்பங்கள் சற்று குறையும்.
சிம்மம்
இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபம் பெருகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.
கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும்.
துலாம்
இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிப்படையாது. சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கடன்கள் குறையும்.
விருச்சிகம்
இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். வீட்டில் பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும். ஆடம்பர பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளால் அமைதி குறையும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கடன் பிரச்சனை தீரும்.
மகரம்
இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் கணவன்& மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.
மீனம்
இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.