Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 04.11.2017. Show all posts
Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 04.11.2017. Show all posts

Saturday, November 4, 2017

இன்றைய ராசிப்பலன் - 04.11.2017

இன்றைய ராசிப்பலன் -  04.11.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,



இன்றைய  பஞ்சாங்கம்
04-11-2017, ஐப்பசி -18, சனிக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 10.53 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பரணி நட்சத்திரம் பின்இரவு 01.05 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. சனி ப்ரீதி நல்லது.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.


சந்தி



               
திருக்கணித கிரக நிலை
04.11.2017
ராகு
கேது

சனி
  புதன்
சூரிய சுக்கி குரு
 செவ்

இன்றைய ராசிப்பலன் -  04.11.2017
மேஷம்
இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வருமானம் பெருகும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்களது மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொண்டால் ஏற்படும் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியம் கைகூடும்.
கடகம்
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சனைகள் வந்தாலும் லாபம் பாதிப்படையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கன்னி
இன்று நீங்கள் சற்று குழப்பமுடன் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளிநபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை.
துலாம்
இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கனுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். கடன் குறையும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். வருமானம் பெருகும்.
தனுசு
இன்று வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
மகரம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சிலருக்கு வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.
கும்பம்
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சனைகள் குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.
மீனம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகலாம். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் உங்களின் செயல்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.