Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 01.11.2017. Show all posts
Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 01.11.2017. Show all posts

Wednesday, November 1, 2017

இன்றைய ராசிப்பலன் - 01.11.2017

இன்றைய ராசிப்பலன் -  01.11.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,



இன்றைய  பஞ்சாங்கம்
01-11-2017, ஐப்பசி -15, புதன்கிழமை, துவாதசி திதி மாலை 05.57 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 07.40 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் காலை 07.40 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சந்தி




               
திருக்கணித கிரக நிலை
01.11.2017
ராகு
கேது

சனி
 

சூரிய குரு புதன்
 சுக்கி செவ்

இன்றைய ராசிப்பலன் -  01.11.2017
மேஷம்
இன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் வழியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வேலை விஷயமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
கன்னி
இன்று வேலையில் உங்கள் திறமைகளுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமா£ இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நிலவும். உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும்.
மகரம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
கும்பம்
உங்களுக்கு இன்று பணவரவு சுமாராகத்தான் இருக்கும். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பண பிரச்சினையை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
மீனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனை தீரும்.