Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 10.10.2017. Show all posts
Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 10.10.2017. Show all posts

Tuesday, October 10, 2017

இன்றைய ராசிப்பலன் - 10.10.2017

இன்று -  10.10.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
10-10-2017, புரட்டாசி -24, செவ்வாய்கிழமை, பஞ்சமி திதி பகல் 11.38 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. ரோகிணி நட்சத்திரம் பகல் 12.08 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 12.08 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.





சந்தி

               
திருக்கணித கிரக நிலை
10.10.2017

ராகு
கேது
செவ்  


சனி 

குரு
 சூரிய சுக்கி புதன்

இன்றைய ராசிப்பலன் -  10.10.2017
மேஷம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு ஈடுபடுவார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். பெற்றோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளிவட்டார நட்பு அனுகூலம் தரும். தேவைகள் பூர்த்தியாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை கூடும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். புதிய நட்பு ஏற்படும். பொருளாதாரம் மேன்மை அமையும்.
மிதுனம்
இன்று வியாபாரத்தில் எதிரிகளால் பிரச்சனைகள் உண்டாகலாம். குடும்பத்தில் பெரியவர்களிடம் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.
கடகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனுபவமுள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் சாதகப் பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
இன்று நீங்கள் எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது. உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் வீண் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழிலில் உள்ள மந்த நிலை விலகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. எந்த ஒரு செயலிலும் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும்.
தனுசு
இன்று உறவினர்கள் மூலம் ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவி கிட்டும். சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை காணப்படும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். பணபற்றாக்குறை ஓரளவு குறையும்.
மீனம்
இன்று உங்கள் உடல்நிலையில் இருந்த சோர்வு நீங்கி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறந்தவர்கள் உடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.