Showing posts with label Today rasi palan. Show all posts
Showing posts with label Today rasi palan. Show all posts

Saturday, November 11, 2017

Today rasi palan 11-11-2017

இன்றைய ராசிப்பலன் -  11.11.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
11-11-2017, ஐப்பசி -25, சனிக்கிழமை, அஷ்டமி திதி பகல் 01.30 வரை பின்பு தேய்பிறை நவமி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 11.43 வரை பின்பு மகம். மரணயோகம் பகல் 11.43 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. கால பைரவருக்கு உகந்த நாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.





               
திருக்கணித கிரக நிலை
11.11.2017

ராகு சந்தி
கேது

சனி 


புதன்
சூரிய சுக்கி குரு 
செவ்

இன்றைய ராசிப்பலன் -  11.11.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் வீண் செலவுகளால் பணப்பிரச்சனை ஏற்படலாம். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழிலில் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று வேலை தேடுபவர்க்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.
மிதுனம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் சற்று குறையும்.
கடகம்
இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் பெருகும். வருமானம் இரட்டிப்பாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
கன்னி
இன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.
துலாம்
இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் அடைவீர்கள்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசுத்துறையில் இருக்கும் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனை தீரும். நினைத்தது நடக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். மனக்குழப்பம் அலைச்சல் சோர்வு ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 11.43 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
மகரம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.43 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
கும்பம்
இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும்.
மீனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி உண்டாகும்.

Friday, November 10, 2017

Today rasi palan 10-11-2017

இன்றைய ராசிப்பலன் -  10.11.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,



இன்றைய  பஞ்சாங்கம்
10-11-2017, ஐப்பசி -24, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பகல் 02.50 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. பூசம் நட்சத்திரம் பகல் 12.25 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   





               
திருக்கணித கிரக நிலை
10.11.2017

ராகு சந்தி
கேது

சனி 


புதன்
சூரிய சுக்கி குரு 
செவ்

இன்றைய ராசிப்பலன் -  10.11.2017
மேஷம்
இன்று பிள்ளைகளால் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.
மிதுனம்
இன்று வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது.
கடகம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
சிம்மம்
இன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.
கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நற்பலனை தரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.
மகரம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பிரச்சனைகள் தீரும்.
கும்பம்
உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
மீனம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்தால் மட்டுமே வெற்றி அடையமுடியும். குடும்பத்தில் உறவினர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிட்டும்.