Showing posts with label ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019. Show all posts
Showing posts with label ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019. Show all posts

Wednesday, July 26, 2017

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019


ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


மீனம்  
பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 


எல்லாருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய நினைக்கும் நற்குணம் கொண்ட மீன ராசி நேயர்களே! வாக்கியப்படி வரும் 27-7-2017முதல் 13-2-2019வரை சர்ப்ப கிரகங்களான ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 5-ஆம் வீட்டிலும், கேது பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள்.2-9-2017முதல் 4-10-2018வரை அட்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும், 19-12-2017முதல் சனி ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது என்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு தொடர்பான சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது, குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம். பிள்ளைகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகளால் வீண்விரயங்கள் ஏற்படும். உற்றார் -உறவினர்களை அனுசரித்துச்செல்ல வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களைத் தடைகளுக்குப்பின்பே நிறைவேற்ற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் -வாங்கலிலும் பெரிய தொகையை ஈடுபடுத்தும்போது சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன்மூலம் வீண்பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொண்டால் படிப்படியான முன்னேற்றத்தை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றமான பலன்களைப் பெறுவீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறுவது நல்லது. அரசியல்வாதிகள் மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் அவர்களின் ஆதரவுகளைப் பெறமுடியும். மாணவர்கள் கல்வியில் முழுமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். வரும் 4-10-2018முதல் குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் எவ்விதப் பிரச்சினைகளில் இருந்தும் படிப்படியான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலை முன்னேற்றமடையும். கடன்கள் சற்றே குறையும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.உடல் ஆரோக்கியம், உடல் நலனில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். ஜலத் தொடர்பான பாதிப்புகளும் உஷ்ணம் தொடர்பான பாதிப்புகளும் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை செய்யவேண்டி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் வீண்பிரச்சினைகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன், உடல் சோர்வு உண்டாகும். எந்தக் காரியத்தை எளிதில் செய்துமுடிக்க முடியாதபடி உடல்சோர்வு உண்டாகும். 

குடும்பம், பொருளாதார நிலை 

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும் என்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. புத்திரர்களும் சாதகமின்றி அமைவார்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின்பே வெற்றியினைப் பெறமுடியும்.  பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தையில் திருப்தியற்ற நிலை உண்டாகும். 

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் துறைகளில் சுமாரான லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்யக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியாது. வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். 

தொழில், வியாபாரம் 

தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகளும் சோதனைகளும் உண்டாகும். கூட்டாளிகளிடையே நம்பிக்கையின்மை ஏற்படும். உடனிருப்பவர்களே ஏமாற்றக்கூடிய சூழ்நிலை உண்டாகும். பெரிய முதலீடுகளில் ஆரம்பிக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே அனுகூலத்தை அடையமுடியும். எதிர்பார்த்த வங்கிக் கடன்களும் தாமதப்படும். தொழிலாளர்களால் வீண்பிரச்சினைகள் ஏற்படும். 

உத்தியோகம் 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் கெடுபிடிகளை சமாளிக்க அதிகம் பாடுபடநேரிடும். எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியிருப்பதால் உடல்நிலை சோர்வடையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காது. 

பெண்கள்

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளும் குழப்பங்களும் ஏற்படும். கணவன் -மனைவியிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். புத்திரர்களால் நிம்மதி குறையும். உற்றார் -உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். பிறரிடமிருந்து பொருளையோ நகையையோ இரவலாகப் பெறுவதைத் தவிர்க்கவும். பொருளாதாரநிலை சுமாராக அமையும். 

அரசியல்  

தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள நிறைய பாடுபட வேண்டிவரும். எடுக்கும் காரியங்களை எதிர்நீச்சல்போட்டே செய்துமுடிக்க முடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். உடனிருப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது. 

விவசாயிகள்

விளைச்சல் சுமாராக இருந்தாலும் பட்டபாட்டிற்கான பலன்களைப் பெற்றுவிடமுடியும். பங்காளிகளிடையே ஒற்றுமைக்குறைவுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் வீண்வம்பு வழக்குகளும் உண்டாகும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நன்மையளிக்கும்.

கலைஞர்கள்

தொழில்ரீதியாக அதிக போட்டி பொறாமைகளும் தொல்லைகளும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்ள நேரிடும். புதிய பட வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். வரவேண்டிய சம்பள பாக்கிகளும் கிடைக்கப்பெறாமல் பொருளாதார நிலையிலும் சங்கடங்கள் ஏற்படும். 

மாணவ- மாணவியர்

படிப்பில் கவனம் செலுத்த முடியாமல்போகும். எந்த ஒரு செயலையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டி இருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசம் பிரச்சினைகளை ஏற்படுத்தும். விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடும்போது சற்று கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. உல்லாசப் பயணங்களால் ஓரளவு மகிழ்ச்சி உண்டாகும். 

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை

ராகு பகவான் 4,7--க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டிலும் கேதுபகவான் 2,9-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 11-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஒரளவுக்கு எதிலும் முன்னேற்றமான நிலையினை அடைந்துவிடமுடியும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீகச் சொத்துகளாலும் அனுகூலம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும் என்றாலும் பெரிய கெடுதிகள் இல்லை. 2-9-2017முதல் குரு 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உற்றார் -உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் மட்டுமே சாதகமான பலனைப் பெறமுடியும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் சிறந்த அனுகூலத்தை அடையமுடியும். போட்டிகள் சற்றே குறையும். எந்தவித வம்பு வழக்குகளையும் எதிர்கொண்டு வெற்றி பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் ஓரளவுக்குக் கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்துமுடிக்க முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம். 

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை

ராகு பகவான் 4,7-க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டிலும், கேதுபகவான் 5-க்கு அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 11-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சுமாராக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குருவும் அட்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியவிஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது.வாகனங்களில் பயணம் செய்யும்போது நிதானம் தேவை. 19-12-2017முதல் சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபங்கள் உண்டாகும் என்றாலும் கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கப்பெற்றாலும் வேலைப்பளு அதிகரிப்பதால் பணிகளை செய்துமுடிக்க சற்று காலதாமதம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது. 

ராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை

ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 11,12-க்கு அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டிலும் கேதுபகவான் 5-க்கு அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 11-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் மறையும். மணமாகாதவர்களுக்கு நல்லவரன்கள் சில தடைகளுக்குப்பின் தேடிவரும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு, வாகனங்களையும் வாங்குவீர்கள். இதுவரை இருந்து வந்த அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறுவதால் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரமும் முன்னேற்றமடையும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை

ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 11,12-க்கு அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டிலும், கேதுபகவான் 6-க்கு அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 11-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். 4-10-2018முதல் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். மருத்துவச் செலவுகள் குறையும். அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் குறைந்து வாய்ப்புகள் தேடிவரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்யும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் பணிகளைச் சிறப்புடன் செய்து முடிக்க முடியும். பயணங்களால் நற்பலனை அடைவீர்கள். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம். 

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை

ராகு பகவான் உங்கள் ராசியாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டிலும் கேதுபகவான் 6-க்கு அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 11-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் குருபகவான் 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி சுபிட்சமான நிலை உண்டாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும், அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சி, பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் ஏற்படும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும். வம்பு வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகுவதுடன் லாபங்களும் தாராளமாக அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். தொழில்ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 5-ல் சஞ்சாரம் செய்வதால் ராகுவுக்குப் பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்கள், மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது, ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது நல்லது. சனி 10-ல் சஞ்சரிப்பதால் சனிக்குத் தொடர்ந்து பரிகாரம் செய்வது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது.

 அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,
நிறம் - மஞ்சள், சிவப்பு
கிழமை - வியாழன், ஞாயிறு
கல் - புஷ்ப ராகம்
திசை - வடகிழக்கு
தெய்வம் - தட்சிணாமூர்த்தி

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019


ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com




கும்பம்  
அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்


எந்தப் பிரச்சினைகளையும் அலசிஆராய்ந்து தீர்த்து வைக்கக்கூடிய அளவிற்கு அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே! வாக்கியப்படி வரும் 27-7-2017முதல் 13-2-2019வரை சர்ப்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டிலும், கேது 12-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதும் மிகச்சிறப்பான அமைப்பு என்பதால் இதுநாள்வரை கணவன் -மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுவிலகி ஒற்றுமை அதிகரிக்கும். குருபகவான் 2-9-2017முதல் 4-10-2018வரை 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும், 19-12-2017முதல் ராசியாதிபதி சனிபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கடன்கள் யாவும் குறையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் யாவும் தடையின்றிக் கைகூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் பாக்கியமும் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை பலப்படும். அழகான புத்திரபாக்கியமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடையமுடியும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொன் பொருள் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதால் லாபங்கள் சிறப்பாக அமையும். அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதுடன் இடமாற்றங்களும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர் களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த மாண்புமிகு பதவிகளைப் பெறுவார்கள். மக்களின் ஆதரவுகளும் சிறப்பாக அமைவதால் நினைத்த காரியங்களை எளிதில் நிறைவேற்றிவிடமுடியும். கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கதாபாத்திரங்கள் அமைவதால் நடிப்புத்திறனை வெளிபடுத்தி ரசிகர்களின் ஆதரவுகளைப் பெறுவார்கள்.  மாணவர்கள் கல்வியில் நல்லஈடுபாட்டுடன் செயல்பட்டு பெற்றோர், ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெறுவார்கள். 

உடல் ஆரோக்கியம்

உடல்நிலை சிறப்பாக இருக்கும். சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவச் சிகிச்சைகளை எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு உடல்நிலை முன்னேற்றமடையும்.

குடும்பம், பொருளாதார நிலை 

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இதுவரைப்பட்ட கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நடைபெறக்கூடிய இனிய சம்பவங்களும் உங்கள் மனமகிழ்ச்சியை மேலும் அதிகப்படுத்தும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். 

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலிலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கொடுத்த கடன்களும் திருப்தியாக வசூலாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். 

தொழில், வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் கஷ்ட நஷ்டங்கள் விலகும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பும் கூட்டாளிகளின் ஆதரவும் மேலும்மேலும் லாபத்தைக் கொடுக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் கிடைக்கும். 

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் மகிழ்ச்சிகரமாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் அமையும். உங்கள் திறமைகளுக்குத் தகுந்த பாராட்டுதல்கள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்துமுடிப்பீர்கள். சிலருக்குத் தடைப்பட்ட இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் யோகம் உண்டாகும். உத்தியோக உயர்வுகளால் குடும்பத்தின் பொருளாதார நிலையும் உயரும். 

பெண்கள் 

குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். எந்தக் காரியத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். உற்றார் -உறவினர்களிடையே நல்ல பெயரும் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய பொருட்சேர்க்கைகளும், ஆடை ஆபரணச் சேர்க்கையும் உண்டாகி மனநிம்மதியை ஏற்படுத்தும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

அரசியல் 

அரசியல்வாதிகளின் பேச்சுக்கு மதிப்பும், செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய நிலையும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எந்தவித இடையூறுகளும் இன்றி சாதனைகள் புரிவார்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும்அமைந்து அதன்மூலம் அனுகூலமும், பாராட்டுதல்களும் கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும்.

விவசாயிகள்

விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்பதால் லாபமும் சிறப்பாகவே அமையும். பொருளாதாரமிகுதியால் பூமி, மனை வாங்குவது, புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலப்பலன் உண்டாகும். பங்காளிகளிடையே இருந்த பிரச்சினைகள் யாவும்விலகி ஒற்றுமை பலப்படும். கடன்கள் குறையும்.

கலைஞர்கள் 

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். புறக்கணித்தவர்களும் வாய்ப்புகளை வாரி வழங்குவார்கள். நீங்கள் நடித்த படங்களும் வசூலை வாரி வழங்கும். போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். 

மாணவ- மாணவியர்

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். மேற்கல்வியிலும் புதிய சாதனைகள் செய்ய வாய்ப்பு அமையும். நல்ல நண்பர்களின் சேர்க்கை மகிழச்சி அளிப்பதாக அமையும். விளையாட்டுத்துறைகளிலும் மாநில அளவில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக அமையும்.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை

ராகு பகவான் 5-ஆம் அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும், கேது பகவான் 3,10-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். 2-9-2017முதல் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடைவிலகி கைகூடும். பணவரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார், உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படு வார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடிவரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம். 

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை

ராகு பகவான் 5-ஆம் அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும், கேது பகவான் 6-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் நினைத்தது யாவும் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதாரநிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரளநிலையில் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைப் காப்பாற்றி நல்லபெயரை எடுப்பீர்கள். 19-12-2017முதல் சனி லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசுவழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகள் புதிதாக சேருவார்கள். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம்பட செயல்பட்டு கைநழுவிய பதவி உயர்வுகளைத் தடையின்றிப் பெறுவார்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். விநாயகர் வழிபாடு உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை

ராகுபகவான் உங்கள் ராசியாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும், கேது பகவான் 6-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் மேன்மையான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். மணவயதை அடைந்தவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக்கூடிய வாய்ப்பும் கிட்டும். பூமி, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெறமுடியும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை

ராகு பகவான் உங்கள் ராசியாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும், கேது பகவான் 7-ஆம் அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். அசையும், அசையாச் சொத்துகளால் அனுகூலப்பலன் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.  கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர் களின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு உற்சாகத்தைத் தரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். 04-10-2018 முதல் குருபகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். கொடுத்த கடன்களைத் தடையின்றி வசூலிக்க முடியும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. 

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை

ராகுபகவான் உங்கள் ராசியாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும், கேது பகவான்  சூரியனின் நட்சத்திரத்தில் 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அற்புதமான நற்பலன்களைப் பெறமுடியும். தாராள தனவரவுகளைக் கொடுக்கும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளைக் கையாண்டு தொழிலை விரிவுசெய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் -மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். உற்றார் -உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வெற்றிகள் கிட்டும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். கல்வியிலும் மாணவர்கள் சிறந்து விளங்கமுடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

பரிகாரம் 

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 12-ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வரளிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை, போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது, சர்ப்ப சாந்தி செய்வது, தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8,
நிறம் - பச்சை, நீலம்
கிழமை - புதன், சனி
கல் - நீலக்கல்
திசை - மேற்கு
தெய்வம் - ஐயப்பன்

Monday, July 24, 2017

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



விருச்சிகம் 
விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

நியாய அநியாயங்களை யாருக்கும் பயப்படாமல் எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! வாக்கியப்படி வரும் 27-7-2017முதல் 13-2-2019வரை சர்ப்ப கிரகங்களான ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 9-ஆம் வீட்டிலும், கேது பகவான் 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பே ஆகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் உண்டாகும். பயணங்களால் சாதகமானப் பலன்களைப் பெறுவீர்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். 2-9-2017முதல் குருபகவான் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டிலும் 4-10-2018முதல் ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்ய இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்துச் செயல்படுவது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது உத்தமம். இதுமட்டுமின்றி 19-12-2017முதல் சனி பகவான் ஜென்ம ராசிக்கு 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் ஏழரைச்சனியில் குடும்பச்சனி தொடங்கவுள்ளது. இதுவும் சாதகமற்ற அமைப்பே ஆகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்லவரன்கள் அமைவதில் தாமதநிலை உண்டாகும். மணமானவர்களுக்கு சில மருத்துவச் செலவுகளுக்குப்பின் புத்திரபாக்கியம் அமையும். சர்ப்ப கிரகங்கள் சாதமாக சஞ்சரிப்பதால் சொந்தமாக வீடு, கார் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளாலும் லாபங்கள் அமையும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரம் சற்று மந்தநிலையில் நடைபெற்றாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படவும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் சற்றே அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வேலைப்பளுவை குறைத்துக்கொள்ள முடியும்.

உடல் ஆரோக்கியம் 
உடல்நிலையில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை மேற்கொள்ள வேண்டிவரும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தலை வலி, சோர்வு உண்டாகும். எந்தக் காரியத்தையும் முழுமையாகச் செய்துமுடிக்க முடியாதபடி உடல்நிலை சோர்வடையும். வாகனங்களில் பயணம் செல்லும்போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. நெருங்கியவர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுவதால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.

குடும்பம், பொருளாதார நிலை 
குடும்பத்தில் வீண்பிரச்சினைகளும் குழப்பங்களும் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். பொருளாதாரநிலையிலும் ஏற்றத்தாழ்வான நிலைகளே உண்டாகும். உற்றார் -உறவினர்களும் சாதகமின்றி இருப்பார்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியாத சூழ்நிலைகள் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்றவற்றின்மூலம் வீண்விரயங்கள் உண்டாகும். கொடுக்கல் -வாங்கலிலும் கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியாத நிலை ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியாது. பெரிய தொகை ஈடுபடுத்துவதையும், முன்ஜாமீன் கொடுப்பதையும் தவிர்ப்பதால் வீண்சங்கடங்கள் குறையும். வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும்.

தொழில், வியாபாரம் 
தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளையும், மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த உதவி தாமதப்படும். அரசு வழியில் அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் வீண்விரயம் ஏற்படும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு லாபம் குறையும். தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கிகள் உண்டாகும்.

உத்தியோகம் 
உத்தியோகஸ்தர்கள் பணியில் பல சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். கூடுதல் பொறுப்புகள் அதிகமாவதால் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி விடுப்பு எடுக்க நேரிடும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைப்பதால் எதையும் முடிந்த அளவு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.

பெண்கள் 
பெண்களுக்கு புகுந்தவீட்டிலும் சரி பிறந்தவீட்டிலும் சரி நிம்மதியற்ற நிலையே உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காது. பொருளாதார நிலையில் சங்கடங்கள் நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகள் தடைப்படும். உடல்நிலை பாதிப்படையும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன்கள் வாங்க வேண்டி இருக்கும். எல்லா வகையிலும் நெருக்கடிகள் தோன்றும்.

அரசியல் 
அரசியல்வாதிகளின் பெயர், புகழுக்கு பங்கம் வரக்கூடும். நெருங்கியவர்களே கூடஇருந்து குழிபறிப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாது. அமைச்சர்களின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெறுவதால் பொருளாதாரநிலை உயர்வடையும். புதிய பூமி, மனை போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். கால்நடைகளாலும் லாபம் உண்டாகும்.

கலைஞர்கள் 
கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்காமல் மிகுந்த சஞ்சலத்திற்கு ஆளாவார்கள். எவ்வளவு முயற்சி செய்தாலும் எதிர்பார்த்த வசூலைப் பெறமுடியாமல் படங்கள் பாதிப்பு அடையும். ரசிகர்களின் ஆதரவு குறையும். பொருளாதாரமும் தடைப்படும்.

மாணவ- மாணவியர்
கல்வியில் கவனம் செலுத்தமுடியாதபடி மந்தநிலை உண்டாகும். விளையாட்டுப்போட்டிகளிலும் சிக்கல் உண்டாகும். தேவையற்ற நண்ர்களின் சகவாசம் வீண்பிரச்சினைகளை ஏற்படுத்தும். மதிப்பெண்கள் குறைவதால் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை
ராகு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9-லும் கேது பகவான் ராசியாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். 2-9-2017முதல் குரு ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதிக்குறைவுகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உற்றார் -உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர் களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப் பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். குருவுக்குரிய பரிகாரங் களைச் செய்வது நல்லது.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை
ராகு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9-லும், கேது பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் இக்காலங்களில் ஓரளவுக்கு ஏற்றமான பலன்களை அடைவீர்கள் என்றாலும் 12-ல் குரு சஞ்சரிப்பதாலும் 19-12-2017 முதல் சனி பகவான் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியம். குடும்பத்திலுள்ள வர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.சிலநேரங்களில் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களாலும் வீண்பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகள் தோன்றினாலும் வரவேண்டிய வாய்ப்புகளில் தடை ஏற்படாது. தொழிலாளர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஓரளவுக்கு அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். அசையும், அசையா சொத்துக்களால் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருந்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் கிட்டும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரைராகு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9-லும் கேது பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம்பெற முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருந்தாலும் ஆடம்பரமாகச் செலவு செய்வதைத் தவிர்க்கவும். தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகையைப்  பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். பூர்வீகச் சொத்துகளால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும் கிடைக்கவேண்டிய லாபம் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நற்பலன் அமையும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கப்பெற்றாலும் உடன்பணிபுரிபவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படுவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை
ராகு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9-லும் கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரநிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக அமையும். 4-10-2018முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உடன்பழகுபவர்களிடம் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் உங்களுக்கே வீண்பிரச்சினைகளை உண்டாக்கிவிடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் தேவையற்ற மருத்துவச் செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. செய்யும் தொழில், வியாபாரத்திலும் நிறைய போட்டிகள் நிலவும். வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப்போகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமைவதில் தடைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.
ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை
ராகு பகவான் குருவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9-லும், கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் எந்தவித எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை, கைகால், மூட்டுகளில் வலி போன்றவை உண்டாகும். என்றாலும் அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படமுடியும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப்பெற்றாலும் திருமணம் நடைபெறத் தாமதம் ஏற்படும்.  கணவன்- மனைவிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் -உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். பணம் கொடுக்கல் -வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும்போது கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே லாபத்தைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடைகளுக்குப்பின் கிடைக்கும். சில நேரங்களில் பிறர்செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலங்கள் ஏற்படும். வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
பரிகாரம்
ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது.  திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வேங்கடாசலபதியை வழிபடுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, கருப்புநிற ஆடை அணிவது நல்லது.
குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் குருவுக்குப் பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்திக்குக் கொண்டைக் கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண்    - 1,2,3,9,
நிறம்    - ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை  - செவ்வாய், வியாழன்
கல்     - பவளம்
திசை   - தெற்கு
தெய்வம் - முருகன்

Saturday, July 22, 2017

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



துலாம் 
சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்


வசீகரமான உடல்வாகும், அழகான முக அமைப்பும், யாருக்கும் பயப்படாத குணமும் கொண்ட துலா ராசி நேயர்களே! வாக்கியப்படி வரும் 27-7-2017 முதல் 13-2-2019வரை சர்ப்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 10-ஆம் வீட்டிலும் கேது 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தொழில், வியாபாரரீதியாக மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். வீண் வம்பு வழக்குகளைச் சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்றவை உண்டாகும்.2-9-2017முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதும் அவ்வளவு அனுகூலத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது என்றாலும் சனிபகவான் 19-12-2017முதல் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதாரநிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் விஷயங்களில் அனுகூலப்பலன் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் ஓரளவுக்கு எதிர்பார்த்த லாபத்தை அடைந்து விடமுடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்துச்செல்வதன்மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ளலாம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நற்பலன் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது நல்லது. தனகாரகன் குரு தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை விலகி வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். சிலருக்கு புத்திரபாக்கியம் அமையும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் பைசல் ஆகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைத் தடையின்றி பெறமுடியும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் பணிகளைச் சிறப்பாக செய்துமுடிப்பதால் உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற சற்று அதிகம் பாடுபட வேண்டியிருக்கும் என்றாலும் மக்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் எடுத்துக்கொள்வதன் மூலம் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.

உடல் ஆரோக்கியம் 

உடல்நிலையில் தேவையற்ற பாதிப்புகளை உண்டாக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய வலிமையையும் வல்லமையையும் பெறுவீர்கள். அடிக்கடி பயணங்கள் செல்வதால் உடல்நலம் சோர்வடைந்தாலும் எதிர்பாராத அனுகூலத்தையும் அடைவீர்கள். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். 

குடும்பம், பொருளாதார நிலை 

குடும்பவாழ்வில் வீண்பிரச்சினைகளும் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும் என்பதால் கணவன் -மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பொருளாதாரநிலையில் மேன்மையும் ஏற்றமும் உண்டாகும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். 

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி கான்டிராக்ட் போன்றவற்றில் பெரிய லாபம் எதிர்பார்க்க முடியாது. கொடுக்கல் -வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச்செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றிவிடமுடியும். பழைய தொகைகளும் தடையின்றி வசூலாகும். 

தொழில், வியாபாரம் 

சிறுசிறு மறைமுக எதிர்ப்புகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தாமதம் அடைந்தாலும் தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மையும் முன்னேற்றமும் உண்டாகும். கடந்தகால பிரச்சினைகள் அனைத்தும் விலகி அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். கூட்டாளிகளும் வேலையாட்களும் ஆதரவாக செயல்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல லாபம் அமையும். புதிய நவீன கருவிகள் வாங்க அரசுவழியில் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். 

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்துமுடிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உங்களது சோர்வுகள் விலகி உற்சாகமாகப் பணியாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். புதிய பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப்பின் கிடைக்கப்பெறும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற உத்தியோகத்தைப் பெறுவார்கள்.

பெண்கள் 

எடுக்கும் காரியங்களில் சில தடைகளுக்குப்பின் வெற்றி பெறுவீர்கள். தனவரவு ஓரளவுக்கு சிறப்பாக அமையும். புதிய பொருட்சேர்க்கைகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண்வாக்குவாதங்களாலும் தேவையற்ற பிரச்சினைகளாலும் நிம்மதி குறைந்தாலும் ஒற்றுமை குறையாது. உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன் அமைவதில் தாமதநிலை ஏற்படும் என்றாலும் மணவாழ்க்கை சிறப்பாக அமையும். தாய்வழியில் ஆதரவைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல உயர்வும் முன்னேற்றமும் உண்டாகும். 

அரசியல் 

அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எடுக்கும் காரியங்களில் சிறப்பாகப் பணியாற்ற முடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். மறைமுக வருவாய் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அதிகம் செலவுகளைச் செய்யும் சூழ்நிலைகள்  ஏற்படும். தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். 

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். மழை வளம் குறைவாக இருந்தாலும் கையாள வேண்டிய முறைகளைக் கையாள்வதால் லாபங்களைப் பெற்று விடுவீர்கள். பயிர்களை இன்சூரஸ் செய்வதன்மூலமும் அரசுவழியில் ஆதாயங்களைப் பெறமுடியும்.

கலைஞர்கள் 

எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்களை பிறர் தட்டிச்சென்றாலும் புதிய வாய்ப்புகள் தேடிவரும். பொருளாதாரரீதியாக முன்னேற்றத்தை அடைவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அதனால் அனுகூலப்பலனும் உண்டாகும். பாடல் மற்றும் இசைத்துறைகளில் உள்ளவர்களும் அனுகூலம் அடைவார்கள். 

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று கடினமுயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற்று முன்னேற்றம் அடையமுடியும். விளையாட்டுப்போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற கூடிய வாய்ப்புகள் அமையும். பெற்றேர், ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சுற்றுலா செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். 

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை

ராகுபகவான் உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் 10-ஆம் வீட்டிலும், கேது பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதமான அமைப்பு என்று கூறமுடியாது. இக்காலங்களில் 2-9-2017முதல் குருவும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் ஏற்ற இறக்கமான பலன்களையே பெறமுடியும். எந்தவிதப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் ஓரளவுக்கு மேன்மையாக இருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் தடைகளுக்குப்பின்பு வெற்றி கிட்டும். உடல்நிலையில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்துச்செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகையை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச்செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலித்துவிடமுடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். பயணங்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. குருப்பரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை

ராகுபகவான் உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் 10-ஆம் வீட்டிலும் கேது பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதமான அமைப்பு என்று கூறமுடியாது என்றாலும் சனிபகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதாரம் உயர்வடையும். செல்வம், செல்வாக்கு பெருகும். புத்திரவழியில் சிறுசிறு மன சஞ்சலங்களும், பூர்வீகச் சொத்துகளால் வீண் விரயங்களும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். கொடுக்கல் -வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். 19-12-2017முதல் சனிபகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் கௌரவமான நிலையினைப் பெறமுடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிட்டும்.  ராகு கேதுவுக்கு சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை

ராகு பகவான் உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான சனியின் நட்சத்திரத்தில் 10-ஆம் வீட்டிலும் கேது பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதும், 3-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தொழில், வியாபார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். போட்ட முதலீட்டினை எடுப்பதில் சிரமங்கள் ஏற்படும். நிறைய போட்டிகளும் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணவரவுகளிலும் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலிலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதையும் தேவையற்ற பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை

ராகு பகவான் உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான சனியின் நட்சத்திரத்தில் 10-ஆம் வீட்டிலும் கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் சனி 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும்.4-10-2018முதல் குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞசரிக்க இருப்பதால் பணவரவுகளிலில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி தரும். மணமாகாதவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். கணவன் -மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் அனுகூலப் பலனைத் தரும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் கிட்டும். அசையும், அசையாச் சொத்துகளையும் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபங்களைப் பெறமுடியும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கடன்கள் படிப்படியாகக் குறையும். ராகு காலங்களில் துர்க்கையமம்மனை வழிபடுவது உத்தமம்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை

ராகுபகவான் குருவின் நட்சத்திரத்தில் 10-ஆம் வீட்டிலும் கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் சனி 3-லும், குரு 2-லும் சாதகமாக சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் மேன்மையான பலன்கள் உண்டாகும். தடைப்பட்டுக் கொண்டிருக்கும் திருமண சுபகாரியங்கள் யாவும் தடை விலகி தடபுடலாகக் கைகூடும். பொன் பொருள் சேரும். பொருளாதாரநிலையும் சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியமும் ஓரளவுக்கு சிறப்பாக அமைவதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன் -மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாகக் குறையும். பணம் கொடுக்கல் -வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபங்கள் தடையின்றிக் கிடைக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்படச் செயல்படமுடியும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். சேமிப்பும் பெருகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். ராகு- கேதுவுக்குப் பரிகாரம் செய்வது நல்லது.

பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் சர்ப்ப சாந்தி செய்வது, ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழுநோயாளிகளுக்கு தானம் கொடுப்பது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது. 

கேதுவுக்குப் பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வரளிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை, வெள்ளைப் புள்ளிகள் உடைய பழுப்பு நிறப்பசு போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண்   - 4,5,6,7,8
நிறம்   - வெள்ளை, பச்சை,
கிழமை - வெள்ளி, புதன்,
கல்     - வைரம்
திசை   - தென் கிழக்கு,
தெய்வம் - லட்சுமி