Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 26.10.2017. Show all posts
Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 26.10.2017. Show all posts

Thursday, October 26, 2017

இன்றைய ராசிப்பலன் - 26.10.2017

இன்றைய ராசிப்பலன் -  26.10.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


இன்றைய  பஞ்சாங்கம்
26-10-2017, ஐப்பசி -09, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.16 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பூராடம் நட்சத்திரம் இரவு 11.52 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. இன்று திருக்கணித சனி பெயா்ச்சி பகல் 03.48 மணிக்கு
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.






               
திருக்கணித கிரக நிலை
26.10.2017
ராகு
கேது

சந்தி
சனி 

சூரிய குரு புதன்
  சுக்கி செவ்

இன்றைய ராசிப்பலன் -  26.10.2017
மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்
ரிஷபம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.
மிதுனம்
இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிட்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும்.
கடகம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். செலவுகளை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது உத்தமம். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நற்பலனை அடையலாம். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.
கன்னி
இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல் படுவார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.
துலாம்
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைப்பெறும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.
விருச்சிகம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் தரும். எதையும் சிந்தித்து செய்வது நல்லது.
தனுசு
இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
மகரம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் மறைந்து முன்னேற்றம் உண்டாகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பொன் பொருன் சேரும்.
மீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பிரச்சனைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.