Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 24.10.2017. Show all posts
Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 24.10.2017. Show all posts

Tuesday, October 24, 2017

இன்றைய ராசிப்பலன் - 24.10.2017

இன்றைய ராசிப்பலன் -  24.10.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
24-10-2017, ஐப்பசி -07, செவ்வாய்கிழமை, சதுர்த்தி திதி காலை 07.06 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. கேட்டை நட்சத்திரம் மாலை 05.45 வரை பின்பு மூலம். மரணயோகம் மாலை 05.45 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 1/2. முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.






               
திருக்கணித கிரக நிலை
24.10.2017
ராகு
கேது



சந்தி சனி 

சூரிய குரு புதன்
  சுக்கி செவ்

இன்றைய ராசிப்பலன் -  24.10.2017
மேஷம்
இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். உங்கள் ராசிக்கு மாலை 05.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு மாலை 05.45 பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமத பலனே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை.
மிதுனம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் விலகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
சிம்மம்
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். வெளி வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும்.
கன்னி
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் தோன்றும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை கொடுக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் குறையும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
தனுசு
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகள் மேலதிகாரிகளால் பாரட்டப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
மகரம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
மீனம்
இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நினைத்த காரியம் நிறைவேறும். கடன் பிரச்சனை தீரும்.