Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 14.10.2017. Show all posts
Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 14.10.2017. Show all posts

Saturday, October 14, 2017

இன்றைய ராசிப்பலன் - 14.10.2017

இன்று -  14.10.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
14-10-2017, புரட்டாசி -28, சனிக்கிழமை, தசமி திதி பின்இரவு 02.04 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. பூசம் நட்சத்திரம் காலை 06.53 வரை பின்பு ஆயில்யம். சித்தயோகம் காலை 06.53 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. சனி ப்ரீதி நல்லது.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.






               
திருக்கணித கிரக நிலை
14.10.2017

சந்தி ராகு
கேது
               


சனி 

குரு புதன்
 சூரிய செவ் சுக்கி

இன்றைய ராசிப்பலன் -  14.10.2017
மேஷம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் நெருக்கடிகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். லாபம் பெருகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் நல்ல லாபங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உங்கள் புகழ் செல்வாக்கு மேலோங்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம்.
கடகம்
இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் லாபம் கிடைக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
கன்னி
இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கப்பெறும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
துலாம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். கடன் பிரச்சினை தீரும்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமலிருப்பது உத்தமம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
மகரம்
இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபார வளர்ச்சிக்கான புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவர். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகும்.