Showing posts with label Ragu Ketu Palangal 2020 -2022. Show all posts
Showing posts with label Ragu Ketu Palangal 2020 -2022. Show all posts

Thursday, August 27, 2020

விருச்சிகம்   - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

 

விருச்சிகம்   - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அதிக புத்திக்கூர்மையும், சமூகப் பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை 8, 2-ல் சஞ்சரித்த ராகு, கேது, தற்போது ஏற்படும் ராகு கேது பெயர்ச்சியால் திருக்கணிப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). சர்ப கிரங்களான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது சிறப்பு. அதிலும் குறிப்பாக புதுமண தம்பதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திடீரெண்டு உணர்ச்சி வசப்படும் நிலை ஏற்படும் என்பதால் உங்கள் முன் கோபத்தை குறைத்து கொண்டு குடும்பத்தில் பெரியவர்களிடம் பேச்சில் பொறுமையை கடைபிடிப்பது, வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.  உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் ஒரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அலர்ஜி பிரச்சினை, மனைவிக்கு உடம்பு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது.

            குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலையை சர்ப கிரகங்கள் உங்களுக்கு ஏற்படுத்தினாலும் ஒரு ராசியில் நீண்ட நாட்கள் சஞ்சரிக்கும் கிரகமான சனி உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு தொழிலை அபிவிருத்தி செய்யும் யோகம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எளிதில் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம் என்பதால் அவர்களை கலந்து ஆலோசித்து எந்த முடிவுகளையும் எடுப்பது மிகவும் சிறப்பு. பெரிய முதலிடுகளை ஈடுபடுத்தி தொழிலை மேன்மைபடுத்தி கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் தகுதிக்கு ஏற்ற உயர்வுகளை பெறுவார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

            இக்காலங்களில் குரு சஞ்சாரம் எப்படி இருக்கிறது என பார்த்தால் குரு வரும் 20-11-2020 முடிய உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சாரம் செய்வது மட்டும் தான் சாதகமான அமைப்பு அதன் பின்பு குரு 3 மற்றும் 4-ல் சஞ்சராம் செய்வதால் பண வரவுகள் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் கடினமாக முயற்சித்தால் தான் ஒரு சிறு செயலையும் செய்து முடிக்க முடியும். பிள்ளைகள் மூலம் சுப செலவுகள் தேவையற்ற மன கவலை உண்டாகும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் நிலை சற்று சாதகமாக இருக்கும் கடந்த கால சோர்வுகள் விலகி நீங்கள் சற்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் முன் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. மனைவி பிள்ளைகளுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. தேவையற்ற குழப்பங்களால் மன நிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது சிறப்பு. பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால்  அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகம்

பணியில் வேலைபளு அதிகமாக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் உங்களது நெருக்கடிகளை குறைக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு மனைவி பிள்ளைகளை விட்டு வெளியிடங்களில் தங்க நேரிடும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி ஏற்றம் அடைவீர்கள் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதாரநிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபங்களை அடைவீர்கள். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் கவனமாக செயல்படுவது நல்லது. கடந்த கால வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.  கொடுத்த கடன்கள் வசூலாகும்.

அரசியல்

பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும் காலமாக இருக்கும். கட்சி பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்வீர்கள். முன்கோபத்தை குறைத்து கொள்வது, மேடை பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது உடன் பழகுபவர்களிடமும் எச்சரிக்கையுடன் இருப்பது, பத்திரிக்கையாளர்களை பகைத்து கொள்ளாது இருப்பது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனைப் பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். சந்தையில் விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கும். பொருளாதார ரீதியாக மேன்மைகள் ஏற்படும் என்றாலும் நெருங்கியவர்களை அனுசரித்து சென்றால் எதையும் சமாளித்து விட முடியும்.

கலைஞர்கள்

தகுந்த கதா பாத்திரங்கள் கிடைத்து சமுதாயத்தில் நல்ல நிலையை அடைவீர்கள். போட்டி, பொறாமைகள் அதிகமாக இருந்தாலும் எதையும் சமாளிக்கும் பலம் உங்களிடம் இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமையும். வரவேண்டிய பணத் தொகைகள் கிடைத்து கடன்கள் குறையும். அதிக அலைச்சலால் சுகபோக வாழ்க்கையில் சிறிது பாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.

பெண்கள்

உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடந்த கால கடன்களை குறைக்க முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், கை, கால் மூட்டுகளில் வலி போன்றவை தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண் பெற்று நல்ல பெயர் எடுப்பீர்கள். உடல் நிலை மந்தமாக இருக்கும் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் கவனம் தேவை. பெரிய மனிதர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

 

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

ஜென்ம ராசியில் கேது கேட்டை நட்சத்திரத்திலும் ராகு 7-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது, கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது சிறப்பு. ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி வலுவாக சஞ்சரிப்பது சகல விதத்திலும் வெற்றிகளை குவிக்கும் சிறப்பான அமைப்பாகும். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நல்ல அனுகூலமான பலன்களை அடைய முடியும். தொழில் வளர்ச்சிக்கான நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். வாகனங்களில் செல்கின்ற போது நிதானத்துடன் இருப்பது நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 7-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், ஜென்ம ராசியில் கேது கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், குரு 3-ல் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். சில நெருக்கடிகள் இருந்தாலும் சனி 3-ல் சஞ்சாரம் செய்வதால் தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.  எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து லாபங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகரிக்கும். பணியில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பதும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பதும் நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ஜென்ம ராசியில் கேது அனுஷ நட்சத்திரத்திலும், ராகு 7-ல் ரோகிணி நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனைப் பெற முடியும். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். சனி 3-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் இக்காலத்தில் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். கடன்கள் சற்றே குறையும். தேவையில்லாத அலைச்சல்கள் இருக்கும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

ஜென்ம ராசியில் கேது அனுஷ நட்சத்திரத்திலும், ராகு 7-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனி உங்கள் ராசிக்கு 3-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய சூழ்நிலை ஏற்படும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் கை கூட இடையூறு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு இருந்தாலும் உங்களது அன்றாட செயல்களில் சிறப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மை ஏற்படும். கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் எதிலும் அவர்களை கலந்தாலோசித்து செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியில் உயர்வடைவார்கள்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

ஜென்ம ராசியில் கேது விசாக நட்சத்திரத்திலும் ராகு 7-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியதுவம் கொடுத்தால் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளை எதிர்கொள்ள முடியும். உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் வலமான வாழ்வை அடைய முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். புதிய இடம் பொருள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவதோடு பள்ளி கல்லூரிக்கும் பெருமை சேர்ப்பார்கள்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -1,2,3,9

நிறம் -  ஆழ்சிவப்பு, மஞ்சள்

கிழமை - செவ்வாய், வியாழன்

திசை - தெற்கு

கல் - பவளம்

தெய்வம்- முருகன்

 

பரிகாரம்

விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் சஞ்சாரம் செய்வதால் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது. ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 20-11-2020 முதல் சாதகமின்ற சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும்.

சிம்மம்   - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

 

சிம்மம்   - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும், எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும் விளங்கும் சிம்மராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை நிழல் கிரகமான ராகு 11லும், கேது 5லும் சஞ்சாரம் செய்தனர். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 10-ஆம் வீட்டிலும், கேது 4-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். பண வரவு சிறப்பாக இருந்தாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். வீடு வாகனங்கள் மூலம் எதிர்பாராத வகையில் வீண் செலவுகள் ஏற்படும்.

சர்ப கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் ஒரு ராசியில் அதிக நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். தாராள தன வரவால் சகல விதத்திலும் மேன்மையான பலனை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் அலைச்சல் இருந்தாலும் லாபங்கள் அதிகரிக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக முயற்சிகள் மேற்கொண்டால் அது பரிபூரண வெற்றியை தரும். கடந்த கால கடன்கள் குறைந்து சேமிக்கும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் சூழ்நிலை ஏற்படும். சக நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

            உங்கள் ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமும் தன காரகனுமான குரு பகவான் வரும் 20-11-2020 வரை பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும் அடுத்து சமசப்தம ஸ்தானமான 7-ல் (அதிசாரமாக கும்ப ராசியில்) வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலத்தில் உங்களது பொருளாதார நிலை மேலும் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், கணவன்- மனைவியிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். அழகிய குழந்தையை பெறும் வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் தொடக்கத்தில் சில பிரச்சினைகளை சந்தித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த கடன்களும் தக்க நேரத்தில் திரும்ப வரும். கடந்த கால வீண் வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

குரு (மகர ராசியில்) வரும் 20-11-2020 முதல் 06-04-2021 வரையும் மற்றும் வரும் 14-09-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ள காலத்தில் மட்டும் பண விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு சிக்கல்களை எதிர் கொள்ள நேரிட்டாலும் சனி 6-ல் சஞ்சரிப்பதால் அனுகூலப்பலனை அடைய முடியும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் மன நிம்மதி ஏற்படும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள், இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கடினமாக உழைத்தால் தான் நற்பலனை அடைய முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை

பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உற்றார் உறவினர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு சுப செலவுகளை சந்திப்பீர்கள்.

உத்தியோகம்

எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகமாக இருக்கும் என்பதால் மனநிம்மதியற்ற நிலை ஏற்படும். உடல் நிலை காரணமாக எதிலும் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்படும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேன்மைகள் அடைவீர்கள் என்றாலும் அதிக அலைச்சல் இருக்கும். தொழில் சிறப்பாக இருந்தாலும் மறைமுக பிரச்சினைகளால் அனைத்து விஷயத்திலும் அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். உடனிருப்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போகும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி முன்னேற்றத்தை அடைய முடியும். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வாங்குவதற்கு பலமுறை அலைந்து தான் வாங்க முடியும்.  நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

அரசியல்

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்து கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாது இருப்பது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும் பணியில் சுனக்கம் ஏற்படும். எதிலும் நீங்களே முன் நின்று செயல்பட வேண்டிய நிலை இருப்பதால் ஒய்வு இல்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். பங்காளிகளை பகைத்து கொள்ளாமல் இருப்பது, தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

கலைஞர்கள்

எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொள்வது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகள் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். கார், பங்களா வாங்கும் யோகம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் சுகவாழ்விற்கு இடையூறு தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சினைகளை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருக்கவும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பாக இருக்கும்.

மாணவ- மாணவியர்

மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புக்களை தவிர்ப்பது நல்லது.

 

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

உங்கள் ராசிக்கு 10-ல் ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், சனி 6-லும் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றிகளை பெற்று விட முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்திலுள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடந்த கால வம்பு வழக்குகள் மறைந்து நிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு 5-ல் குரு 20-11-2020 முடிய சஞ்சரிப்பதால் திருமண சுபகாரிய முயற்சியில் முனைப்புடன் முயற்சித்தால் சாதகப்பலன் கிடைத்து குடும்பத்தில் மங்கள நிகழ்வு நடக்கும். கேது 4-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள், தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகி லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 10-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், ருண ரோக ஸ்தானமான 6-ல் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கேது 4-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்தமான நிலை உடல் சோர்வு ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.  குரு உங்கள் ராசிக்கு 06-04-2021 முடிய 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வகையில் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். திருமண சுபகாரியங்கள் தடைக்கு பின்பு கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். வேலையாட்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து நடந்து கொண்டால் தொழிலில் முன்னேற்றத்தை அடைய முடியும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு குறைவாகவே இருந்தாலும் அடைய வேண்டிய மதிப்பெண்களை பெறுவார்கள். தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 4-ல் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் 6-ல் சனி சஞ்சரிப்பதும் உங்களுக்கு நன்மைகளை தரும் அமைப்பு என்றாலும் தேவையற்ற இடையூறுகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும் அலைச்சல் உடல் அசதி ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. ஆண்டு கோளான குரு பகவான் அதிசாரமாகவும் வக்ர கதியிலும் 7-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும் எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். வேலையாட்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு மன ஆறுதலை தரும். மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

உங்கள் ராசியாதிபதி சூரியன் நட்சத்திரமான கிருத்திகையில் ராகு 10-ல் சஞ்சரிப்பதாலும். 6-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் கடந்த கால சிக்கல்கள் விலகி நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் 4-ல் கேது சனி நட்சத்திரத்தில் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் வண்டி, வாகனங்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். வரும் 20-11-2021 முதல் குரு உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்லது நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறைந்து சேமிக்கும் அளவிற்கு தாராள தன வரவு ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டிகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் விலகி ஒரு தெளிவான நிலை ஏற்படும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்றுக் கூடுதலாக இருந்தாலும் பதவி உயர்வுகளும் சம்பள உயர்வுகளும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போட்டிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

உங்கள் ராசியாதிபதி சூரியன் நட்சத்திரத்தில் ராகு 10-லும், குரு நட்சத்திரமான விசாகத்தில் கேது 4-லும் சஞ்சரிப்பது மட்டுமின்றி இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 7-ல் குரு சஞ்சரிக்க உள்ளதால் சகல விதத்திலும் நற்பலன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருப்பது மட்டுமின்றி எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நன்மைகள் நடக்கும். பொன் பொருள் வாங்க கூடிய வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைபளு குறையும். சிலருக்கு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு மூலம் அனுகூலமான செய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்கங்கள் விலகி லாபகரமான பலனை அடைவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். 

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9

நிறம் - வெள்ளை, சிவப்பு

கிழமை - ஞாயிறு, திங்கள்

கல் - மாணிக்கம்

திசை- கிழக்கு

தெய்வம் - சிவன்

 

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

கடகம்  - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

 

கடகம்  - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

யாருக்கும் அஞ்சாத குணமும் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பும் கொண்ட கடக ராசி நேயர்களே, இது நாள் வரை 6, 12-ல் சஞ்சரித்த கேது, ராகு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). உங்கள் ராசிக்கு 11--ல் ராகுவும், 5-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பூர்வீக சொத்து ரீதியாக பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது சிந்தித்து பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்கு லாபகரமான பலனை அடைவீர்கள். எதிர்பாராத அனுகூலங்களும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும் யோகம் கடந்த கால பிரச்சினைகள் குறையும்.

ஒரு ராசியில் நீண்ட நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட ஒற்றுமை குறைவு ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும்.

குரு (மகர ராசியில்) வரும் 20-11-2020 முதல் 06-04-2021 வரையும் மற்றும் வரும் 14-09-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தடைபட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் எதிர்பார்த்த லாபம் சிறப்பாக அமையும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தி பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

குரு வரும் 20-11-2020 வரை ருண ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதும் அடுத்து அஷ்டம ஸ்தானமான 8-ல் அதிசாரமாக (கும்ப ராசியில்) வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள், அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த வீண் மருத்துவ செலவுகள் குறையும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும். சிலருக்கு வயிறு பிரச்சினை ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. 

குடும்பப் பொருளாதார நிலை

பண வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் சுபிட்சமான நிலை உண்டாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் அமையும். புத்திர வழியில் சிறிது மன கவலை ஏற்படலாம் என்பதால் அவர்களை பக்குவமாக கையாளுவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் ரீதியாக உறவினர்களிடம் கருத்து வேறுப்பாடுகளுக்கு வாய்ப்பு இருப்பதால் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

உத்தியோகம்

பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பது மன நிம்மதியை தந்தாலும் சக நண்பர்களிடம் சற்று கவனத்துடன் பேசுவது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உங்கள் செயல்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். கூட்டாளிகளை மட்டும் அனுசரித்து செல்வது, எந்த செயல் செய்வது என்றாலும் அவர்களை கலந்தலோசித்து செயல்படுவது மிகவும் நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும். வம்பு வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

அரசியல்

பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். தலைவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும். வருவாய்கள் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பத்திரிக்கையாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். கால் நடைகளால் அனுகூலம் உண்டாகும்.

கலைஞர்கள்

எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும். படப்பிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக அமையும். சேமிப்புகள் பெருகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். சிலருக்கு கர்பபை சம்மந்தபட்ட பாதிப்பு ஏற்படலாம் என்பதால் உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதம் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் சற்று அனுசரனையாக நடந்து கொள்வது நல்லது. சொந்த வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்வீர்கள். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நடந்து கொள்வீர்கள்.

 

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

உங்கள் ராசிக்கு ராகு 11-ல் செவ்வாய் நட்சத்திரமான மிருகசீரிஷத்திலும், கேது 5-ல் கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த இடைஞ்சல்கள் எல்லாம் விலகி வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வரும் 20-11-2020 முதல் தனகாரகன் குரு 7-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 11-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், தன காரகன் குரு 7-ல் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் நிலை சிறப்பாக இருக்கும் கடந்த கால வீண் செலவுகள் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 5-ல் கேது சஞ்சரிப்பதால் புத்திர வழியில் சிறிது மன கவலை ஏற்படும். சனி 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சற்று கவனத்துடன் இருப்பது சிறப்பு. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 5-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக வாய்ப்பு ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு வீண் செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள். கிடைக்க வேண்டிய லாபமும் கிடைக்கும். மாணவர்கள் கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ள கூடிய சூழ்நிலைகள் உண்டாவதால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், குரு 20-11-2021 முடிய 7-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றிகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது மூலம் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அனைவரிடமும் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது என்றாலும் நிறைய போட்டிகளை சமாளித்தே லாபத்தை பெற வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படாமல் சமாளிக்கலாம். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். உடன் பணிபுரியும் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் வேலைபளுவை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் கேது விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 8-ல் குரு சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். பண வரவுகள் எதிர்பார்த்தப்படி கிடைத்தாலும் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகி குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். திருமண சுபகாரியங்கள் கைகூட சற்று தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன்களைப் பெற முடியும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால்  உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே லாபத்தினைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்க பெறும் என்றாலும் தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வது நல்லது. மாணவர்களுக்கு உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் கல்வியில் சற்று மந்த நிலை உண்டாகும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9

நிறம் - வெள்ளை, சிவப்பு

கிழமை - திங்கள்,வியாழன்

கல் - முத்து

திசை - வடகிழக்கு

தெய்வம் - வெங்கடாசலபதி

 

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 5-ல் சஞ்சரிப்பதால் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது. சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது. சர்ப சாந்தி செய்வது நல்லது.

சனி 7-ல் சஞ்சரித்து கண்ட சனி நடைபெறுவதால் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றவும், சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வதும் நல்லது.

மிதுனம் - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

 

மிதுனம்   - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

நல்ல தீர்க்கமான சிந்தனையும், அறிவாற்றலும், நினைவாற்றலும் கொண்ட மிதுனராசி நேயர்களே, இது நாள் வரை ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது என சஞ்சரித்த சர்ப கிரகங்கள் திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). ராகு 12-ஆம் வீட்டிலும், கேது 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் நிலவிய கடந்த கால கருத்து வேறுப்பாடுகள் படிபடியாக குறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருங்கியவர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு திருப்திகரமாக அமைந்து ஏற்றங்களை அடைவீர்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அமையும்.

குரு வரும் 20-11-2020 வரை சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதும் அடுத்து பாக்கிய ஸ்தானமான 9-ல் அதிசாரமாக (கும்ப ராசியில்) வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சுப காரியங்கள் யாவும் தடையின்றி கைகூடும். புத்திர பாக்கியமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவதால் அபிவிருத்தியும் பெருகும். எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வர். உயர் அதிகாரிகளின் ஆதரவும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மனநிம்மதியை ஏற்படுத்தும்.

ஒரு ராசியில் நீண்ட நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அஷ்டமசனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. செய்யும் செயல்களில் தேவையற்ற இடையூறு ஏற்படலாம் என்பதால் முடிந்த வரை பொறுப்புகளை அதிகரித்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது சற்று கவனத்துடன் செல்வது நல்லது. பண வரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது, அதிக முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்ப்பது சிறப்பு.

குரு (மகர ராசியில்) வரும் 20-11-2020 முதல் 06-04-2021 வரையும் மற்றும் வரும் 14-09-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடி, தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கேது 6-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் பலம் கிடைக்கும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள் சற்றே குறையும் என்றாலும் உணவு விஷயத்தில் கட்டுபாட்டை கடைபிடிப்பது நல்லது. மனைவி பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவதும் தூர பயணங்களை தவிர்ப்பதும் நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவதால் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சி அளிக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து குடும்பத் தேவைகள் யாவும் தடையின்றி பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பூமி, மனை வாங்கும் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது சிறப்பு. கடன் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம்.

உத்தியோகம்

பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களை அடைய முடியும். எடுக்கும் பணிகளை செய்து முடிக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும். சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது. 

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். நீங்கள் உழைக்க வேண்டும் என நினைத்தாலும் உடல் ஒத்துழைக்காது. ஆரோக்கிய பாதிப்பால் எதிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். வெளியூர் தொடர்புகளால் மேன்மைகளை அடைவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சாதகமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை கையாளும் போது சற்று கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்

பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைக்கு பின்பு வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்க்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பண வரவுகள் இருந்தாலும் அதிகப்படியான செலவுகள் ஏற்படும் காலம் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் பண வரவுகள் சிறப்பாக அமையும். நீர் வரத்தில் பிரச்சினை பங்காளிகளிடம் கருத்து வேறுப்பாடு ஏற்படலாம் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. நவீன முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் கடன் உண்டாகும்.  உறவினர்களின் ஆதரவு மனநிம்மதியை தரும்.

கலைஞர்கள்

எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று உங்களின் நடிப்புத் திறன் வெளிச்சத்திற்கு வரும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுகளால் மனநிறைவு உண்டாகும். அதிக அலைச்சலால் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு  இடையூறு ஏற்படும். புதிய முதலீடுகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் கடன்கள் சற்று இருக்கும். இசைத்துறையில் உள்ளவர்களுக்கும் சாதிக்க கூடிய அளவிற்கு வாய்ப்புகள் தேடி வரும்.

பெண்கள்

உடல் ஆரோக்கித்தில் சிறுசிறு பாதிப்புகள் இருந்தாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட உறவினர்களிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் திறம்பட செயல்பட ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. எது எப்படி இருந்தாலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். பொழுது போக்குகளால் கல்வியில் நாட்டம் குறையும்.

 

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

உங்கள் ராசிக்கு கேது 6-ல் ராசியாதிபதி புதன் நட்சத்திரமான கேட்டையில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுப்பாடுகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். குரு வரும் 20-11-2020 முடிய 7-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சனி 8-ல், ராகு 12-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனத்துடன் இருந்தால் லாபத்தினை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மட்டும் கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதால் கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். எதிர்பார்க்கும் இட மாற்றமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

உங்கள் ராசிக்கு 12-ல் ராகு ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் 8-ல் குரு, சனி சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உங்கள் தேக ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதும் நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். முடிந்தவரை உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கேது 6-ல் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் 8-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் அதிசாரமாக 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள் எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளித்து விடுவீர்கள். பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எந்த பிரச்சினையும் சமாளித்து விட முடியும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்து கொண்டு கல்வியில் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

உங்கள் ராசிக்கு கேது 6-ல் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், வரும் 14-09-2021 முடிய குரு அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சனி 8-ல், ராகு 12-ல் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்களது உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது சற்று கவனத்துடன் செல்வது நல்லது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது நல்லது. நல்ல லாபங்கள் கிடைக்கும் என்றாலும் அதிக முதலீடுகளில் சற்று எச்சரிக்கையுடன் கையாள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகமாக இருந்தாலும் பதவி உயர்வுகள் கிடைக்கும், உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கல்வியில் கவனம் எடுத்து கொள்வது உத்தமம்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

ஜென்ம ராசிக்கு கேது 6-ல் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 20-11-2021 முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்லது நடக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை கை கால் அசதி சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். ராகு 12-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனையும் அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

ஜென்ம ராசிக்கு கேது 6-ல் குரு நட்சத்திரமான விசாகத்தில் சஞ்சரிப்பதும், 9-ல் குரு சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபமும், வெற்றியும் கிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். மேலதிகாரிகளிடம் பேசும் போது சற்று பொறுமையுடன் இருப்பது மிகவும் உத்தமம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

 

அதிர்ஷடம் அளிப்பவை

எண் - 5,6,8,

நிறம் - பச்சை, வெள்ளை

கிழமை - புதன், வெள்ளி

கல் - மரகதம்

திசை - வடக்கு

தெய்வம் -விஷ்ணு

 

பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 12-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவது நல்லது.

சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச் சனி நடப்பதால் தொடர்ந்து சனிக்கு பரிகாரம் செய்வது அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது.