Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 21.10.2017. Show all posts
Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 21.10.2017. Show all posts

Saturday, October 21, 2017

இன்றைய ராசிப்பலன் - 21.10.2017

இன்று -  21.10.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
21-10-2017, ஐப்பசி -04, சனிக்கிழமை, துதியை திதி பின்இரவு 03.00 வரை பின்பு வளர்பிறை திரிதியை. சுவாதி நட்சத்திரம் பகல் 10.17 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 0. சந்திர தரிசனம்.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.






               
திருக்கணித கிரக நிலை
21.10.2017

ராகு
கேது



சனி 

சூரிய குரு புதன் சந்தி
 செவ் சுக்கி

இன்றைய ராசிப்பலன் -  21.10.2017
மேஷம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். வங்கி கடன் எளிதில் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை குறையும்.
ரிஷபம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனை தீரும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும்.
மிதுனம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சில தடைக்குப் பின்பு அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன்கள் குறையும்.
சிம்மம்
இன்று மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சேமிப்பு உயரும்.
கன்னி
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும்.
துலாம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். வெளி வட்டார நட்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.
விருச்சிகம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் குறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.
தனுசு
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
மகரம்
இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் பெருகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபார சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வேலையில் உள்ள பிரச்சினைகள் சற்று குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.
மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். திருமண சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.