Showing posts with label மிதுனம்- துர்முகி வருட பலன்கள் -2016 2017. Show all posts
Showing posts with label மிதுனம்- துர்முகி வருட பலன்கள் -2016 2017. Show all posts

Tuesday, April 5, 2016

மிதுனம் துர்முகி வருட பலன்கள் 2016 2017



ஜோதிட மாமணி, 

முனைவர் முருகு பால முருகன்

 மலேசியா விஜயம்


தமிழக பிரபல சோதிடர் 

திரு முருகுஇராசேந்திரன் அவரின்   மகன்

தமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்
 
விஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி, 

முனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.

அவர்கள்  குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார். 
தங்கும் நாட்கள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 19 வரை 
மலேசியாவில் கோலாலம்பூர், பினாங் 

ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்
ஜோதிட ஆலோசனை கட்டனம் 60 வெள்ளி மட்டுமே
நேரில் தொடர்பு கொள்ளலாம்
cell- - 0167642631



காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் 



உள்ளது கண்டு மகிழுங்கள் )

ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

மிதுனம் துர்முகி வருட பலன்கள் 2016   2017
மிருகசீரிஷம் 3,4 ம் பாதங்கள்,திருவாதிரை, பூனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்

வசீகரமான கண்களும், சிறந்த பேச்சாற்றலும் எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த துர்முகி ஆண்டு உங்களின் பெயர், செல்வம், செல்வாக்கு புகழ் போன்ற அனைத்தையும் உயர்த்தும் ஆண்டாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6இல் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். ராகு 3ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன் -மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தொழில் வியாபாரத்திலும் நல்ல லாபங்கள் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களையும், உயர் பதவிகளையும் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தற்போது குரு 3ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலில் சற்று ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் வரும் ஆடி 18 முதல் (02.08.2016) குரு 4ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. 

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றிகளைப் பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்திலுள்ளவர்களும் மருத்துவ செலவுகளின்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதாரம்
கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதி நவீன பொருட்களின் சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை போன்ற யாவும் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும் எதிர் பாராத உதவிகளும் கிட்டும்.

கொடுக்கல் வாங்கல்
பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும் என்றாலும் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது நல்லதல்ல. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

உத்தியோகம்
பணியில் கௌரமான நிலையிருக்கும். எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும்.

அரசியல்
உங்களின் பெயர், புகழ் உயரக் கூடிய காலமாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மறைமுக வருவா
ய்களும் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடுவதால் சற்றே அலைச்சல் உண்டாகும். மேடை பேச்சுகளில் கவனமுடனிருப்பது மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் உழைப்பிற்கேற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம், பூமி மனை போன்றவற்றால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலையிருக்கும். சுப காரியங்களும் நடைபெறும். பண விஷயங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

பெண்கள்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடையே இருந்த பகைமை விலகும். பிறந்த இடத்திற்கும், புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். திருமணமாகதவர்களுக்கு மணமாகும். அழகான புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. புதிய ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

மாணவ மானவியர்
கல்வியில் முதன்மை பெற்று விளங்கி பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். சிலருக்கு வெளியூர், வெளி நாடுகளுக்கு சென்று கல்வி கற்க கூடிய வாய்ப்பு உண்டாகும். நல்ல நண்பர்களின் தொடர்புகளால் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

அதிர்ஷடம் அளிப்பை
எண் & 5,6,8
நிறம் & பச்சை, வெள்ளை
கிழமை & புதன், வெள்ளி
கல் & மரகதம்
திசை & வடக்கு
தெய்வம் &விஷ்ணு

பரிகாரம்
     மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப் ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது கொண்டக்கடலை மாலை சாற்றுவது நல்லது.