Showing posts with label Today rasi palan - 24.02.2018. Show all posts
Showing posts with label Today rasi palan - 24.02.2018. Show all posts

Friday, February 23, 2018

Today rasi palan - 24.02.2018


Today rasi palan - 24.02.2018
இன்றைய ராசிப்பலன் -  24.02.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
24-02-2018, மாசி 12, சனிக்கிழமை, நவமி திதி இரவு 10.36 வரை பின்பு வளர்பிறை தசமி. ரோகிணி நட்சத்திரம் பகல் 11.28 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 11.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.



சந்தி

சுக்கி சூரிய புதன்
திருக்கணித கிரக நிலை
24.02.2018
ராகு
கேது

சனி
  செவ்
குரு
 

இன்றைய ராசிப்பலன் -  24.02.2018
மேஷம்
இன்று உற்றார் உறவினர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கப்பெறும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும்.
மிதுனம்
இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
கடகம்
இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
சிம்மம்
இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார பிரச்சனைகள் தீரும். வருமானம் இரட்டிப்பாகும்.
கன்னி
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும்.  தொழிலில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மன அமைதி குறையும்.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைப்பெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
தனுசு
இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்த விண் பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
மகரம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள்  சற்று குறையும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.
மீனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். புதுவிதமான செயல்பாட்டால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும்.