Showing posts with label 2013 ஆண்டு பலன்கள். Show all posts
Showing posts with label 2013 ஆண்டு பலன்கள். Show all posts

Tuesday, December 25, 2012

NEW YEAR RASI PALANGAL_2013-விருச்சிக ராசி



2013 ஆண்டு பலன்கள விருச்சிக ராசி

             வாழ்க்கையில் எவ்வளவு இடையூறுகளை சந்தித் தாலும் மனம் தளராது முன்னேறும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு! என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் ஜென்மராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கம். திருமண சுபகாரியங்களும் கைகூடும். உற்றார் உறவின ர்களும் சாதகமாக செயல்படுவார்கள். கணவன், மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். உங்கள் ஜென்ம ராசிக்கு 12ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரை சனி விரயச் சனி நடைபெறுவதாலும் வரும் 28-05-2013 முதல் குருபகவான் அஷ்டமன ஸ்தானமான 8ல் வீட்டில் சஞ்சாரம் செய்யவி ருப்பதாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் பண விஷயங்களில் கவனமுடன் செயல்ப டுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஏற்ற இறக்க மான நிலையே இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிhபாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல்கள் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும்.

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உடல் சோர்வு கைகால் மூட்டுகளில் வலி வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ள வர்களாலும் மருத்தவ செலவுகள் ஏற்படும். முடிந்தவரை உணவு விஷய ங்களில் கவன முடனிருப்பதும், தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் நல்லது.

குடும்பம் பொருளாதாரநிலை

இந்த ஆண்டு மே மாதம்வரை குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாகவே இரு க்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கூட கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உங்களுக்கு ஏழரை சனியில் விரயசனி நடைபெறுவதாலும் குரு ஜூன் முதல் 8ல் சஞ்சரிக்கவிருப்பதாலும் குடும்பத்தி லுள்ளவர்களை அனுசரித்து செல்வதும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதும் நல்லது.

கொடுக்கல் வாங்கல்

குருபகவான் மே மாதம்வரை சம சப்தம ஸ்தானமான 7ம் வீட்டில் சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலும் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஜூன் முதல் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தா திருப்பது, பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது போன்றவை நற்பலனை உண்டாக்கும்.

 தொழில் வியாபாரிகளுக்கு

ஆண்டின் முற்பாதியில் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளிலும் வெற்றிகிட்டும். ஏழரை சனியில் விரயசனி நடைபெறுவதால் உடனிரு ப்பவர்களை அணிசரித்து செல்வது பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பயண ங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

 உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் தொடக்கத்தில் பல ஊதிய உயர்வுகளும், கௌரவமான பதவிகளும் கிடைக்க ப்பெற்றாலும், ஏழரை சனியில் விரய சனி நடை பெறுவதால் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது, உயரதிகாரிங்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பா ராத இடமாற்றங்களால் குடும்பத்தோடு பிரியநேரிடும்.

 அரசியல்வாதிகளுக்கு

அரசியலில் கௌரவமான நிலையிருக்கம். மக்களின் ஆதரவுகளும் சிறப்பாக இருக்கும். பெயர், புகழும் உயரும் சமுதாயத்தில் சிறப்பான உயர்வு களும் உண்டாகும். ஏழரை சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் தேவை யற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் உண்டாகும். எடுக்கும். முயற்சிகள் அணைத்திலும் எதிர் நீச்சல் போட வேண்டி வரும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல்கள் சுமாரக இருக்கும். எதிர்பார்க்கும் விலை கிடைத்தாலும் அதுபட்ட பாட்டி ற்கானப் பலனாக இருக்காது. கால் நடைகளால் ஓரளவுக்கு லாபங்களைப் பெறமுடியும். காய் கனி, பூ போன்றவற்றாலும் லாபங்களைப் பெறமுடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாம தப்படும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய காலமாகும். ஆண்டின் தொடக்கத்தில் திருமண சுபகாரியங்களும் கைகூடும். புத்திர பாக்கியம் அமையும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கம். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

படிப்பு

கல்வியில் சுமாரான நிலை ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி உங்க ளுக்கே பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மேலும் உற்சாகத்தை ஏற்படுவதாக இருக்கம். ஏழரை சனி நடைபெறுவதால் உடன்பழகும் நண்பர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது நிதானம் தேவை.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவறில் ஆண் டின் முற்பாதியில் அணுகூலங்களை பெற  முடியும்.

ஜனவரி

நசைச்சுவையுணர்வு அதிகம் கொண்ட உங்களுக்கு ஜென்மராசிக்கு 3ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மாதபிற்பகுதியில் சூரியன் 3ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு சாதகமான அமை ப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி யினைப் பெற்றுவிடுவீர்கள் பணவரவுகள் தேவை க்கேற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்க்கவும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்ப தால் கவனம் தேவை தட்சிணாமூர்த்தியை வழி படுவது நல்லது.
சந்திராஷ்டமம் 23-01-2013 இரவு 09-56 மணி முதல் 
     26-01-2013 காலை 09-12 மணிவரை

பெப்ரவரி

மிகுந்த திறமைசாலியாக விளங்கும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் சூரியனும் 7ல் குருபகவானும் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். திருமணம் போன்ற சுபகாரிய ங்களும் நடைபெறும். புத்திரவழியில் மகிழ்ச்சியும், கணவன் மனைவியிடையே ஒற்றுமையும் உண்டாகும். பொன் பொருள் சேரும் கொடுக்கல் வாங்கலும் திருப்திகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் உயர்வுகளும் உடனிருப்பவர்களால் நற்பலனும் உண்டாகும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம் 20-02-2013 அதிகாலை 05.03 மணிமுதல்       22-02-2013 மாலை 04.25 மணிவரை

மார்ச்

பேச்சாற்றலால் மற்றவரை வசமாக்கி கொள்ளும் உங்களுக்கு 4ல் சூரியனும் 5ல் செவ்வா யும் சஞ்சரிப்பது அசையும் அசையா சொத்துக்களால் வீண்விரயங்களை ஏற்படுத்தும் என்றாலும், 6ல் கேதுவும் 7ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எதையும் எதிர்கொள்ளும் வலிமையைப் பெறு வீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூட்டா ளிகளால் நற்பலன் ஏற்படும். தேவையற்ற பயண ங்களை தவிர்ப்பது நல்லது. ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சிவபெருமானை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம 19-03-2013 மதியம் 12.08 மணி முதல் 
        21-03-2013 இரவு 11.31 மணிவரை

ஏப்ரல்

  முன்கோபமும், முரட்டுசுபாவமும் கொண்ட உங்களுக்கு ஜென்மராசிக்கு 7ல் குரு சஞ்சரிப்பதும், மாதபிற்பகுதியில் செவ்வாய் சூரியன் 6ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். குடும்பத்தில் சுபீட்சமான நிலை யிருக்கம். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் லாபாம் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மற்ற வர்களுக்கு உதவிசெய்யக்கூடிய சந்தர்ப்பமும் அமையும். தெய்வ காரியங்களுக்காக பயண ங்களை மேற்கொள்வீர்கள். துர்க்கை அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம 15-04-2013 இரவு 08.13 மணி மதல் 
18-04-2013 காலை 06.41 மணிவரை

மே

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்ற கொள்கையுள்ள  உங்களுக்கு ஜென்மராசிக்கு 6ல் சூரியன் செவ்வாயும் 7ல் குருவும் சஞ்சரிப்பதால் விரோதிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்க ளுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு தீர்வுக்கு வரும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வர ன்கள் தேடிவரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பொன் பொருள் சேரும். கடன்க ளும் குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் பெருகும். துர்க்கை அம்னை வழிபடவும்.
சந்திராஷ்டமம 13-05-2013 அதிகாலை 02.19 மணி முதல் 
15-05-2013 மதியம் 01.50 மணிவரை

ஜூன்

ஏற்கும் செயலை திறமையுடன் செய்து முடிக்கும் உங்களுக்கு 7ம் வீட்டில் சூரியன் செவ்வாயும் 8ல் குருவும் 12ல் சனிராகுவும் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. எடுக்கும் முயற்சிக ளில் இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். எதிர்பார்க்கும் உதவிக ளும் தாமதப்படும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிவனை வழிபடவும்.
சந்திராஷ்டமம 09-06-2013 காலை 09.36 மணி முதல் 
11-06-2013 இரவு 09.17 மணிவரை

ஜூலை

நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கம் உங்களுக்கு ஜென்மராசிக்கு 8ல் சூரியன் செவ்வாய் குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். சுபகா ரியங்களும் தடைபடும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாவதுடன் குடும்பத்தில் உள்ளவ ர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டால் வீண் பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம 06-07-2013 மாலை 05.02 மணி முதல் 
09-07-2013 காலை 04.46 மணிவரை

ஆகஸ்ட்

சமுதாய பற்றும் சமூகப் பணிகளில் ஈடுபாடும் கொண்ட உங்களுக்கு 8ம் வீட்டில் செவ்வாய் குரு சஞ்சரித்தாலும் மாத பிற்பகுதியில் சூரியன் 10ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்ற பலன் உண்டாகும். அரசு வழியில் அனுகூலங்கள் கிடை க்கும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தாகளுக்கு பணியில் நிம்மதி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது நல்லது. குருவுக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம் 02-08-2013 இரவு 12.21 மணி முதல் 
05-08-2013 மதியம் 12.03 மணிவரை 
30-08-2013 காலை 07.33 மணி முதல் 
01-09-2013 மாலை 07.16 மணிவரை

செப்டம்பர்

துப்பறியும் வேலைகளை சிறப்பாக செய்யும் உங்களுக்கு 6ல் கேதுவும் 9ல் செவ்வாயும் 10ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்று மை சிறப்பாக அமையும். திருமண சுபகாரி யங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம். 
சந்திராஷ்டமம் 26-09-2013 மதியம் 02.41 மணிமுதல் 
29-09-2013 அதிகாலை 02.21 மணிவரை

அக்டோபர்

இரக்க சுபாவமும், தயாளகுணமும் கொண்ட உங்களுக்கு 6ல் கேதுவும் 11ல் சூரியனும் சஞ்சரிப்பதால் எடுக்கம் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கம். குடும்ப த்தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பொருள் இழப்பும் உண்டாகும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சில நேரங்களில் வீண் பிரச்சனைகளை உண்டா க்கிவிடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அரசு வழியில் சிறுசிறு லாபம் கிட்டும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம 23-10-2013 இரவு 09.48 மணி முதல் 
26-10-2013 காலை 09.27 மணிவரை

நவம்பர்

மற்றவர்களை அடக்கி ஆளும் குணம் கொண்ட உங்களுக்கு 8ம் வீட்டில் குருவும் 12ல் சூரியன் சனி, ராகுவும் சஞ்சரித்தாலும் 10ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிவிடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும், பணவரவுகள் தேவைக்கே ற்றபடியிருக்கும். தொழில் வியாபார ரீதியாக மேற் கொள்ளும் புதியமுயற்சிகளில் அனுகூலம் உண்டா கும். அரசு வழியிலும் ஆதரவுகிட்டும். உத்தியோ கஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை யிருக்கம். வேளைபளுவும் குறையும். சிவபெரு மானை வழிபடவும்.
சந்திராஷ்டமம 20-11-2013 காலை 05.03 மணி முதல் 
22-11-2013 மாலை 04.42 மணிவரை.

டிசம்பர்

அனைவரிடமும் அன்புடனும் பரிவுடனும் நடந்து கொள்ளும் உங்களுக்கு ஜென்மராசியில் ச+ரியன் சஞ்சரித்தாலும் 8ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதும், லாபஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகிட்டும் திருமண சுபகாரி யங்களும் கைகூடும். பொன்பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலத்தைப் பெறமுடியும். சனிக்குரிய பரிகார ங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம் 17-12-2013 மதியம் 12.23 மணி முதல் 
19-12-2013 இரவு 11.56 மணிவரை

விசாகம் 4ம் பாதம்

அமைதியான முகமும், வசீகரமான தோற்றமும் கொண்ட விசாக அன்பர்களே! இந்த ஆண்டு நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் நடந்து கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்தா லும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளை எதிலும் ஈடுபடாதிருப்பது நல்லது.

அனுஷம்

நடைமுறைக்கு ஏற்றவாறு வாழ்க்கையை வாழக்கூடிய அனுஷ அன்பர்களே ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் திருப்திகரமான நிலையே இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களும் கைகூடும். கொடுக்கல் வாங்கலில் கனவமுடன் செயல்பட்டால் அனுகூல த்தைப் பெறமுடியும். உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதாலும் ஜூன் முதல் குரு 8ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும். வீண் விரயங்க ளும் உண்டாகும்.

கேட்டை

மிகவும் தைரியசாலியாகவும், கர்வம் மிக்கவராகவும் விளங்கும் கேட்டை அன்பர்களே! இந்த ஆண்டு நீங்கள் நன்மை தீமை கலந்தப் பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகளில் சிறப்பான நிலையிருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகி நெருக்கடிகளை ஏற்படுத்தும். கொடுக்கல் வாங்கலில் தொடக்கத்தில் சரளமான நிலையி ருந்தாலும் பின்பு நம்பியவர்களே துரோகம் செய்வா ர்கள். உத்தியோகஸ்தர்கள் வீண் பழிகளை சுமக்க வேண்டிய காலம் என்பதால் நிதானம் தேவை
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9,10,11 கல் - பவளம்
நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள் திசை - தெற்கு
கிழமை - செவ்வாய், வியாழன் தெய்வம் - முருகன்  

பரிகாரம்

ஏழரை சனியில் விரயசனி நடை பெறுவதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம். வரும் 28-05-2013 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் மாறுதலாகவிருப்பதால் வியாழக்கிழ மை தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றி வழிபடவும். உங்களால் முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்கு செய்வது நல்லது.

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.










Sunday, December 23, 2012

New Year Predictions 2013 _ துலா ராசி


2013 ஆண்டு பலன்கள் துலா ராசி




வாக்கு சாதுர்யமும் நேர்மையுடன் வாழும் சுபாவமும் கொண்ட துலா ராசி அன்பர்களே! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஜென்மராசி யி லேயே சனியும் ராகுவும் சஞ்சரிப்பதும் 7ல் கேதுவும் 8ல் குருவும் சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பாகும். இதனால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவி யிடையேயும் ஒற்றுமைக் குறைவு வரும். 28-05-2013 முதல் குருபகவான் ஜென்ம ராசிக்கு 9ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண வரவுகளிலிருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கைகூடும். புத்திரபாக்கியமும் அமையும். அசையும் அசையா சொத்துக்களாலும் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கம். ஆண்டின் தொடக்கத்தில் சில சோதனைகளை சந்தித்தாலும் பிற்பாதியில் உத்தி யோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெறமுடியும். தொழில் வியாபாரத்திலும் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் தேடிவரு ம்.

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டபடியேதானிருக்கும். சோம்பல்தனம் கைகால் மூட்டுகளில் வலி வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். மனைவி பிள்ளைகள் மற்றும் தாய் தந்தையாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. 

குடும்பம் பொருளாதாரநிலை

ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். என்றாலும் ஜூன் மாதம் முதல் குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிலவும். திருமண சுபகாரியங்களும் தடை விலகி நடைபெறும். பொருளாதார நிலையும் தேவைக்கேற்றபடியிரு க்கும். கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வதால் குடும்ப ஒற்றுமை குறை யாது.

 கொடுக்கல் வாங்கல்

மே மாதம்வரை குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8ம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் பணவிஷயங்களில் மிகவும் கவனமுடன் செய ல்படுவது நல்லது. ஜூன் மாதம் முதல் குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு கொடுக்கல் வாங்கலிலும் மேன்மையும் லாபமும் உண்டாகும்.

 தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தமான நிலை ஏற்பட்டாலும் கிடைக்கவேண்டிய லாபமும் வாய்ப்பும் கிடைக்கும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்ப தால் பிறர் விஷயங்களை தலையீடு செய்வதை தவிர்த்து அனைவரையும் அனுசரித்து செல்லது மூலம் லாபத்தை பெறமுடியும்.

 உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வு களும் ஊதிய உயர்வுகளும் முற்பாதியில் கிடைக்காவிட்டாலும் ஜூன் மாதத்திற்கு மேல் நல்லதொரு கௌரவமான நிலையினைப் பெறு வீர்கள். சில நேரங்களில் சிலர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்று தலைகுனியக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப் பதால் அலைச்சல்கள் குறையும்.

 அரசியல்வாதிகளுக்கு

மக்களின் செல்வாக்கினைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுக்கு உண்டாக கூடிய உடல் நிலை பாதிப்புகளே உங்களை எந்தவொரு செயலிலும் ஈடுபடாமல் தடுக்கம். ஜூன்மாதம் முதல் ஓரளவுக்கு எதிலும் திருப்தியான நிலையை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கட்சி பணிக்ளுக்காக நிறைய செலவுகள் செய்வீர்கள்.

விவசாயிகளுக்கு

விவசாயம் ஒரு தொடர் பணியாகும். அதற்கு தகுந்த வேலையாட்கள் கிடைக்கப் பெற்றால் மட்டும் அதை சரியாக செய்யமுடியும். உங்களுக்கு இந்த பிரச்சனைகள் அதிகரிப்பதால் குறுப்பிட்ட காலத்திற்குள் எதையும் முடிக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு பயிர் விளைச்சல் சற்று பாதிப்படையும்.

 பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமிது. கணவன் மனைவியிடையே உண்டாக கூடிய கருத்து வேறுபாடுகளால் நிம்மதியான உணவு உட்கொள்ளமுடியாத சூழ் நிலை உறக்கமின்மை போன்றவை உண்டாகும். ஜூன் மாதம் முதல் நிலமைபடிப்படியாக சரியாகும். சுபகா ரியங்களும் கைகூடும்.

படிப்பு

மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை உருவாகக்கூடிய காலம் என்றாலும். முயற்சி செய்த வால் முடியாதது ஒன்றுமில்லை. ஜென்மராசிக்கு 4,5க்கு அதிபதி சனி உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் கண்டிப்பாக கெடுக்கமாட்டார். உடன் பழகும் நண்ப ர்களிடம் மிகவும் கவனமுடன் பழகுவது நல்லது. தேவையற்ற நட்புகள் உங்கள் பாதையை மாற்றி விடும்.

 ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவறில் மாதம் முதல்; ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும்.

ஜனவரி

பிறரை எளிதில் மயங்கிடச் செய்யும் வசீகரத்தோற்றம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஜென்மசனி நடை பெறுகிறது. இதனால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. என்றாலும் மாத முற்பாதியில் சூரியன் 3ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும். முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி யிருக்கும். கொடுக்கல் வாங்கல் கவனம் தேவை. சனிபகவானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 21-01-2013 காலை 10.16 மணி முதல் 
23-01-2013 இரவு 9.56 மணிவரை

பெப்ரவரி

விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிவதில் ஆர்வம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனிராகுவும் 4ல் சூரியனும் 8ல் குருவும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும்  என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். திருமண சுபகாரிய முயற்சிகளிலும் தடைகள் ஏற்படும். அசை யும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்   17-02-2013 மாலை 05.28 மணிமுதல் 
       20-02-2013 அதிகாலை 05.03 மணிவரை

மார்ச்

மெல்லிய குரல் இருந்தாலும் திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்மராசிக்க 6ல் செவ்வாயும், மாதமுற்பாதியில் சூரியனும் சஞ்சரிப்ப தால் கடந்த கால பிரச்சனைகளிலிருந்து சற்றே விடுத லை உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடாதிருப்பது நல்லது. குடும்ப த்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும், ஒற்று மை குறையாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிக ளில் மட்டும் கவனம் செலுத்தினால் வீன்மன சஞ்சலங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். விஷ்ணுவை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 16-03-2013 இரவு 13.34 மணி முதல் 
19-03-2013 மதியம் 12.08 மணிவரை

ஏப்ரல்

நேர்மையற்ற குறிக்கோளாக கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனிராகு சஞ்சாரம் செய்தாலும் மாத முற்பகுதி வரை மட்டும் 6ம் வீட்டில் சூரியனும் செவ்வாயும். சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகள் சற்று விலகும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். உடல் ஆரோக் கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் பணிபுரிய முடியும். ராகு காலங்களில் துர்க்கை அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 13-04-2013 காலை 07.40 மணி முதல் 
15-04.2013 இரவு 08.13 மணிவரை

மே

முன்கோபமும் நீதியை நிலைநாட்ட வேண்டுமென்ற லட்சியமும் கொண்ட உங்களுக்கு 7ம் வீட்டில் குருவும் சூரியன் செவ்வாய் கேதுவும், 8ம் வீட்டில் குருவும் சஞ்சாரம் செய்வதால் நெரு ங்கியவர்களிடையே தேவையற்ற கருத்துவேறுபாடு ஏற்படும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டா கும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படுவதால் குடும்பத்தேவைகளை ப+ர்த்தி செய்யவே கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 10-05-2013 மதியம் 02.57 மணிமுதல் 
13-05-2013 அதிகாலை 02.19 மணிவரை

ஜூன்

வெற்றி தோல்வியை சமமாக ஏற்றுக ;கொள்ள கூடிய மனப்பக்குவமும் கொண்ட உங்க ளுக்கு சூரியன் செவ்வாய் 8ல் சஞ்சரிப்பதாலும் பாக்கிய ஸ்தானமான 9ல் குரு சஞ்சரிப்பதால் பணவர வுகளிலிருந்து நெருக்கடிகள் குறையும். ஆரோக்கிய பாதிப்புகளால் சிறுசிறு மருத்தவ செலவுகளும் உண்டாகும். தடைபட்ட திருமண சுபகாரியங்கள் யாவும் தடபுடலாக கைகூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகளும் விலகும். பொருளாதார உயர்வினால் கடன்களும் குறையும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். முருகப்பெருமானை வழி படவும்.
சந்திராஷ்டமம் 06-06-2013 இரவு 10.22 மணி முதல் 
09-06-2013 காலை 09.36 மணிவரை

ஜூலை
எந்த காரியத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபடும் உங்களுக்கு 9ல் சூரியன் செவ்வாய் குரு சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் அமையும். அரசு வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பா ர்க்கும் உயர்வுகள் கிட்டும். வேலைபளுவும் குறை யும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகளும் குறையும். கடன்கள் தீரும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 04-07-2013 அதிகாலை 05.51 மணி முதல் 06-07-2013 மாலை 05.02 மணி வரை 
31-07-2013 காலை 01.22 மணி முதல்
02-08-2013 இரவு 12.21 மணிவரை.

ஆகஸ்ட்

எப்பொழுதும் சந்தோஷமாகவே வாழ விரும்பும் உங்களுக்கு 9ல் குரு செவ்வாயும் 10ல் சூரியனும் சஞ்சரிப்பது உத்தியோக ரீதியாக உயர்வு களை உண்டாக்கும் அமைப்பாகும். சிலருக்கு எதிர்பா ர்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெறுவதால் குடும்ப த்தோடு சேருவீர்கள். பொருளாதார உயர்வுகளால் திருமணம் போன்ற சுபகாரியங்களும் நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களும் சேரும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். துர்க்கை யை வழிபடவும்.
சந்திராஷ்டமம 27-08-2013 இரவு 08.46 மணி முதல் 
30-08-2013 காலை 07.33 மணிவரை

செப்டம்பர்

தன்னை அழகுபடுத்திகொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசியில் சனிராகுவும், 7ல் கேதுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் 9ல் குருவும் 10ல் செவ்வாயும், 11ல் சூரியனும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்ப தால் எதிலும் திறம்படசெயல்பட்டு வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோக த்திலிருப்பவர்களுக்கு கௌரவமான பதவிகள் தேடி வரும் ஆஞ்சநேயரை வழிபடவும். 
சந்திராஷ்டமம் 24-09-2013 அதிகாலை 04.01 மணி முதல் 
26-09-2013 மதியம் 02.41 மணிவரை

அக்டோபர்

சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் உங்களுக்கு 9ல் குருவும் 10ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். 12ம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படும். பணவர வுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தே வைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கம் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பொன் பொருள் சேரும் சிவபெருமா னை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம 21-10-2013 காலை 11.21 மணி மதல் 
23-10-2013 இரவு 09.48 மணிவரை

நவம்பர்

எதிலும் சரியாக முடிவெடுக்கம் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 9ல் குருவும் 11ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நல்ல முன்னே ற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கலிலும் மேன்மை ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பலபெரிய மனிதர்களால் அணுகூலம் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும். சிவனை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம 17-11-2013 மாலை 06.45 மணி முதல்
20-11-2013 காலை 05.03 மணிவரை

டிசம்பர்

நீதி தவறுபவர்களை கண்டால் கோபம் கொள்ளும் உங்களுக்கு ஜென்ம ராசியில் சனிராகுவும் 12ல் செவ்வாயும் 2ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாககூடிய பாதிப்பு களால் மனநிம்மதி குறைவதோடு குடும்பத்திலும் கருத்துவேறுபாடுகள் அதிகரிக்கும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். பேச்சிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சிவன் முருகன் போன்ற தெய்வங்களை வழிபடவும்.

சந்திராஷ்டமம 15-12-2013 அதிகாலை 02.21 மணிமுதல் 
17-12-2013 மதியம் 12.23 மணிவரை

சித்திரை 3.4ம் பாதங்கள்

மனம் திறந்து வெளிப்படையாக பேசக்கூடிய சித்திரை அன்பர்களே! உங்கள் ஜென்மராசியிலேயே சனிராகு சஞ்சரிப்பதும் ஆண்டின் முற்பாதிவரை குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் சாதக மற்ற அமைப்பு என்பதால் இந்த ஆண்டின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடி யாது. ஜூன் மாதம் முதல் குரு 9ல் சஞ்சரிக்க விருப்ப தால் எதையும் சமாளித்து ஏறு நடைபோடுவீர்கள் பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகளும் தாராளமாக இருக்கும்.

சுவாதி

எடுக்கம் காரியம் யாவற்றிலும் வெற்றி பெறக்கூடிய சுவாதி அன்பர்களே ஆண்டின் தொடக்கமானது ஏற்றஇறக்கமான பலன்களையும் குடும்பத்தில் நிம்மதி குறைவையும், பொருளாதார நெருக்கடிகளையும் உண்டாக்கும் என்றாலும் ஜூன் மாதம் முதல் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். புத்திரபாக்கியமும் அமையும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.

விசாகம் 1.2.3ம் பாதங்கள்

பொது வாழ்வில் அதிக அக்கறை கொண்ட விசாக நேயர்களே! ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். ஜூன் மாதம் முதல் குரு 9ல் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் நினைத்த காரியங்களை நிறைவேற்றமுடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை ஏற்படும். கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். கடன்களும் குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பபை
எண் - 4.5.6.7.8 கல் - வைரம்
நிறம் - வெள்ள பச்சை திசை - தென் கிழக்கு  
கிழமை - வெள்ளி புதன்   தெய்வம் - லசஷ்மி

பரிகாரம்

ஜென்ம ராசியிலியே சனி பகவான் சஞ்சாரம் செய்வதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது. ஜென்ம ராசியில் ராகுவும் 7ல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் சர்பசாந்தி செய்வது துர்க்கைவழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம். 28-05-2013 வரை குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குருப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.


New Year Predictions 2013 _ கன்னி ராசி


2013 ஆண்டு பலன்கள் கன்னி ராசி



வாழ்க்கையின் கடமைகளிலிருந்தும் லட்சியங்க ளிலிருந்தும் தவறாமல் வாழவிரும்பும் கன்னி ராசி அன்பர்களே! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உங்கள் ஜென்ம ராசிக்கு 9ம் வீட்டில் ஆண்டு கோளான குருபகவான் வரும் 28-05-2013 வரை சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களும் கை கூடும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் லாபங்களைப் பெறுவீர்கள். 2ம் வீட்டில் ராகுவும் 8ல் கேதுவும் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. இதுமட்டுமன்றி ஏழரை சனியில் பாதசனி தொடருவதும் குடும்பத்தில் பிரச்சனைகளையும், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் அமைப்பாகும். வரும் 28-05-2013 முதல் குரு ஜீவனஸ்தானமான 10ம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் ஆண்டின் பிற்பகுதியில் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கடன் களும் ஏற்படும்.

தேக ஆரோக்கியம்

ஜென்ம ராசிக்கு 2ம் வீட்டில் சனிராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ள பெரியவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படுவதால் மன நிம்மதியும் குறைவடையும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டில் சனிராகுவும் 8ம் வீட்டில் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்க ளாலும் மனநிம்மதி குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். ஆண்டின் தொடக்கத்தில் குருபாக் கியஸ்தானமான 9ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கம். மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சி தரும்.

 கொடுக்கல் வாங்கல்

மே மாதம்வரை குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து கொடு க்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். கவனமுடன் செயல்படுவதும் பிறருக்கு வாக்குறுதிகள் முன் ஜாமீன் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.

 தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மே மாதம் வரை லாபங்கள் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். உங்களுக்கு ஏழரை சனி தொடருவதால் கூட்டாளிகளால் வீண் பிரச்சனை களை சந்திப்பீர்கள். தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும்.

 உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஆண்டின் தொடக்க த்தில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளுவையும் குறைத்துக் கொள்ளமுடியும். சிலநேரங்களில் சிலர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க நேரிடும்.

 அரசியல்வாதிகளுக்கு

மக்களின் ஆதரவைப் பெற அவர்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. உங்கள் பெயர் புகழுக்கு பங்கம் விளைவிக்க பலர் காத்திருப்பார்கள். பத்திரிகையாளர்கள் இளப்பும், வீண் வதந்திகளால் உங்கள் பதவிக்கே ஆபத்து வரும். உடனிருப்பவர்க ளிடம் கவனமாக பழகுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களும் குறையும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சுமாராகத தானிருக்கும். பட்டபாட்டிற்கான பலனை பெறமுடியும். கால் நடைக ளுக்கு உண்டாககூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். அரசு வழியில் சிறுசிறு ஆதாயங்கள் கிடைக்கும். அதிக உழைப்பினால் மருத்தவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

 பெண்களுக்கு

கணவன் மற்றம் உறவினர்களிடையே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். பேச்சில் நிதான த்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் மருத்துவ செலவுகளை குறைக்கலாம்.

படிப்பு

கல்வியில் அதிக கவனம் செலுத்தியாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக கூடிய கூ+ழ்நிலை ஏற்படும் காலமாகும். குடும்பத்தில் நடக்ககூடிய பிரச்ச னைகளை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளாமல் படிப்பில் ஈடுபாட்டை காட்டுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் வாழ்க்கைப் பாதையும் மாறிப்போகும் என்பதை மனதில் வைப்து நல்லது.

 ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ஷேர் போன்றவறில் ஆண்டின் முற்பகுதியில் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும்.

ஜனவரி

நல்ல ஞாபக சக்கியும், எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் சனி சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் பாதசனி நடைபெறுகிறது. இது சாதக மற்ற அமைப்பாகும். அதுமட்டுமன்றி சர்பகிரக ங்களான ராகு 2லும் கேது 8லும் சஞ்சரிக்கின்றனர். இதனால் குடும்பத்தில் நிம்மதி குறையும். உறவின ர்களிடையே கருத்து வேறுபாடும் ஏற்படும். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்;. உடல் ஆரோக்கியம் பாதிப் படையும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம் 18-01-2013 இரவு 11.48 மணி முதல் 
21-01-2013 காலை 10.16 மணிவரை

பெப்ரவரி

இயற்கை அழகை மெய்மறந்து ரசிக்கும் ஆர்வம் கொண்ட உங்களுக்கு 2ல் சனிராகு சஞ்ச ரிப்பது குடும்பத்தில் நிம்மதிக்குறைவை உண்டா க்கம் என்றாலும் 6ல் செவ்வாயும் 9ல் குருவும் சஞ்சரிப்பதால் எந்த பிரச்சனைகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். பணவர வுகள் சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்க ளும் சேரும். பூர்வீக வழியில் அணுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பான முன்னேற்றத்தை அடையும். துர்க்கை அம்மனை வழிப டவும்.
சந்திராஷ்டமம் 15-02-2013 காலை 07.09 மணி முதல்
  17-02-2013 மாலை 05.28 மணிவரை

மார்ச்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற ஒழுக்க நெறிகளை கொண்ட உங்களுக்கு 6ல் சூரியன், 9ல் குரு சஞ்சரிப்பது மூலம் எடுக்கும் முயற்சி களில் வெற்றிகள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைத் தடையின்றிப் பெற முடியும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகி ழ்ச்சியளிக்கம். பொன், பொருள் சேரும். வம்பு வழக்கு களில் தீர்ப்பு உங்களுக்கே சாதகமாக அமையும். பொருளாதார மேம்பாடுகளால் கொடுக்கல், வாங்க லும் சிறப்படையும். குடும்பத்திலுள்ளவர்களை அனு சரித்து செல்லவும்.
சந்திராஷ்டமம் 14-03-2013 மதியம் 02.40 மணி முதல் 
16-03-2013 இரவு 12.34 மணிவரை

ஏப்ரல்

எந்த விஷயத்திலும் பிறரை கலந்த ஆலோசித்து முடிவெடுக்கும் உங்களுக்கு 2ல் ராகுவும் 7ல் சூரியன் செவ்வாயும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் அதிகரிக்கும். நீங்கள் நல்லதே நிணைத்து செய்யும் காரியங்களிலும் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களும் நடை பெறும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்த ப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்தவ செலவுகளை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணி புரிபவர்களால் பிரச்சனை உண்டாகும். முருகப் பெருமானை வழிபடவும். 
சந்திராஷ்டமம் 10-04-2013 இரவு 09.53 மணி முதல் 
13-04-2013 காலை 07.40 மணிவரை

மே

தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் தாராள மனப்பான்மை கொண்ட உங்களுக்கு 8ம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்துவது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் அனுகூலங்களை அடைவீர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும் முருகனையும், சிவனையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் 08-05-2013 காலை மணி முதல் 
10-05-2013 மதியம் 02.57 மணி வரை

ஜூன்

எப்பொழுதும் குஷியாகவே வாழவிரும்பும் உங்களுக்கு 9ம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக முன்னே ற்றமும், பயணங்களால் அனுகூலமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும். பண வரவுகள் ஏற்றத்தாழ்வுடன் இருக்கும். என்பதால் ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பும், குடும்பத்திலு ள்ளவர்கிடையே ஒற்றுமை குறைவும் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. கொடு க்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் 04-06-2013 மதியம் 12.58 மணி முதல் 
06-06-2013 இரவு 10.22 மணி வரை

ஜூலை

பல விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள் விரும்பும் உங்களுக்கு இம்மாத முற்பகுதிவரை 10ல் சூரியன் செவ்வாயும் 11ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றலும், எதிலும் முன்னேறற்றமடையக் கூடிய அளவிற்கு லாபம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்திலும் நிம்மதியான நிலையே இருக்கம். கடன்கள் குறையும்
சந்திராஷ்டமம்   01-07-2013 இரவு 08.44 மணி முதல் 
                 04-07-2013 அதிகாலை 05.51 மணி வரை.      
                          29-07-2013 அதிகாலை 04.26 மணி முதல்        
                      31-07-2013 காலை 01.22 மணி வரை

ஆகஸ்ட்
எவ்வளவு அவசரமானதாக இருந்தாலும் பிறரின் நலம் கருதி செயல்படும் உங்களுக்கு, 10ல் செவ்வாயும் 11ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை ஏற்றமளிப்பதாகவே அமையும். தொழில் வியாபார ரீதியாக எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். அரச வழியிலும் நற்பலன்கள் உண்டா கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடாதிருந்தால் விரயமின்றி சமாளிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. சனிக்குரியபரிகா ரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம 25-08-2013 மதியம் 12.06  மணிமுதல் 
27-08-2013 இரவு 08.46 மணிவரை

செப்டம்பர்

சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றிய மைத்துக்கொள்ளும் உங்களுக்க 2ல் சனி   ராகு சஞ்சரித்தாலும் லாபஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்ப தால் எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு முன்னேற்ற மடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று நெருக்கடியான காலம் என்பதால் உயரதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணவர வுகள் சுமாராகத்தானிருக்கும். முடிந்தவரை ஆடம் பர செலவுகளை செய்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை சிவபெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 21-09-2013 மாலை 07.41 மணிமுதல் 
24-09-2013 அதிகாலை 04.01 மணிவரை.

அக்டோபர்

பேச்சிலும் செயலிலும் பிறர் மனதை புண்ப டுத்தி விரும்பாத உங்களுக்கு ஜென்ம ராசியியில் சூரியனும், 2ல் சனிராகுவும் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவதும், முன்னேற்றத் ;தைக் குறைப்பதும் நல்லது. பணவரவுகளில் நெருக்க டிகள் இருக்காது. தொழில் வியாபாரம் செய்ப வர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்தாலும் பெரிய முத லீடுகளை ஈடுபடாதிருப்பது நல்லது. உத்தியோக ஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் தாமத நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கம். தட்சிணாமூர்த்தியை வழி படவும்.
சந்திராஷ்டமம் 19-10-2013 அதிகாலை 03.14 மணிமுதல் 
21-10-2013 காலை 11.21 மணிவரை

நவம்பர்

வாழ்க்கையின் லட்சியங்களிலிருந்து தவறாத உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன் சனிராகுவும் 12ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். நெருங்கியவர்களிடமும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். குடும்பத் திலுள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்கள் துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் நெருக்கடிகள் நிலவும். குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம 15-11-2013 காலை 10.58 மணிமுதல் 
17-11-2013 மாலை 06.45 மணிவரை

டிசம்பர்

காலத்தை வீணடிக்காமல் செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாயும் 2ல் சனிராகுவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஜென்ம ராசிக்கு 3ல் மாத முற்பகுதியில் சூரியன் சஞ்சரிப்பதால் நிலமையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். முன்கோபத்தால் தேவையற்ற விரோத ங்களை சந்திக்க வேண்டிய காலம் என்பதால் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கடன்களும் அதிகரிக்கும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 12-12-2013 மதியம் 06.46 மணிமுதல் 
15-12-2013 அதிகாலை 02.21 மணிவரை

உத்திரம் 2,3,4ம் பாதங்கள்

நன்றி மறவாத நல்ல குணம் உத்திர அன்பர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சனி ராகுவும் 8ல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். என்றாலும் ஆடம்பரமாக செலவுகள் செய்வதை குறைக்குத் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்கள் முற்பாதியில் கைகூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது மிகவும் நல்லது.

அத்தம்

மற்றவருக்கு உதவி செய்ய கூடிய பண்பு கொண்ட அத்த அன்பர்களே! உங்களுக்கு ஏழரை சனியில் குடும்ப சனி நடைபெறுவதால் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் வீண் விரயத்தையும், பிரச்சனை களையும் ஏற்படுத்துவார்கள். பணவரவுகள் தேவை க்கேற்றபடி இருக்கம். பொன், பொருள் சேரும். கொடு க்கல், வாங்கலில் மட்டும் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுக்காமலிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும்.

சித்திரை 1,2,3ம் பாதங்கள்

ஆடை அணிகலங்கள் அதிக ஆர்வம் கொண்ட சித்திரைநேயர்களே! ஆண்டின் முற் பகுதியில் குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். என்றாலும் ஏழரை சனி நடைபெறுவதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும் உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளாலும் நிம்மதி குறையும். எதிலும் சிந்தித்து கவனமுடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பபை
எண் - 4,5,6,7,8 கல் - மரகத பச்சை  
நிறம் - பச்சை, நீலம் திசை - வடக்கு 
கிழமை - புதன், சனி தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

பரிகாரம்
ஏழரை சனியில் பாத சனிதொடருவதால் சனிக்கிழமை தோறும் சனிக்கு பரிகாரம் செய்வது, ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. ஜென்ம ராசிக்கு 2ல் ராகுவும் 8ல் கேதுவும் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற் கொள்வது நல்லது. 28-05-2013 முதல் குரு 10ல் சந்திப்பதால் குருப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நன்மையளிக்கும்.

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.




Friday, December 21, 2012

2013 ஆண்டு பலன்கள் சிம்ம ராசி



2013 ஆண்டு பலன்கள் சிம்ம ராசி

எந்த காரணத்திற்காகவும் நீதி நேர்மையிலிருந்து தவறாமல் வாழக்கூடிய பண்பு கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் ஜென்ம ராசிக்கு 3ம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற முடியும். குரு 10ல் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றாலும் 
28-05-203 முதல் குரு லாபஸ்தானமான 11ம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதையும் எதிர்கொண்டு லாபத்தையும், முன்னேற்றத்தையும் பெறுவீர்கள். குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கம். திருமண சுபகாரியங்களும் தடபுடலாக நடைபெற்று மகிழ்ச்சி தரும். புத்திர வழியிலும் பூரிப்பு உண்டா கும். கடன்கள் குறைவதோடு கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். வீடு மணை, வண்டி வாகன ங்கள் பொன் பொருள் போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். விலகிச் சென்ற உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும் உத்தியோகஸ்தர்கள் எதிர்பா ர்த்த கௌரவ பதவிகளையும், இடமாற்றங்களையும் பெற்று மகிழ்வார்கள். சேமிப்புகள் பெருகும்.

 குடும்பம் பொருளாதாரநிலை

சனி ராகு 3ம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் ஜூன் மாதம் முதல் குரு லாபஸ்தானமான 11ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும் இந்த ஆண்டு உங்களுக்கு பொற்காலமாக அமையும். தடைபட்டு கொண்டிருக் கும் திருமண சுபகாரியங்களும் ஆண்டின் பிற்பா தியில் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். குழந்தை பாக் கியமும் தடையின்றி அமையும். அசையும் அசையா சொத்துக்களையும் தடையின்றி வாங்கி சேர்ப்பீர்கள். பொருளாதார நிலை உயர்வடையும்.

 தேக ஆரோக்கியம்

உங்களின் தேக ஆரோக்கியம் மிக சிற ப்பாக அமையும். நீண்ட நாட்களாக எடுத்து கொண்டி ருக்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கம் ஒரு தீர்வு உண் டாகும். மனைவி பிள்ளைகளாலும், பெற்றோராலும் இருந்து வரும் மருந்து, மருத்துவ செலவுகளும் குறையும். அனைவரின் அன்பும் ஆதரவும் மன நிறைவாகவும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும்.


கொடுக்கல் வாங்கல்

கிரக நிலைகளின் சாதகமான சஞ்சா ரத்தால் பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் கொடுக்கல் வாங்கலும் சிறப்பாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பையும் நட்பையும் பெறு வீர்கள். இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்பு களும், வம்பு வழக்குகளும் மறையும்.

 தொழில் வியாபாரிகளுக்கு

நினைத்ததெல்லாம் நிறைவேறும். கூட்டா ளிகளாலும், வேலையாட்களாலும் சிறப்பான லாப ங்களையும் அனுகூலத்தையும் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய நிறுவனங்களையும் நிறுவமுடியும். சிறிய முதலீடுகளிலும் பெரிய லாப த்தையும் பெறுவீர்கள். வெளிய+ர், வெளிநாட்டு தொட ர்புடைய வாய்ப்புகளும் தேடிவரும்.

 உத்தியோகஸ்தர்களுக்கு

எதிர்பாராத பதவி உயர்வுகளும். ஊதிய உயர்வுகளும் தடையின்றியிருக்கும். சிலருக்கு எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் யாவும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவீர்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்பியவரின் விருப்பமும் நிறைவேறும். அரசு வழியில் அனுகூலங்கள் தேடி வரும். புதிய வேலை வாய்ப்பும் தகுதிக்கேற்றபடி கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு

பெயரும், புகழும் உயர்வடையுக் கூடிய காலமாகும். மக்களின் செல்வாக்கினால் புகழின் உச்சிக்கே செல்வீர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றி விடக் கூடிய ஆற்றலும் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி வெளியூர் வெளிநாடுகளுக்கும் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும். மாண்புமிகு பதவிகளும் தேடிவந்து மகிழ்ச்சியளிக்கும்.

 விவாசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் மிக சிறப்பாக இருக்கும். மற்றவர்களின் ஆதரவும் மேலும் உற்சாகத்தை கொடுப்பதால் நவீன முறைகளை கையாண்டு மேலும் உற்பத்தியை பெருக்குவீர்கள். அதற்காக அரசு வழியில் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். புதிய நிலம், பூமி போன்றவற்றையும் வாங்கி போடுவீர்கள்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமணம் பிற்பகுதியில் நல்ல வரன்கள் தேடிவரும். புத்திரபாக்கியமும் சிறப்பாக அமையும். பொன், பொ ருள் சேரும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உயர்பதவிகளும் தேடி வரும்.

படிப்பு

கல்வியில் இதுவரை இருந்து வந்த தடைகள் யாவும் விலகி கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேன்மையான மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். அரசு வழியில் நல்ல உதவிகள் கிடைக்கப்பெறும். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளை தட்டி செல்வீர்கள்

 ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றால் சிறப் பான லாபங்கள் பெற்று வாழ்வில் உயர்வடைவீர்கள்.

ஜனவரி

விடாமுயற்சியால் பல சாதனைகள் செய்யும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் சனிராகுவும், 6ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனை த்திலும் வெற்றிகிட்டும். செய்யும் தொழில் வியாபா ரத்திலும் நல்ல லாபத்தினைப் பெறமுடியும். புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். உத்தியோக ஸ்தர்கள் நிலையும் உயர்வடையும். பயணங்களாலும் அனு கூலம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்ம ந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும் பண வரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 16-01-2013 மதியம் 03.38 முதல் 
     18-01-2013 இரவு 11.48 மணிவரை

பெப்ரவரி

யார் எதை சொன்னாலும் அதை கருத்தில் கொள்ளாது முன்னேறும் உங்களுக்கு 3ல் சனி ராகுவும், 6ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது அற்பு தமான அமைப்பாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எந்தவித எதிர்ப்புக்களையும் சமாளித்து வெற்றிபெறுவீர்கள் குடும்பத்தில் ஒற்றமையும், சுபீட்ச மும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தி த்து செயல்படவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபங்கள் சிறப்பாக அமையும். வெளியூர் வெளி நாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடிவரும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான உயர் பதவிக ளைப் பெறுவார்கள் தட்சிணா மூர்த்தியை வழிப டவும்.
சந்திராஷ்டமம் 12-02-2013 இரவு 11.27 மணி முதல் 
     15-02-2013 காலை 07.09 மணி வரை.

மார்ச்

வீரம் நிறைந்திருந்தாலும், அமைதியுடன் தோற்றமளிக்கம் உங்களுக்கு 3ல் சனிராகு சஞ்சரி த்தாலும், 7ல் சூரியனும், 8ல் செவ்வாயும் சஞ்சரி ப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். நெருங்கியவர்க ளிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கொடுக்கும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் சரளமாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம் 12-03-2013 காலை 06.47 முதல் 
     14-03-2013 மதியம் 02.40 மணி வரை

ஏப்ரல்

வீண் வம்புக்கு போகாமலும், வந்த சண்டையை விடாமலும் வாழும் உங்களுக்கு 3ல் சஞ்சரிக்கும் குரு வக்கிரகதியிலிருப்பதாலும் மாத முற்பகுதியில் சூரியன் செவ்வாய் 8ம் வீட்டில் இருப்ப தாலும் பணவிஷயங்களில் கவனமுடன் செயல்ப டுவதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் உண்டாகும். என்றாலும் மாத முற்ப குதியில் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும். 
சந்திராஷ்டமம்  08-04-2013 மதியம் 02.36 மணிமுதல் 
      10-04-2013 இரவு 09.53 மணிவரை

மே

மற்றவர்ளை எளிதில் எடைப்போடக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு சனி பகவான் வக்ரகதியிலிருந்தாலும் 9ல் சூரியனும், செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் பயணங்களால் அணு கூல ங்களைப் பெறுவீர்கள். ஆசையும் அசையா சொத்து க்களால் ஓரளவுக்கு லாபங்கள் உண்டாகும். பணவர வுகளும் தேவைக்கேற்றபடியிருக்கும். திருமண சுபகா ரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறை வேறும். குடும்பத்திலும் சுபாட்சமான நிலையிருக்கம் உற்றார்,உறவி னர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சிய ளிக்கும். தொழில் வியாபாரத்திலும் லாபங்கள் அமை யும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம் 05-05-2013 இரவு 10.08 மணி முதல் 
     08-05-2013 காலை 05-16 மணி வரை

ஜூன்

நீதி நேர்மைக்கு அடிபணிந்து நடக்கும் பண்பு கொண்ட உங்களுக்கு 10ம் வீட்டில் சூரியன் செவ்வாயும் லாப ஸ்தானமான 11ல் குருபகவானும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். பணவரவுகளிலிருந்து தடைகள் அனைத்தும் விலகி தாராள தனவரவினைக் கொடுக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைபட்ட திருமண சுபகாரியங்களும் தடபுடலாக நிறைவேறும். பொன் பொருள் சேரும். கடன்களும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபத்தினையும் பெறமுடியும். சேமிப்புகள் பெருகும். தினமும் விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 02-06-2013 காலை 05.59 முதல் 
04-06-2013 மதியம் 12.58 மணி வரை 
29-06-2013 மதியம் 02.02 மணி மதல் 
01-07-2013 இரவு 08.44 மணி வரை.

ஜூலை

உயர்ந்த எண்ணங்களையும், லட்சிய ங்களையும் கொண்ட உங்களுக்கு 11ல் சூரியன் செவ்வாய், குருவும் சஞ்சரிப்பதும், 3ம் வீட்டில் சனிராகு சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பாகும். எடுக்கம் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் ப+ர்த்தியாகும் குடும்பத்தில் சுபீட்சமான நிலையிருக்கும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கி சேர்ப்பீர்கள் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உத்தியோ கஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை பெறுவர். சிவனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்  26-07-2013 இரவு 10.02 மணி முதல் 
      29-07-2013 அதிகாலை 04.26 மணி வரை.

ஆகஸ்ட்

முன்கோபமிருந்தாலும் பெருந்தன்மை யான குணம் கொண்ட உங்களுக்கு 3ம் வீட்டில் சனிராகுவும், லாபஸ்தானத்தில் குரு செவ்வாயும் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பேயாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடும் பொருளாதார மேம்பா டுகளால் சொந்தவீடுமனை, மற்றும் வண்டி வாகனங்களை வாங்குவீர்கள் தொழில் வியாபாரத்தில் வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் மூலம் லாபம் பெருகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி அபிவிரு த்தியையும் பெருக்குவீர்கள். சிவனை வழி படவும். 
சந்திராஷ்டமம் 23-08-2013 அதிகாலை 02.28 மணிமுதல்        25-08-2013 மதியம் 12.06 மணிவரை

செப்டம்பர்
தனக்கு இடையூறு செய்பவர்களை வே ரோடு களையும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியனும் 12ல் செவ்வாயும் சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். என்றாலும் 3ல் சனிராகுவும் 11ல் குருவும் இருப்பதால் எதையும் சமாளிப்பார்கள் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுக ளுக்குப் பஞ்சம் ஏற்படாது. சேமிப்புகளும் பெருகும். முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 19-09-2013 மதியம் 01.45 மணி முதல் 
     21-09-2013 மாலை 07.41 மணிவரை

அக்டோபர்

வாழ்க்கையில் எவ்வித இடையூறுகள் ஏற்பட்டாலும் அதை மகிழ்ச்சியுடன் தாங்கும் உங்க ளுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரித்தாலும், 3ல் சனி ராகுவும், 11ல் குருவும் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். முன் கோபத்தால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகா ரியங்களும் கைகூடும். பொன் பொருள் சேரும் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டா கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் வெளிவட்டாரத் தொடர்பும் மகிழ்;ச்சியளிக்கும். முருகப் பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்   16-10-2013 இரவு 09.32 மணிமுதல் 
       19-10-2013 அதிகாலை 03.14 மணிவரை

நவம்பர்

வாக்கு சாதுர்யமும், ராஜதந்திரமும் கொ ண்ட உங்களுக்கு 3ல் சனிராகுவும், சூரியனும், 11ல் குருவும் சஞ்சாரம் செய்வதால், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபத்தினையும் வெற்றியையும் பெறமுடியும். செய்யும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் உயர்வுகளும் கிடைக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சிதர கூடிய சம்பவங்கள் நடை பெறும். செல்வம், செல்வாக்கு சேரும். கொடுக்கல் வாங்கலிலும் லாபம் கிட்டும். கொடுத்த கடன்களும் திருப்திதரமாக வசூலாகும். பயணங்களால் அனு கூலம் ஏற்படும். விஷ்ணுவை வழிபடவும்.
சந்திராஷ்டமம்     13-11-2013 காலை 05.29 மணிமுதல் 
15-11-2013 காலை 10.58 மணிவரை

டிசம்பர்

மற்றவர்களுக்கு ஒருபோதும் அடிபணிய விரும்பாத உங்களுக்கு ஜென்மராசிக்கு 2ல் செவ்வாயும் 4ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களும் ஏற்படும் உற்றார், உறவினர்களிடம் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 10-12-2013 மதியம் 01.31 மணிமுதல் 
12-12-2013 மதியம் 06.46 மணிவரை.

மகம்

யாருக்கும் அடிமை தொழில் செய்ய விரும்பாத மக நட்சத்திர அன்பர்களே இந்த ஆண்டு நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். சனி ராகு 3ம் வீட்டில்  சஞ்சாரம் செய்வதால் எடுக்கம் முயற்சிகள் அனைத் திலும் வெற்றி கிட்டும். திருமணவயதை அடைந்த வர்களுக்கு ஆண்டின் பிற்பகுதியில் நல்ல வரன்கள் தேடிவரும். கொடுக்கல் வாங்கலும் மேன்மை யளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகள்  கிடைக்கப்பெறும். கடன்கள் குறையும்.

பூரம்

சுகவாழ்வையும், சொகுசுவாழ்வையும் அதிகம் விரும்பும் பூர நேயர்களே உங்களுக்கு பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்து க்களையும் வாங்கி சேர்ப்பீர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி சுபீட்சம் யாவும் உண்டாகும். பகையாளியாக இருந்த வர்களும், உறவாட தேடி வருவார்கள். உத்தியோக த்திலிப்பவர்களுக்கும் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெறும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்து ழைப்புகளால் வேலைபளுவும் குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் சிறப்பான அனுகூலத்தை பெறமுடியும். சேமிப்பும் பெருகும்.

உத்திரம்-1-ம் பாதம்

எல்லா கலைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட க்கூடிய சித்திரை ராசி நேயர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 3ம் வீட்டில் சனிராகு சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இது மட்டு மின்றி வரும் ஜூன் மாதம் முதல் குரு பகவானும் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் எண்ணிய எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றிவிடக் கூடிய ஆற்ற லைப் பெறுவீர்கள். அசையும் அசையா சொத்து க்களையும் வாங்க முடியும். பொன்னும், பொருளும் சேரும். கொடுக்கல், வாங்கலிலும் சிறப்பான லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பபை
எண் - 1,2,3,9,10,11,12,18 கல் - மாணிக்கம்
நிறம் - வெள்ளை, சிவப்பும் திசை - கிழக்கு 
கிழமை - ஞாயிறு, திங்கள் தெய்வம் - சிவன்

 பரிகாரம்
ஜென்ம ராசிக்கு 10ல் வரும் 28-05-2013 வரை குருபகவான் சஞ்சாரம் செய்வதால் குரு வுக்குரிய பரிகாரங்களை செய்வது, வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி மஞ்சள் நிற வஸ்திரத்தையும், கொண்டை கடலை மாவையும் சாத்தி வழிபடுவது உத்தமம்.
please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.