Showing posts with label Planets. Show all posts
Showing posts with label Planets. Show all posts

Wednesday, January 4, 2012

நவ கிரகங்களில் கேதுவும் பரிகாரமும்

செம்பாம்பு, ஞானகாரகன், மோட்ச காரகன் என கேதுவை அழைக்கிறோம். கேதுவும் ராகுவைப் போலவே இடமிருந்து வலப்புறம் சஞ்சரிக்கிறார். கேதுவுக்கும் வக்ரமோ, அஸ்தங்கமோ கிடையாது. மோட்ச காரகனாகிய கேது 12 ம் வீட்டில் அமையப் பெற்றால் மறுபிறவி இல்லை எனக் கூறப்படுகிறது. கேது ஒரு ராசியை கடக்க ஒன்றரை வருடம் எடுத்துக் கொள்கிறார். சரியாக ஒரு பாதம் கடந்து செல்ல 2 மாதம் ஆகிறது.
கேதுவிற்கு சொந்த வீடு கிடையாது. எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த கிரகத்தின் பலனை ஏற்படுத்துவார். கேதுவின் நட்சத்திரங்கள் அஸ்வினி, மகம், மூலம், திசா ஆண்டுகள் 7.

சூனியம், கஷ்டம், ஏமாற்று வேலைகள், தற்கொலை எண்ணம், தெய்வீகம் ஞானம், மோட்சம், பிராமணர் ஜீரம், மாயவித்தைகள், முக்தி நிலை, தொழிலாளர் உறவு, எதிரிக்கு தொல்லை, சுபிட்ச வாழ்வு, கொலை செய்தல், மந்திரம் செய்தல், கடுமையான பேச்சு, டாக்டர், மருந்து கடை தொழில், ஞானிகள், புனிதப் பயணம்  அனைத்து செல்வங்கள் சேரும் நிலை போன்றவற்றிற்கு கேது காரகம் வகிக்கிறார்.

அதுபோல குடலில் பூச்சிகள், காய்ச்சல், செவிடு, குறைந்த ரத்த அழுத்த நோய்கள், ஊமை, குஷ்டம்,  இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவு, பூசாரி மற்றும் பிராமணர்களால் தொல்லை -ஏற்படும். கேது தான் இருக்கும் இடத்திலிருந்து 7ம் வீட்டை பார்வை செய்கிறார். 3,10 போன்ற வீடுகளுக்கு கேது பார்வை உண்டு என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. கேதுவின் அதி தேவன் பிரம்மன், தேவதை இந்திரன், பாலினம் அலி, திசை வடகிழக்கு, குணம் தாமசம், தானியம் கொள்ளு, மலர்கள் செவ்வல்லி, ரத்தினம், வைடூரியம், நிறம் சிவப்பு, சமித்து தர்வை புல், வாகனம் சிங்கம், ஆடை பால வண்ணம்.

கேந்திரத்தில் கேது அமைவது நற்பலனே.  கேது சனி, செவ்வாயைவிட முதல் பாவ கிரகமாக கருதப்படுகிறது. கேது 1,4,7,10 போன்ற இடங்களில் இருப்பது நற்பலனே. 2,7,8,12 ல் இருப்பது நற்பலன் என்று கூறமுடியாது. 11ம் வீட்டில் அமையப் பெற்றால் விதவைப் பெண் மூலம் பெரும் யோகம் உண்டாகும். கேது 9,10,11 ம் வீடுகளில் இருந்தால் டாக்டருக்கு படிக்கும் யோகம் உண்டாகும். புத்திர ஸ்தானமான 5 ல் கேது இருந்தால் புத்திர தோஷம் உண்டாகிறது.

கேதுவால் உண்டாகும் யோகங்கள், கால சர்ப யோகம், கோடீஸ்வர யோகம்.

காலசர்ப யோகம்,

ஜெனன ஜாதகத்தில் ராகு கேதுவுக்கு இடையில் எல்லா கிரகங்களும் அடைபட்டிருப்பது கால சர்ப யோகமாகும். இந்த யோகம் பெற்றவருக்கு வாழ்க்கையில் தாமதமாகத்தான் முன்னேற்றம் உண்டாகிறது.

கோடீஸ்வர யோகம்,

கேதுவும் குருவும் சேர்க்கை பெற்றிருந்தாலும், கேதுவுக்கு குரு பார்வை இருந்தாலும் கோடீஸ்வர யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத அதிர்ஷ்டம், பெரிய மனிதர்களின் தொடர்பு, ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு போன்ற நற்பலன்கள் உண்டாகின்றன.
கேதுவுக்குரிய ஸ்தலம்

கீழப்பெரும் பள்ளம்,

வாணகிரி என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் கேது பகவான் கூப்பிய கரங்களுடன் சிவன் நாகநாத சுவாமியை வணங்கும் விதமாக அமைந்துள்ளார். கேதுவால் பாதிக்கப்பட்டோர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்வது உத்தமம். இத்தலம் திருவெண்காட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

கேதுவை வழிபடும் முறைகள்,

தினமும் விநாயகரை வழிபடுவது,

பிற கேது மந்திரங்களையும் கூறுவது,

 ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை 40 நாட்களில் 7000 தடவை கூறிவருவது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது.

9 முக ருத்ராட்சம் அணியவும். சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது.
வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது,

கருப்பு எள், வண்ண மயமான போர்வை, வெள்ளி புள்ளிகள் உடைய பழுப்பு நிற பசுநாய் போன்றவற்றை  ஏழை மனிதனுக்கு தானம் தருவது.
வைடூரிய கல்லை மோதிரத்தில் பதித்து அணிவது.



நவகிரகங்களுக்கு அவற்றிற்குரிய ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு தரும் என்ற வழிபாட்டு முறையும் வழக்கத்தில் உள்ளது.

சூரியன்  சூரியனார் கோவில்

சந்திரன்  திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம்

செவ்வாய்  பழனி முருகன் ஆலயம் (திருஆவினன்குடி)

புதன்  மதுரை மீனாட்சி சொக்கநாதனர் ஆலயம்


குரு   திருச்செந்தூர் முருகப் பெருமாள்

சுக்கிரன் ஸ்ரீரெங்கநாதன் ஆலயம்

சனி   திருநள்ளாறு

ராகு கேது  கால ஹஸ்தி சிவன் கோவில்


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001 

நவ கிரகங்களில் சுக்கிரனும் பரிகாரமும்


ஒருவர் சுகமான வாழ்க்கை வாழ்வதைக் கண்டாலும், எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வந்தாலும், யாரையாவது காதலித்தாலும் அவனுக்கென்ன சுக்கிரன் உச்சத்தில் உள்ளான் என்றும், சுக்கிர திசை நடக்குதோ என்னவோ என்றும் கூறுவது உண்டு. இவ்வுலகில் உள்ள சகல இன்பங்களையும் ஒருவர்அனுபவிக்க வேண்டுமேயானால் அவருக்கு சுக்கிரன் பலமாக அமைந்திருப்பது மிகவும் அவசியமாகும். சுக்கிரன் பலமாக இருந்தால் மட்டுமே அவருக்கு சொகுசான வாழ்க்கை அமையும். அசுர குரு, களத்திர காரகன், சுக காரகன், வண்டிவாகன காரகன் என பல பெயர்களும் சுக்கிரனுக்கு உண்டு. சுக்கிரன் காதலையும், காமத்தையும் உண்டாக்குவதில் முக்கியமான பங்கை வகிக்கிறார். சுக்கிரன் பலமின்றி அமைந்துவிட்டால் இவ்வாழ்வில் சோதனை, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்பு, முன்னேற்றத் தடைகள் என எல்லாவகையிலும் அசுப பலனையே சந்திக்க நேரிடுகிறது. எனவே இவ்வுலகில் உள்ள அனைத்து இன்ப சுகவாழ்விற்கும் வித்தானவராக சுக்கிரன் கருதப்படுகுறார்.

சுக்கிரனின் உச்ச வீடு மீனம், நீச வீடு கன்னி, பகை வீடுகள் கடகம், சிம்மம். ஆட்சி வீடுகள் ரிஷபம், துலாம், நட்பு வீடுகள் மகரம் கும்பம் ஆகும். சுக்கிர திசை 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரனுக்கு நட்பு கிரகங்கள் புதன், சனி, ராகு, கேது சம கிரகங்கள் செவ்வாய், குரு, பகை கிரகங்கள் சூரியன், சந்திரன் ஆகும். சுக்கிரன், பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதியாவார். சுக்கிரனின் திசை தென்கிழக்கு, சுவை இனிப்பு, கிழமை வெள்ளி, தெய்வம் சுகீர்த்தி.

சுக்கிரனின் காரகத்துவங்கள்,

சுக்கிரன் களத்திரம், செல்வம், வாகனம், ஆடை ஆபரணங்கள் காமம், வாசனை பொருட்கள், கட்டில், மெத்தை, கவிதை, விவாகம், கப்பல் வியாபாரம், ஹோட்டல், பால் தயிர் மீது பிரியம், பாக்குமரம், மந்திரித்துவம், மற்ற பெண்களின் சேர்க்கை, உடல் உறவு, சுருண்ட தலைமுடி போன்றவற்றிற்கு காரகனாகிறார். சிற்றின்ப நோய்கள், சர்க்கரை வியாதி, சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் நோய், ராஜ பிளவை, வீரியமின்மை, ஆண், பெண் குறியில் ஏற்படக்கூடிய நோய்கள் போன்றவற்றிற்கும் சுக்கிரன் காரகனாகிறார். முல்லை மலர், வெண்தாமரை, பனி போன்ற வெண்மையான நிறத்தை கொண்டவர் சுக்கிரனாவார்.

சுக்கிரன் மீன ராசியில் 27 பாகையில் உச்சம் பெறுகிறார். கன்னியா ராசியில் 27 பாகையில் நீசம் பெறுகிறார். சுக்கிரன் ஒரு ராசியை விட்டு கடந்து செல்ல 1 மாதம் ஆகியறது.

சுக்கிரன் தான் நின்ற இடத்திலிருந்து 7ம் வீட்டை பார்வை செய்கிறார். சுக்கிரனின் பார்வை ஏற்றமிகுப் பலன்களை உண்டாக்கும்.

களத்திர காரகனாகிய சுக்கிரனை சனி பார்வை செய்தால் குடும்பத்தில் ஓற்றுமை குறையும். சுக்கிரனும் குருவும் இணைந்து 8 ல் அமைந்தால் கணவன், மனைவி இருவருக்கும் ஒற்றுமை குறைவு உண்டாகி பிரிய நேரிடும். சுக்கிரனும் 7ம் வீட்டாதிபதியும் அசுபகிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்றால் களத்திர தோஷம் உண்டாகிறது. இது மட்டுமின்றி சுக்கிரனுக்கு இருபுறமும் அசுபர்கள் அமைவதும் களத்திர தோஷமாகும்.

அசுபர்களுக்கு குருவாக இருக்கக்கூடிய சுக்கிரன் குருவுக்கு அடுத்தப்படியான சுபகிரகமாவார். இவர் ஜெனன ஜாதகத்தில் கேந்திராதிபதியாகி திரிகோணத்தில் இருந்தாலும், திரிகோணாதிபதியாகி கேந்திரத்தில் இருந்தாலும் சுபயோகத்தை அள்ளித் தருவார். சுக்கிரன் விபரீத ராஜயோகம் பெற்றால் சினிமா, டிராமா, கூத்து, நடனம், சங்கீதம், அரசியல், பெண்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

சுக்கிரன் ஒரு ராசியில் சஞ்சரிக்கும்போது 10 பாகை முதல் 20 முடிய சஞ்சரிக்கும் காலத்தில்  நற்பலன்கள் உண்டாகின்றன.

சுக்கிரனால் ஏற்படக் கூடிய யோகங்கள்

மாளவியா யோகம், லட்சுமி யோகம், பிருகு மங்கள யோகம்

மாளவியா யோகம்,
சுக்கிரன் ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரம் பெறுவது. இதனால் நீண்ட ஆயுள், வீடு, மனை, பூமி சேர்க்கை குடும்பத்திற்கு  தேவையான அதிநவீன பொருட்களின் சேர்க்கை, செல்வம், செல்வாக்கு  சேரும் நிலை, சந்தோஷமான வாழ்க்கை போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

லட்சுமியோகம்,

சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியோ, உச்சமோ பெற்று சஞ்சரிக்கும்போது உண்டாவது. இதனால்  புகழ் பெருமை செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய யோகம் உண்டாகும்.

பிருகு மங்கள யோகம்,


சுக்கிரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அமையப் பெறுவது. இதனால் வீட்டு மனை, வண்டி, வாகனம், ஆடை, ஆபரணம் போன்ற யாவும் சேரும்.

சுக்கிர ஓரையில் செய்யக்கூடியவை,

எல்லா நல்ல காரியங்களையும் செய்யலாம். பெண் பார்த்தல், நகைகள் வாங்குதல், வீடு, மனை வாங்குதல், வாகனம் வாங்குதல், விருந்துண்ணல் திருமணம் பற்றி பேசுதல், சினிமா மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல், மனைவி, உற்றார் உறவினர்களோடு இனிமையாக கலந்துரையாடல்,உடல் உறவு  ஆகியவற்றை சுக்கிர ஓரையில் செய்வது நல்லது.

கலைத்துறையில் நிலையான புகழைப் பெற சுக்கிரன் ஆட்சி பெற்று, உச்சம் பெறுவதும், குரு பார்வை பெறுவதும் மிகவும் அவசியமானதாகும். ஆட்சி உச்சம் பெற்று குரு பார்வையுடன் அமைந்துவிட்டால் கலைத்துறையில் புகழின் உச்சிக்கே சென்றுவிட முடியும்.

சுக்கிரன் சூரியனுக்கு முன் பின் 8 டிகிரி இருக்கும் போது அஸ்தங்கம் அடைகிறார். அப்படி அமையப்பெற்றால் மண வாழ்வில் பிரச்சினை, ஈடுபாடற்ற நிலை, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிக்கும் அமைப்பு ஏற்படும்.

சூரியனுக்கு 29 டிகிரியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 26 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ர நிவர்த்தியடைகிறார். சுக்கிரன் ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை சுமார் 42 நாட்கள் வக்ரமடைவார்.

7ல் சுக்கிரன் அமைந்தால் உண்டாகக்கூடிய பலன்கள்

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடு, இல்வாழ்வு, இன்பம், மனைவி, ஆசை போன்றவற்றை பற்றி குறிப்பிடுவதாகும். சுக்கிரன் 7ல் சுபர் வீட்டில் அமைந்து சுபர் பார்வை பெற்றால் அழகிய மனைவியும், மனைவியால் பல வகையில் முன்னேற்றமும், மனைவி நல்ல குணவதியாக அமையும் யோகம் உண்டாகும். அதுவே 7ல் உள்ள சுக்கிரன் அசுபர்களின் சேர்க்கை பெற்றிருந்தால் சிற்றின்ப விஷயங்களில் வல்லவராக திகழக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

7 ல் சுக்கிரன் செய்வாயுடனிருந்தால் மனைவியின் மீது வெறுப்பு ஏற்படும். மற்ற பெண்களின் தொடர்பு அதிகரிக்கும். 7 ல் உள்ள சுக்கிரன் பகை நீசம் பெற்றிருந்தால் இல்வாழ்க்கையே பாலைவனமாக மாறும். வாழ்க்கை துணைக்கு தீராத வியாதிகள் ஏற்பட்டு இழக்க வேண்டிய அவலம் ஏற்படும். அல்லது பிரிவு, விவாகரத்து போன்றவற்றால் நிம்மதி குறையும். 7 ல் சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் தரம் தாழ்ந்தவர்களுடன் தகாத உறவு ஏற்பட்டு மரியாதையை இழக்க நேரிடும். சுக்கிரன் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால் அவருக்கு காமவெறி அதிகமாக இருக்கும்.  7 ல் சக்கிரன் சனி செவ்வாயுடன் சேர்க்கை பெற்றால் மணவாழ்க்கை அமைவதில்லை. அப்படி அமைந்தாலும் புத்திர பாக்கியமோ, மகிழ்ச்சியான வாழ்வோ உண்டாவதில்லை.
சுக்கிரனை குரு பார்வை செய்வதால் ஒன்றுக்கும் மேற்பட்ட களத்திரம் உண்டு. தேவர்களுக்கெல்லாம் குரு பிரகஸ்பதி. அது போல அசுரர்களுக்கெல்லாம் குரு சுக்கிரனாவார்.

சுக்கிரனின் வழிபாட்டு ஸ்தலங்கள்,

கஞ்சனூர், திருநாவலூர், ஸ்ரீரங்கம்

கஞ்சனூர்,

மகாவிஷ்ணு தன் சுக்ரதோஷம் நீங்க இங்குள்ள ஸ்ரீஅக்னீஸ்வரரையும், கற்பகாம்பாளையும் வணங்கி நன்மை பெற்றார். வெள்ளிக்கிழமைகளில் வெள்ளைநிற மலர்களால் இங்கு வழிபாடு செய்வது நல்லது. இந்த ஸ்தலம் சூரியனார் கோவிலில் இருந்து கிழக்கே 6 கி.மீ. தொலையவில் உள்ளது.

திருநாவலூர்,

சுக்கிரன் பூஜித்து வரம் பெற்ற ஸ்தலமாகும். இது பண்ருட்டி ரயில் நிலைதிலிருந்து 15 மைல் தொலைவில் உள்ளது.

ஸ்ரீரங்கம்,

பெரிய கோவில் என்று  குறிப்பிடப்படும் திருப்பதியம் இது என்று குறிப்பிடப்படுகிறது. ஸ்ரீரங்கத்தின் விமானத்திற்கு ப்ரணவ விமானம் என்று பெயர். இந்த விமானத்தை தரிசித்தாலே சகல பாவங்களும் விலகும். சுக்கிரன் வழிபட்டு வரம் பெற்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. சுக்கிரனால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீரங்கம் சென்று அரங்க நாதரை வழிபட்டால் பல நன்மைகள் ஏற்படும்.

சுக்கிரனை வழிபடும் முறைகள்,

வெள்ளிக்கிழமைகளில் விரத மிருந்து மஹா லட்சுமி தேவிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, வெண்மை நிற தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்தல்.

துர்க்கை அம்மனை வழிபாடு செய்தல், துர்க்கா பூஜை செய்தல், ஸ்ரீசரக்ம், தேவிதுதிபாடல்கள், துர்க்கா சாலிஸா போன்றவற்றை பாராயணம் செய்தல்.

6 முகருத்ராட்சை அணிதல். வைரக்கல் பதித்த மோதிரம் அணிவது,

பட்டாடை, மொச்சை பயிர், தயிர், பாலாடை கட்டி, வாசனைப் பொருட்கள், சர்க்கரை,, சூடம், ஆடை, அரிசி போன்றவற்றை வெள்ளியன்று மாலை வேளையில் ஏழைப் பெண்ணுக்கு  தானம் செய்தல்.

வெண்ணிற உடைகள்,கைகுட்டைகள் பயன்படுத்துதல், வெள்ளைமலர்களை சூடுதல், வெள்ளிப் பாத்திரங்களை பயன்படுத்துதல்,

ஓம் தீரம் த்ரிம் ட்ரௌம் சஹ சுக்ர பகவதே நமஹ எனும் பிஜ மந்திரத்தை 40 நாட்களுக்குள் 20000 தடவை அதிகாலையில் பாராயணம் செய்யும்.

பசுவுக்கு அகத்தி கீரை கொடுப்பது நல்லது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001 

நவ கிரகங்களில் குருவும் பரிகாரமும்


பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவான் நவகிரகங்களில் முதன்மையான சுபகிரகமாவார். மனிதனின் வாழ்வில் பல்வேறு உன்னதமான உணர்வுகளை உண்டாக்கக்கூடிய ஆற்றல் குருபகவானுக்கு உண்டு. ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். தனக்காரகனாகவும், புத்தி காரகனாகவும் விளங்கும் குரு பகவான் மங்களகாரகனாகவும், புத்திர காரகனாகவும் இருக்கிறார். இறை வழிபாட்டிற்கும் ஞானத்திற்கும் குரு பகவானே காரகனாகிறார்.

அது மட்டுமின்றி ஒழுக்கம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மன நிலை, சுகவாழ்வு, புத்திரர்கள், பேரன்கள், பெருந்தன்மையான குணம், தூய்மை, புனிதமான நீர், இறை வழிபாடு, அறிவு, செல்வம், செல்வாக்கு, இறைவழிபாடு, மதகுருமார்கள், பெரியோர்கள் கல்வித்துறை, குதிரை, யானை, அழகிய வீடு, பிரம்மா, ஞானம், யோகப்பியாசம், ஆசிரியர் தொழில், அஷ்டம் சித்திகளை அடைதல், புரோகிதம், மதிநுட்பம், பெரியோர்களின் ஆசி, அரசாங்க அனுகூலங்கள், பாராட்டுகள், விருதுகள் ஏற்படுதல், சாந்தமான கபாவம், கண்கள், வாக்கு பலிதம், ஆண்டியாதல், ரிஷி உபதேசம் பெற்றல், தேன் கடலை, சீரகம் ஆகியவற்றிற்கெல்லாம் குரு காரகனாவார்.

குருவால் உண்டாகும் நோய்கள்,

குரு பகவானால் ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், பூச்சிகளால் பாதிப்பு, பிராமணர்கள் மற்றும் பெரியோர்களின் சாபத்தால் உடல் பாதிப்பு, கோவில் விவகாரங்களில் ஈடுபடுவதால் உடல்நிலை பாதிப்பு, வறுமையால் உடல்நிலை பாதிப்பு போன்றவை உண்டாகும்.

சூரியனுக்கு 11 டிகிரி முன் பின் குரு பகவான் சஞ்சரிக்கும் போது அஸ்தங்கம் பெற்று பலஹீனமடைகிறார். சூரியனுக்கு 9வது ராசியில் குரு வருகின்ற போது (245 டிகிரி) வக்ரம் பெற்று 5வது ராசிக்கு வருகின்றபோது வக்ர நிவர்த்தி (115 டிகிரி) அடைகிறார்.

குருவின் கோத்திரம் ஜாதி பிராமணர், சமித்து நவதானியம் கடலை, திசை ஈசான்ய மூலை வடக்கு, கல் புஷ்பராகம், அங்கம் வயிறு, சுவை இனிப்பு, நிறம் பொன்னிறம், மஞ்சள், குணம் சத்வ குணம், பாஷை சமஸ்கிருதம், வாகனம் யானை, தேவதை பிரம்மா.

குரு ஆண் கிரகமாவார். குருவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியவை நட்பு கிரகங்களாகும். புதன், சுக்கிரன் பகை, சனி, ராகு, கேது சமம். குரு, தனுசு, மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுகிறார்.

குரு ஒரு ராசியில் 1 வருட காலம் சஞ்சரிப்பார். குரு திசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களிலோ 2,11 ஆகிய ஸ்தானங்களிலோ குரு கிரக சேர்க்கை உடன் அமையப் பெற்று திசை நடைபெற்றால் சகல விதங்களிலும் நன்மையான பலன்கள் உண்டாகும். குரு, துதியை, சப்தமி, ஏகாதசி, சதுர்தசி ஆகிய திதிகளில்
சூன்ய தோஷம் அடைகிறார்.

குருபகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5,7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்றமான நிலையை பெறுகிறது. குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும்.

குரு கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் போது 12 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ பூக்கிறது. சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது மாசி மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்ப ராசியில் சஞ்சரிக்கும் போது
கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

குரு திசை ஒருவருக்கு நடைபெற்றால் ராஜாவின் திசை நடப்பதாக கூறுவார்கள். வலுபெற்று அமைந்த குரு திசை ஒருவருக்கு இளமையில் நடைபெற்றால் கல்வியில் சாதனை மேல் சாதனை செய்யும் அமைப்பு உண்டாகும். திருமண வயதில் நடைபெற்றால் சிறப்பான மண வாழ்க்கை, தொழில் ரீதியாக மேன்மை, பொருளாதார உயர்வுகள் போன்ற யாவும் உண்டாகும். இறுதி காலத்தில் நடைபெற்றால் புத்திரர்களால் உயர்வு, சமுதாயத்தில் பெயர், புகழ் உயரக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

பிரஸ்பதி என்றும், மேதாவி என்றும் அழைக்கப்படும் குரு பொன்னிறமானவர். எனவே தான் பொன்னவன் என போற்றப்படுகிறார். குரு கோட்சார ரீதியாக 2,5,7,9,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் பொருளாதார மேன்மை, திருமண சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு, தொழிலில் மேன்மை, புத்திர பாக்கியம் போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

பலமிழந்து அமையப் பெற்ற கிரகங்களுக்கும் குரு பார்வை இருந்தால், அதிலுள்ள தோஷங்கள் விலகி பலமுள்ளதாக மாறிவிடும். குரு தனித்து இருப்பது நல்லதல்ல. குரு நின்ற இடம் பாழ் என்பார்கள். அதுவே குரு கிரகச் சேர்க்கையுடன் அமைந்தால் அந்த இடம் பலம் வாய்ந்ததாக மாறிகிறது.

குரு பகவானால் உண்டாகக்கூடிய யோகங்கள்,

கெஜகேசரி யோகம்,, ஹம்ச யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், கோடீஸ்வர யோகம், சண்டாள யோகம், சகடையோகம்.

கெஜகேசரி யோகம்,

சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு அமையப் பெறுவது. இதனால் பல யானைகளுக்கு மத்தியில் வாழும் ஒரு சிங்கம் போன்ற வலிமை உண்டாகும். புகழ், பெருமை, செல்வம், செல்வாக்கு போன்ற  யாவும் உயரும்.

ஹம்ச யோகம்,

குரு ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானத்தில் அமையப் பெறுவது. இதனால் நீண்ட ஆயுள், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும் அமைப்பு, செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

குரு மங்கள யோகம்,

குரு செவ்வாய்க்கு கேந்திரத்தில் அமையப் பெறுவது. இதனால் பூமி, மனை சேர்க்கை அதிகரிக்கம்.

கோடீஸ்வர யோகம்,

குரு, கேது சேர்க்கை பெற்றாலும், கேதுவை பார்வை செய்தாலும் உண்டாவது. இதனால் பெரிய மனிதர்களின்  நட்பு ஆன்மிக, தெய்வீக காரியத்தில் ஈடுபாடு, செல்வம், செல்வாக்க போன்றவை யாவும் சிறப்பாக அமையும்.

சண்டாள யோகம்,

குரு, ராகு சேர்க்கை பெற்றிருப்பது (அ) ராகுவை பார்வை செய்வது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

சகடையோகம்,

சந்திரனுக்கு 6,8,12 ல் குரு இருந்தால் உண்டாவது. இதனால் வாழ்வில் ஏற்றத் தாழ்வுள்ள பலன்களே உண்டாகும. வாழ்க்கை வண்டி சக்கரம் போல சாண் ஏறினால் முழம் சறுக்கும்.

குரு ஓரையில் செய்யக்கூடியவை.

குரு ஓரையில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். செல்வந்தர்கள் மற்றும் குருமார்களை சந்திக்க, ஆடை, ஆபரணங்கள் வாங்க, கடன்பெற, இறைவழிபாடு செய்ய நல்லது.

குருபகவானை வியாழபகவான் என்றும் பிரகஸ்பதி என்றும் அழைப்பதுண்டு.
குரு பகவான் தமிழகத்தில் மூன்று ஸ்தலங்களுக்கு சென்று ஈஸ்வரனை பூஜித்து பேறு பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. அவை தென்குடி திட்டை, திருவலிதாயம், ஆலங்குடி ஆகும்.

தென்குடி திட்டை,

இந்த ஸ்தலம் மாயவரத்திற்கும் தஞ்சைக்கும் இடையில் உள்ளது. ரயில் நிலையத்தின் பெயரும் திட்டைதான். திருஞான சம்பந்தர் இங்கே ஷேத்ர மூர்த்தயான பசுபதி நாதரையும், உலக நாயகியையும் பாடி பேறு பெற்றிருக்கிறார்.

திருவலிதயம்,

இந்த ஸ்தலம் சென்னைக்கு அருகே பாடி என்ற இடத்தில் உள்ளது.குரு பகவான் இந்த ஸ்தலத்திற்கு வந்து ஸ்தல மூர்த்தியை வணங்கி, பூஜித்து பெருமை பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன.

ஆலங்குடி,

இங்கு குரு எனப்படும் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் மன்னார்குடி போகும் வழியில் ஆலங்குடி அமைந்துள்ளது.

குருவை வழிபடும் முறைகள்,

வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து,மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் (வியாழக் கிழமைகளில்) மந்திர ஜெபங்களை மாலைப் பொழுதிலும் செய்யவும்.

5 முக ருத்ராட்சம் அணியவும். குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது.

சிவனை வணங்கி ருத்ரம் ஜெபிக்கவும். ருத்ராபிஷேகம் செய்யவும்.
அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்யவும்.

மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.

வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது.

ஓம் ஜீரம் ஜரிம் ஜீரௌம் சகுரவே நமஹ என்ற குரு மந்திரத்தை 40 நாட்களில் 16000 தடவை துதிக்கவும். மஞ்சள் புஷ்பராக கல்லை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளவும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001