Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 23.10.2017. Show all posts
Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 23.10.2017. Show all posts

Monday, October 23, 2017

இன்றைய ராசிப்பலன் - 23.10.2017

இன்றைய ராசிப்பலன் -  23.10.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
23-10-2017, ஐப்பசி -06, திங்கட்கிழமை, நாள் முழுவதும் சதுர்த்தி திதி. அனுஷம் நட்சத்திரம் பகல் 02.53 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. கரி நாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.






               
திருக்கணித கிரக நிலை
23.10.2017
ராகு
கேது



சந்தி சனி 

சூரிய குரு புதன்
  சுக்கி செவ்

இன்றைய ராசிப்பலன் -  23.10.2017
மேஷம்
இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
ரிஷபம்
இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். ஊழியர்களின் ஒத்துழைப்பால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணபற்றாக்குறை நீங்கும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண சுபமுயற்சிகள் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கடகம்
இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும்.
சிம்மம்
இன்று தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழத்திடுவீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
துலாம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சனை விலகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
தனுசு
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும்.
மகரம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சனையால் மன உளைச்சல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மந்த நிலை நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும்.
மீனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.