Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 19.10.2017. Show all posts
Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 19.10.2017. Show all posts

Thursday, October 19, 2017

இன்றைய ராசிப்பலன் - 19.10.2017

இன்று -  19.10.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
19-10-2017, ஐப்பசி -02, வியாழக்கிழமை, அமாவாசை திதி இரவு 12.42 வரை பின்பு பிரதமை. அஸ்தம் நட்சத்திரம் காலை 07.26 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 0. சர்வ அமாவாசை. கேதார கௌரி விரதம். லட்சுமி குபேர பூஜை.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.







               
திருக்கணித கிரக நிலை
19.10.2017

ராகு
கேது



சனி 

சூரிய குரு புதன்
 செவ் சுக்கி சந்தி

இன்றைய ராசிப்பலன் -  19.10.2017
மேஷம்
இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். நிதானம் தேவை.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் உதவியால் தொழிலில் இருந்த பிரச்சனை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.
கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகலாம். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் வெற்றியை தரும்.
துலாம்
இன்று பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் அலைச்சலுக்கேற்ப அனுகூலப்பலன் கிட்டும்.
விருச்சிகம்
இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் நட்புடன் இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேரும்.
தனுசு
இன்று வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
மகரம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன சங்கடங்கள் உண்டாகும். உடல் நிலை மந்தமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். வேலைபளு அதிகரிக்கும்.
மீனம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் அதிகரிக்கலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வேலையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.