Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 28.10.2017. Show all posts
Showing posts with label இன்றைய ராசிப்பலன் - 28.10.2017. Show all posts

Saturday, October 28, 2017

இன்றைய ராசிப்பலன் - 28.10.2017

இன்றைய ராசிப்பலன் -  28.10.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


இன்றைய  பஞ்சாங்கம்
28-10-2017, ஐப்பசி -11, சனிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 04.51 வரை பின்பு வளர்பிறை நவமி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 05.03 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். வாஸ்து நாள் காலை 7.47 மணி முதல் 8.23 மணி வரை. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.






               
திருக்கணித கிரக நிலை
28.10.2017
ராகு
சந்தி கேது

சனி
 

சூரிய குரு புதன்
  சுக்கி செவ்

இன்றைய ராசிப்பலன் -  28.10.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.
மிதுனம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாரத்ததை விட லாபம் பெருகும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
சிம்மம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
துலாம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணி சுமை கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் முன்னேற்றமும் லாபமும் ஏற்படும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.
மகரம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று சுபசெய்தி வரும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொன் பொருள் சேரும்.
கும்பம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். வியாபாரத்தில்  கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு முன்னேற்றத்தை தரும்.
மீனம்
இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். நினைத்த காரியம் நிறைவேறும்.