Tuesday, February 26, 2013

கேது திசை


கேது திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். கேதுவுக்கு ராகுவை போலவே சொந்த வீடு கிடையாது. ஞான காரகன் மோட்சகாரகன் என வர்ணிக்கப் படும் கேது பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் அதாவது கேது நின்ற வீட்டதிபதி பகை நீசம் பெறாமல் சுபகிரக சேர்க்கை பார்வையுடன் இருந்தால் ஆன்மிக தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கேது ஒரு பாவ கிரகம் என்பதால் அவர் உப ஜயஸ்தானங்களான 3,6,10,11 ல் அமையப் பெற்றிருந்தாலும் 1,5,9 ல் அமைந்து குருபார்வையுடனிருந்தால் சமுதாயத்தில் நல்லதொரு கௌரவம், பல பெரிய மனிதர்களின் தொடர்பு, கோயில் கட்டும் பணிகளில் ஈடுபாடு தெய்வ காரியங்களுக்காக செலவு செய்யும் அமைப்பு கொடுக்கும். கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்று அமைந்திருந்தால் கேது திசை காலங்ளில் ஒரளவுக்கு நன்மையான பலன்களை அடைய முடியும்.

பொதுவாகவே கேதுதிசை காலங்களில் நற்பலனை அமைவதை விட கெடு பலன்களே அதிகம் உண்டாகும். கேது நின்ற வீட்டதிபதி பகை நீசம் பெற்றோ, பாவகிரக சேர்க்கைப் பெற்றோ அமைந்து கேதுதிசை நடைபெறும் காலங்களில் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், மனகுழப்பங்கள், தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க கூடிய அவலங்களை எதிலும் மந்தம், இல்வாழ்வில் ஈடுபாடு இல்லாமை போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். குறிப்பாக கேது திசை  காலங்களில் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. கேது திசையில் திருமணம் செய்தால் இல்வாழ்வில் ஈடுபாடு உண்டாகாது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகளை கொடுக்கும். 8ல் கேது ஒருவருக்கு அமைந்தால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி என்ன வியாதி என்றே கண்டு பிடிக்க முடியாத நிலை உண்டாகும். குழப்பங்களால் தற்கொலை எண்ணத்தை தூண்டும் இத்திசை காலங்களில் எதிலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது.

அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கேது திசை முதல் திசையாக வரும் கேது பகவான் பலம் பெற்று குழந்தை பருவத்தில் கேது திசை நடைபெற்றால் விளையாட்டு தனம், பிடிவாத குணம் போன்றவை இருக்கும். வாலிப பருவத்தில் நடைபெற்றால் எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டியிருக்கும், கல்வியில் சுமாரான நிலையிருக்கும், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மத்திம பருவத்தில் திசை நடைபெற்றால் தெய்வீக பணிகளில் ஈடுபாடு, போராடி வாழ்வில் வெற்றி பெறக் கூடிய நிலை ஏற்படும். முதுமை பருவத்தில் திசை நடைபெற்றால் தெய்வீக பணிகளுக்காக செலவு செய்யும் அமைப்பு, பல பெரிய மனிதர்களின் தொடர்பு எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கை, சமுதாயத்தில் கௌரவம் அந்தஸ்து உயரக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

அதுவே கேது பலமிழந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் வயிறு கோளாறு, அடிக்கடி ஆரோக்கிய பாதிப்புகள், பெற்றோருக்கு  சோதனையை உண்டாக்கும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மந்த நிலை தேவையற்ற பழக்க வழக்கங்கள், காதல் என்ற வலையில் சிக்கி சீரழியும் வாய்ப்பு உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் குடும்ப வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, ஊர் விட்டு ஊர் சென்று அலைந்து திரியும் சூழ்நிலை, தற்கொலை எண்ணம் போன்றவை உண்டாகும். முதுமை பருவத்தில் திசை நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு நெருங்கியவர்களை இழக்கும் நிலை, உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், சமுதாயத்தில் கௌரவ குறைவுகள் உண்டாகும்.

கேது திசையில் கேதுபுக்தி
    
கேதுதிசையில் கேது புக்தியானது 4&மாதம் 27&நாட்கள் நடைபெறும். 

கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பெயர் புகழ், கௌரவம் உயரும் அமைப்பு, அரசு வழியில் அதிகார மிக்க பதவிகளை வகுக்கும் யோகம் எடுக்கும் காரியங்களில் வெற்றி, தான தருமம் செய்யும் யோகம் ஆலய தரிசனங்கள் ஆன்மீக தெய்வீக பணிகளில் ஈடுபாடு, நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும்.

   கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மனநிலை பாதிப்பு, கெடூர செயல்களை செய்யும் நிலை, விதவைகளால் பிரச்சனை, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களால் வம்பு வழக்கு, இல்வாழ்வில் ஈடுபாடு குறைவு, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.

கேது திசை சுக்கிர புக்தி
   
கேது திசையில் சுக்கிர புக்தியானது 1 வருடம் 2&மாதம் நடைபெறும். 

சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் திருமண சுபகாரியங்கள் கை கூடும்  அமைப்பு, குடும்பத்தில் ஒற்றுமை, லட்சுமி கடாட்சம்,  உத்தியோகத்தில் உயர்வு, அரசு வழியில் அனுகூலம் எதிர்பாராத செல்வ சேர்க்கை, பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும்.

சுக்கிரன் பலமிழந்திருந்தால் குடும்பத்தில் வறுமை, அரசு வழியில் கெடுபிடிகள், வண்டி வாகனத்தால் நஷ்டம், மனதில் கலக்கம், பெண்களால் பிரச்சனைகள், பணவிரயம், விஷத்தால் பயம் மேலிருந்து கீழே விழும் அமைப்பு, கெட்ட பெண்களின் சகவாசத்தால் அவமானம், இடம் விட்டு இடம் சென்று சுற்றி திரியும் நிலை, சர்க்கரை நோய் உண்டாகும்.

கேது திசா சூரிய புக்தி
    
கேது திசையில் சூரிய புக்தி யானது 4&மாதம் 6&நாட்கள் நடைபெறும். 

சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு மூலம் அதிகார பதவிகளை வகுக்கும் யோகம் மனைவி பிள்ளைகளால் சிறப்பு, புண்ணிய யாத்திரைகள் செல்லும் வாய்ப்பு, பூர்வீக சொத்துகளால் அனுகூலம், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளால் முன்னேற்றம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

சூரியன் பலமிழந்திருந்தால் தந்தை, தந்தை வழி உறவுகளால் பிரச்சனைகள் அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, தொழில் வியாபார நிலையில் வீண் விரயம், பதவியில் நெருக்கடி, உத்தியோக இழப்பு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், இருதய சம்மந்தப்பட்ட பாதிப்பு, உறவினர்களிடையே பகை, தலை காதுகளில் வலி, தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படும்.

கேது திசா சந்திர புக்தி
   
கேது திசையில் சந்திர புக்தியானது 7&மாதங்கள் நடைபெறும். 

இத்திசை காலங்களில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் மன உறுதியும், எடுக்கும் காரியங்களில் வெற்றியும், தாராள தன வரவும் ஆடை ஆபரண சேர்க்கை, நல்ல உணவு வகைகளை சாப்பிடும் யோகம், வீடு மனை வண்டி வாகன யோகம், ஜலத்தொடர்புடையவைகளால் லாபம் தாய் மற்றும் தாய் வழியில் முன்னேற்றம் உண்டாகும்.

சந்திரன் பலமிழந்திருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு நோய், தண்ணீரால் கண்டம், வயிறு கோளாறு, ஜலதொடர்பான உடல் உபாதைகள் மனக்குழப்பங்கள், தாய்க்கு கண்டம், தாய் வழி உறவுகளில் பகை விரோதம், வீடு மனை, வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும்.

கேது திசா செவ்வாய் புக்தி

கேது திசையில் செவ்வாய் புக்தியானது 4&மாதம் 27&நாட்கள் நடைபெறும். 

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் வீடு மனை  பூமியால் அனுகூலம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, சகோதரர்களுக்கு சற்றுதோஷம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செவ்வாய் பலமிழந்திருந்தால் வண்டி வாகன விபத்துக்களால் ரணகாயம், திருடர் பயம், வயிற்று போக்கு, மனைவி பிள்ளைகளிடையே கலகம் ஜீரம்,  அம்மை,  கட்டி, புண்,  பகைவரால் தொல்லை உத்தியோகத்தில் உயரதிகாரிகளிடைய« பகை வீண்பழிகளை சுமக்கும் நிலை உண்டாகும்.
   
கேது திசை ராகு புக்தி

   கேது திசை ராகு புக்தியானது 1வருடம் 18நாட்கள் நடைபெறும். 

கேது திசையில் ராகுபுக்தி என்பதால் அவ்வளவு அனுகூலமான பலன்களை அடைய முடியாது. பெண்களால் கலகம், விதவை பெண்களுடன் தொடர்பு, தரித்திரம், உறவினர்களின் தொல்லை, அரசாங்க வழியில் கெடுபிடிகள் அடிமைத் தொழில், குடும்பத்தில் நோய், இடம்  விட்டு இடம் மாறி சுற்றி திரியும் நிலை, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய சூழ்நிலை உண்டாகும்.

கேது திசையில் குருபுக்தி
    
கேது திசையில் குருபுக்தியானது 11&மாதம் 6&நாட்கள் நடைபெறும். 

குருபகவான் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில்  மகிழ்ச்சி, பூரிப்பு, தன தான்ய விருத்தி, உறவினர்களால் அனுகூலம், திருமண சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு, எதிர்பாராத தனவரவு, பெரிய மனிதர்களின் தொடர்பு, புத்திர வழியில் பூரிப்பு, செல்வம் செல்வாக்கு உயர்வு உண்டாகும்.
குரு பலமிழந்திருந்தால் அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, பயணங்களால் அலைச்சல் உடல் நிலையில் பாதிப்பு, கணவன் மனைவியிடையே பிரச்சனை, சுப காரியத்தடை, பிராமணர்களின் சாபம், கெட்ட காரியத்தில் ஈடுபடும் நிலை பொருளாதார சரிவு போன்றவை ஏற்படும்.

கேது திசை சனிபுக்தி

   கேது திசையில் சனிபுக்தியானது 1வருடம் 1மாதம் 9நாட்கள் நடைபெறும். 

சனி பலம் பெற்றிருந்தால் இரும்பு மற்றும் கருப்பு நிற பொருட்கள் மூலம் லாபம் கிட்டும். திருமணம் புத்திர பாக்கியம் அமையும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உயர் பதவிகள் கிட்டும். பொன் பொருள், வண்டி வாகனம் சேரும். சனி பலமிழந்திருந்தால் கடுமையான சோதனைகள், உடல் நிலையில் பாதிப்பு, வீண் விரயம் தாய் தந்தைக்கு தோஷம் எதிர்பாராத விபத்துகளால் உடல் உறுப்புகளை இழக்கும் நிலை, கஷ்டஜீவனம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

கேது திசையில் புதன் புக்தி

கேது திசையில் புதன் புக்தியானது 11மாதம் 27நாட்கள் நடைபெறும். 

புதன் பலம் பெற்று அமைந்திருந்தால் புக்தி கூர்மை, ஆடை ஆபரண சேர்க்கை தாய் வழி மாமன் மூலம் அனுகூலம்,  தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் கணக்கு, கம்பியூட்டரில் ஆர்வம் உயர்வு உண்டாகும். வண்டி வாகனம் சேரும். தானதர்மம் செய்யும் பண்பு  வண்டி வாகனங்களால் சேரும் யோகம் உண்டாகும். புதன் பலமிழந்திருந்தால் நண்பர்கள், உற்றார் உறவினர்களிடையே பகை, வம்பு வழக்குகளில் சிக்கும் நிலை, தாய் மாமன் வழியில் விரோதம், கருசிதைவு, எடுக்கும் காரியங்களில் தடை, நரம்பு தளர்ச்சி, தலைவலி, போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

கேதுவுக்குரிய பரிகாரங்கள்

தினமும் விநாயகரை வழிபடுதல், கேதுவுக்குரிய மந்திரங்களை ஜபித்தல், சதூர்த்தி விரதம் இருத்தல், வைடூரிய கல்லை மோதிரத்தில் பதித்து உடலில் படும் படி அணிதல் போன்றவை கேதுவால் உண்டாக கூடிய தீய பலன்களை குறைக்க உதவும்.

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
Guest Faculty For M.Sc. B.Sc. astrology, KARPAGAM UNIVERSITY, Coimbatore.
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.

Thursday, February 14, 2013

குருமகா திசை


        


குரு திசை மொத்தம் 16&வருடங்கள்  நடைபெறும். ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் குருபகவான் பலம் பெற்று  சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற நட்பு கிரகங்களின் சேர்க்கை சாரம் பெற்று ஆட்சி, உச்சம் பெற்றாலும், பூமி, மனை வீடு போன்றவற்றால் சிறப்பான அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். சமுதாயத்தில் பெயர் புகழ், மதிப்பு மரியாதை உயரும். பணவரவுகள் தாரளமாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் நாணயம் தவறாமல் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவும், பெரியோர்களின் ஆசியும் கிட்டும். அரசு வழியில் அனுகூலம், வங்கிப்பணிகளில் உயர்பதவி, ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பு, பலருக்கு  உதவி செய்யும் அமைப்பு, சமுக பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஆலய நிர்வாக பணிகளில் உயர்பதவிகள் கிட்டும். கல்வியில் சாதனைப் புரியும் அமைப்பு உண்டாகும். ஆன்மீக தெய்வீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பல நற்பணிகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

   குருபகவான் பலமிழந்து பகை,  நீசம், பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வைப் பெற்றால் குருதிசை காலங்களில் கடுமையான பண நெருக்கடிகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள், கடன் தொல்லைகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை நாணயக் குறைவால் சமுதாயத்தில் மதிப்பு குறைவு நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய்,  மஞ்சள் காமாலை உண்டாகும். எதிர்பாராத கண்டங்களும், சோதனைகளும் ஏற்படும். குடும்பத்தில்  வறுமை, புத்திரர்களிடையே பகை மற்றும் புத்திர பாக்கியமின்மை, சுப காரியங்களில் தடை, உற்றார் உறவினர்களுடன் விரோதம் செய்யும் தொழில் வியாபாரத்தில் நலிவு நஷ்டம் உண்டாகும். பிராமணர்களில் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, எதிர்பாராத தன விரயங்கள் குடும்பத்தில் நிம்மதி குறைவு, கணவன் மனைவியிடையே ஒற்றுமையின்மை ஏற்படும்.

   ஒருவர் ஜாதகத்தில் 2&ம் இடமும் தனக்காரகன் குருவும் சிறப்பாக, இருந்தால் பொருளாதார நிலை மேன்மையாக அமையும். குரு அந்தனன் என்பதால் தனித்து அமைவதைவிட கிரகங்களின் சேர்க்கையுடன் அமைவதே சிறப்பு. அதிலும் குரு கிரக சேர்க்கையுடன் ஆட்சி உச்சம் பெற்று அமைந்திருந்தால் குரு திசையாக உண்டாக கூடிய நற்பலன்களை வர்ணிக்கவே முடியாது. குரு சந்திரனுக்கு கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் கஜகேசரி யோகமும், திரிகோண ஸ்தானங்களில் அமைந்தால் குரு சந்திர யோகமும், செவ்வாய்க்கு கேந்திரத்தில் அமைந்தால் குருமங்கள யோகமும், குரு உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களிலிருந்தால் ஹம்ச யோகமும், கேது சேர்க்கை பெற்றால் கோடீஸ்வர யோகமும், ராகு சேர்க்கைப் பெற்றால் சண்டாள யோகமும் உண்டாகிறது. இந்த கிரக சேர்க்கைகள் பெற்ற தசா புக்தி வரும் போது அனுகூலமான நற்பலன்களை அடைய முடியும்.

   புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் குருவுக்குரியதாகும். இந்த  நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு குருதிசை முதல் திசையாக வரும்  குரு பலம் பெற்று குரு திசை முதல் திசையாக குழந்தை பருவத்தில் நடைபெற்றால் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியம், சுறுசுறுப்பு, பெற்றோருக்கு மேன்மை உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல், தெய்வீக எண்ணம் பரந்த மனப்பான்மை, மற்றவர்களிடம் நல்ல பெயரை எடுக்கும் அமைப்பு உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் தாராள தன வரவுகள் நல்ல பழக்க வழக்கம், பொது நலப் பணிகளில்  ஈடுபடும் அமைப்பு சமுதாயத்தில் கௌரவமான நிலை ஏற்படும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் நாட்டம், தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு பரந்த மனப்பானமை யாவும் உண்டாகும்.

    குரு பலமிழந்திருந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு வயிறு கோளாறு உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் தடை, வீண் செலவுகளை செய்து மற்றவர்களிடம் அவப் பெயரை எடுக்கும் நிலை ஏற்படும். மத்திம வயதில் நடைபெற்றால் புத்திர வழியில் கவலை, பொருளாதார தடை, குடும்பத்தில் நிம்மதி குறைவு, உறவினர்களிடையே பகை உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் சமுதாயத்தில் அவப்பெயர் தேவையற்ற பழக்க வழக்கங்களால் அவமரியாதை பிறர் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.

              

              குரு திசை குருபுக்தி
     குருதிசையில் குருபுக்தியானது 2 வருடம் 1  மாதம் 18  நாட்கள் நடைபெறும்.  


குருபகவான் பலம் பெற்றிருந்தால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, புண்ணிய நதிகளில் நீராடும் யோகம் ஹோமம், யாகம் போன்றவை செய்யும் வாய்ப்பு, பல வித்தைகளிலும், சங்கீதங்களிலும் தேர்ச்சி கல்வியில் மேன்மை, உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் வாய்ப்பு, பொன் பொருள் சேர்க்கை, அரசு வழியில் உயர்வு, பலரை வழிநடத்தக்கூடிய வாய்ப்பு, குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு உண்டாகும்.

குருபகவான் பலமிழந்திருந்தால் பகைவரால் தொல்லை, பணநஷ்டம், தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்க கூடிய நிலை, மனைவி பிள்ளைகளை விட்டு சன்யாசம் செல்வது, நோயால் பாதிப்பு போன்ற அனுகூல மற்ற பலன்கள் ஏற்படும். 


குருதிசையில் சனி புக்தி

     குருதிசையில் சனிபுக்தியானது 2 வருடம் 6 மாதம் 12 நாட்கள் நடைபெறும். 

சனி பலம் பெற்றிருந்தால் தன தான்யம் பெருகும், இரும்பு சம்மந்தப்பட்டத் தொழிலில் அதிக லாபம் கிட்டும். சேமிப்பு பெருகும். அரசு வழியில் உயர்வான பதவிகள் கிட்டும். வண்டி வாகன யோகம், சேமிப்பு பெருகும் யோகம், அதிக வேலையாட்களை அமர்த்தி சிறப்பாக வேலை வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும்.

சனி பகவான் பலமிழந்திருந்தால் பண வரவுகளில் நஷ்டம், அரசு வழியில் தொல்லை, அபராதம் செலுத்தும் நிலை உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்துகள், பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களால் பிரச்சனைகளை சந்திக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.

குருதசா புதன் புக்தி

     குருதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 3மாதம் 6நாட்கள் நடைபெறும்.

புதன் பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஈடுபாடு, கணக்கு, கம்பூயூட்டர் துறையில் நாட்டம், ஆடை ஆபரண சேர்க்கை, நல்ல வித்தைகளை கற்று தேறும் அமைப்பு, தொழில் வியாபாரம் உத்தியோகத்தில் உயர்வு, குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூட  கூடிய அமைப்பு போன்ற நற்பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

புதன் பலமிழந்திருந்தால் கல்வியில் மந்த நிலை ஞாபகசக்தி குறைவு, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் உடல் நிலை பாதிப்பு, குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள், மனைவி  பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு தாய் மாமன் வழியில் விரோதம், செல்வம் செல்வாக்கு குறைவு போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
   
குருதசா கேதுபுக்தி
     
குருதிசையில் கேது புக்தியானது 11 மாதங்கள் 6 நாட்கள் நடைபெறும். 

கேது பகவான் நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் நல்ல புகழ் பெயர் கௌரவம் உண்டாகும். தன தான்ய லாபங்கள் கிட்டும். ஆடை ஆபரண சேர்க்கை, உறவினர்களின் உதவி, மந்திரங்கள் யாகம் ஹோமம் கற்பது, செய்வது போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக தூரதேசங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். எடுக்கும் காரியங்களில் நற்பலன் ஏற்படும்.

கேது பகவான் நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் பயம், கல்வியில் மந்த நிலை, வம்பு வழக்குகளில் தோல்வி இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவு, எடுக்கும் காரியங்களில் தடை, இடம் விட்டு இடம் போக கூடிய சூழ்நிலை வாழ்வில் நிறைய அவமானங்கள் ஏற்படகூடிய நிலை, எதிர்பாராத விபத்துக்களில்  சிக்கும் நிலை கருசிதைவு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு போன்ற அனுகூல மற்ற பலன்கள் ஏற்படும்.

குருதசா சுக்கிர புக்தி

      குருதிசையில் சுக்கிர புக்தியானது 2 வருடம் 8 மாதங்கள் நடைபெறும். 

சுக்கிரன்  பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், பூரிப்பு, சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, சுகவாழ்வு, பொன், பொருள் ,ஆடை, ஆபரண, வண்டி வாகன சேர்க்கை, சொகுசான வீடு, அலங்காரப் பொருட்கள் யாவும் அமையும். உத்தியோகம், தொழில் வியாபாரம் போன்றவற்றில் உயர்வு, அரசு வழியில் கௌரவங்கள் அமையும். உடல் நலமும் சுறுசுறுப்பாக இருக்கும்.

சுக்கிரன் பலமிழந்திருந்தால் உடல்நலக்குறைவு, மர்ம ஸ்தானங்களில் நோய், பணவிரயம், வறுமை, கணவன் மனைவியிடையே இல்வாழ்வில் ஒற்றுமை குறைவு, பெண்களால் அவமானம் உண்டாகும். பொன் பொருளை இழக்க நேரிடும்.

குருதிசை சூரிய புக்தி

      குருதிசை சூரிய புக்தியானது 9 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.  

சூரியன் பலம் பெற்று அமைந்திருந்தால் பெற்ற தந்தை, தந்தை வழி உறவுகளால் அனுகூலம், மனைவி பிள்ளைகளால் உயர்வு, ஆடை ஆபரண சேர்க்கை, நல்ல பூமி மனை வீடு வண்டி வாகன யோகங்கள், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திசாலித்தனம், நினைத்ததை முடிக்கும் ஆற்றல், ஆலயங்களுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும்.

சூரியன் பலமிழந்திருந்தால், குழந்தைகளுக்கு தோஷம், பணவிரயம், உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு, கண்களில் பாதிப்பு, இடம் விட்டு இடம் போக கூடிய சூழல், தந்தைக்கு தோஷம், தந்தையிடம் விரோதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.


குரு திசையில் சந்திர புக்தி       

குருதிசையில் சந்திரபுக்தியானது 1வருடம் 4மாதங்கள் நடைபெறும். 

சந்திரன் பலம் பெற்றிருந்தால் அரசாங்க வழியில் அனுகூலம், பெயர் புகழ் செல்வம் செல்வாக்கு உயரக் கூடிய யோகம், வீடு மனை, வண்டி வாகன யோகங்கள், குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, உயர்தரமான உணவுகளை உண்ணும் அமைப்பு, கடல் கடந்து பயணங்கள் செய்யும் வாய்ப்பு அவற்றால் அனுகூலங்கள் உண்டாகும்.

   சந்திரன் பலமிழந்திருந்தால் ஜலதொடர்புடைய பாதிப்புகள், பயணங்களால் அலைச்சல் டென்ஷன் தாய்க்கு தோஷம், தாய்வழி உறவுகளிடையே பகைமை மனசஞ்சலம், குழப்பம், தனவிரயம், துக்கம், பெயர் புகழ் பாதிக்கப்படக் கூடிய நிலை, ஊர் விட்டு , நாடு விட்டு, வெளியூர் வெளிநாடுகளில் அலைந்து திரிய வேண்டிய நிலை, சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்படும்.

குருதிசை செவ்வாய் புக்தி

     குருதிசையில் செவ்வாய் புக்தி காலங்களானது 11 மாதம் 6 நாட்கள் நடைபெறும். 

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி மனை போன்றவற்றால் சம்பாதிக்கும் அமைப்பு, சேரும் யோகம், அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர்வு, அதிகாரமிக்க பதவிகளை வகுக்கும் யோகம், உடன் பிறப்புகளால் லாபம், தொழில் வியாபாரத்தில் மேன்மை, திருமண சுப காரியங்கள் கை கூடும் வாய்ப்பு போன்ற நற்பலன்கள் அமையும்.

செவ்வாய் பலமிழந்திருந்தால் பங்காளி மற்றும் உடன் பிறப்புகளிடையே பகை, தேவையற்ற வம்பு வழக்கு, உடல் நலத்தில் பாதிப்பு, வெட்டு காயங்கள், வண்டி வாகனங்களால் விபத்து, சிறை தண்டனை, பெண்களால் ஆபத்து, வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் நிலை, பைத்தியம் பிடிக்க கூடிய நிலை, மனக்குழப்பங்கள் அக்னியால் பாதிப்பு போன்றவை உண்டாகும்.

குருதிசையில் ராகுபுக்தி

      குருதிசையில் ராகுபுக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நாட்கள். 

ராகு பலம் பெற்று, ராகு நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்றிருந்தால் சற்று நன்மை தீமை கலந்த பலன்களை அடைய முடியும். அரசு வழியில் சிறு சிறு சோதனைகளை சந்தித்தாலும் எதிர்பாராத திடீர் தனவரவுகளும் கொடுக்கும்.

ராகு பலமிழந்திருந்தால் பணவிரயம் திருடர்கள் மற்றும், பகைவரால் பயம், எதிர்பாராத கலகம், உடல் நிலை பாதிப்பு, தோல் நோய்கள் மனதில் துக்கம், பணவிரயங்கள் உண்டாகும்.

குருவுக்குரிய பரிகாரங்கள்

வியாழக் கிழமைகளில் விரதமிருந்து குரு தட்சினா மூர்த்திக்கு கொண்டை கடலையை ஊற வைத்து மாலையாக கோர்த்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து நெய் திபமேற்றி வழிபடுவது நல்லது. ஐந்து முக ருத்ராட்சம் அணிவது குரு எந்திரம் வைத்து வழிபாடு செய்வது, சர்க்கரை நோட்டு புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை பிராமணர்களுக்கு தானம் செய்தல், வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது உத்தமம். புஷ்பராக கல்லை அணிவது நற்பலனை தரும்.

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
Guest Faculty For M.Sc. B.Sc. astrology, KARPAGAM UNIVERSITY, Coimbatore.
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.


புதன் திசை



புதன் திசை மொத்தம் 17 வருடங்களாகும். புதன் பகவான் கல்விகாரகன் ஞானகாரன் தாய் மாமனுக்கு காரகனாக விளங்குகிறார். கணக்கு, கம்பியூட்டர் சம்மந்தப்பட்டவைகளுக்கும், கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றிற்கும் காரகனாகிறார். நல்ல ஞாபக சக்தி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நரம்பு தொடர்புடைய பிரச்சனைகளுக்கும் காரகம் வகுக்கிறார்

புதன் சுப கிரக சேர்க்கை பெற்றால் சுபராகவும், பாவிகள் சேர்க்கைப் பெற்றால் பாவியாகவும் செயல்படுவார். புதன் சுபராக இருந்தால் கேந்திர திரிகோண ஸ்தானங்களிலிருந்தால் மிகவும் சிறப்பு. அதுவே பாவியாக இருந்தால் 3,6,10,11 ஆகிய ஸ்தானங்களில் இருந்தால் நற்பலன்களை வழங்குவார்.

புதனுக்கு சுக்கிரன் சனி நட்புகிரகங்களாகும். புதன் இந்த நட்சத்திரங்களின் சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்தாலும், இவர்களின் வீட்டிலிருந்தாலும் புதன் திசை வரும் காலங்களில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். சொந்த தொழில் யோகத்தை கொடுக்கும். நல்ல அறிவாற்றல் பேச்சு திறன் ஞாபக சக்தி, பலரை வழி நடத்தி செல்லும் ஆற்றல் உண்டாகும். பல லட்சங்கள் சம்பாதிக்கும் யோகம் அமையும்.

அதுவே புதன் பலமிழந்திருந்தால், முட்டு வலி, கை கால் வலி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், ஆண்மை  குறைவு, உடல் பலவீனம் உண்டாகும். பலவகை பிரச்சனைகளும் தேடி வரும்.

   ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு புதன் திசை முதல் திசையாக வரும் பலமாக அமைந்து புதன் திசையானது. ஒருவருக்கு குழந்தை பருவத்தில் நடைபெற்றால் நல்ல அறிவாற்றல் அழகான பேச்சுத் திறன் உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் சாதனைகள் செய்யும் அமைப்பு, நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல், பெரியோர்களின் ஆசி போன்ற யாவும் அமையும். மத்திம வயதில் நடைபெற்றால் நல்ல அறிவாற்றல் கௌரவமான பதவிகளை அடையும் வாய்ப்பு பேச்சு திறனால் சமுதாயத்தில் நல்ல கௌரவமும் உயர்வு போன்ற யாவும் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் கௌரவ பதவிகளை வகிக்கும் வாய்ப்பு நல்ல ஞாபக சக்தி, மற்றவர்களை வழி நடத்தி செல்லும் ஆற்றல், சுறுசுறுப்புடன் செயல்படும் திறன், உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும்.

   அதுவே புதன் பலமிழந்திருந்து  குழந்தைப் பருவத்தில் திசை நடைபெற்றால் காதுகளில் கோளாறு, பேச்சில் தெளிவில்லாமை மந்த நிலைமை கொடுக்கும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் தடை, உடல் பலஹீனம், ஞாபகமறதி  நெருங்கியவர்களிடையே பகை, பேச்சில் நிதானமின்மை உண்டாகும். மத்திம வயதில் நடைபெற்றால் மனக்குழப்பம், இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றமின்மை, உற்றார் உறவினர்களிடையே பகை, நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் நரம்பு தளர்ச்சி ஞாபகமறதி, மூளையில் பாதிப்பு, உடல் பலவீனம், பொருளாதார நெருக்கடி, உறவினர்களிடையே பகை உண்டாகும்.

புதன்தசா புதன்புக்தி

  புதன் திசையில் புதன் புக்தியானது 2 வருடம் 4 மாதம் 27 நாட்கள் நடைபெறும். 

புதன் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், உயர்வான அதிகாரம் பெற்று வாழம் அமைப்பு, மனைவி பிள்ளைகளால் அனுகூலம், குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, புத்திர வழியில் பூரிப்பு, புதுமையான வீடு, ஆடை ஆபரண கேர்க்கை போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

புதன் பலமிழந்திருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு ஆரோக்கிய பாதிப்பு, கலகம் துக்கம், ஞாபகமறதி ஊர் விட்டு  ஊர் சுற்றி திரியும் அமைப்பு, கெட்ட பெண்களின் சகவாசம், நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை நரம்பு தளர்ச்சி போன்ற அனுகூல மற்ற பலன்கள் ஏற்படும். உறவினர்களின் ஆதரவும் குறையும்.
   
புதன்திசா கேதுபுக்தி

   புதன் திசையில் கேது புக்தியானது 11மாதம் 27நாட்கள் நடைபெறும். 

கேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் வண்டி வாகன யோகம், வியாபாரத்தில் மேன்மை, மனைவி பிள்ளைகளால் மகிழச்சி, பூமி மனை வாங்கும் யோகம், தாராள தனவரவு, பெண்களால் அனுகூலம் நவீன பொருட்கள் சேரும் யோகம், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, தெய்வ தரிசனங்களுக்காக பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் குடும்பத்தில் கலகம், அடிமை வாழ்க்கை, அதிக பயம் வண்டி வாகனங்களால் நஷ்டம், பணவிரயம், பூர்வீக சொத்துகளால் பிரச்சனை பிரிவு, உத்தியோகத்தில் தேவையற்ற இடமாற்றம், தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை உண்டாகும்.

புதன்திசா சுக்கிர புக்தி

புதன் திசையில் சுக்கிர புக்தியானது 2வருடம் 10மாதம் ந¬பெறும். 

சுக்கிர பகவான் பலமாக அமைந்திருந்தால் தான தருமங்கள் செய்யும் வாய்ப்பு, வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் புத்திர பாக்கியம் உண்டாகும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம், அதிகாரமுள்ள பதவிகள் அடையும் யோகம் ஊதிய உயர்வுகள், நண்பர்களால் உதவி, முதலாளிகளிடையே ஒற்றுமை, பெண்களால் அனுகூலம் ஆடை ஆபரண சேர்க்கை யாவும் உண்டாகும்.

சுக்கிரன் பலமிழந்திருந்தால் உடல் நிலை பாதிப்பு, மர்ம ஸ்தானங்களில் நோய், சர்க்கரை வியாதி, குடும்பத்தில் வறுமை, மனைவி பிள்ளைகளுக்கு கண்டம், எடுக்கும் முயற்சிகளில் தடை சுகவாழ்வு பாதிப்பு, ஈனப் பெண்களின் தொடர்புகளால் அவமானம், வீண் விரயங்கள் உண்டாகும். 


புதன்திசை சூரிய புக்தி

    புதன் திசையில் சூரிய புக்தியானது 10மாதம் 6நாட்கள் நடைபெறும். 

சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசியலில் பெயர் புகழ் கௌரவம் உயரக்கூடிய வாய்ப்பு, எடுக்கும் காரியங்களில் வெற்றி, பகைவரை வெற்றி கொள்ள கூடிய வலிமை வல்லமை தந்தை, தந்தை வழி உறவுகளால் அனுகூலம் மனைவி பிள்ளைகளால் மகிழச்சி உண்டாகும். அரசு வழியில் அனுகூலங்கள் கிட்டும்.

சூரியன் பலமிழந்திருந்தால் பகைவர்களால் விரோதம், தேவையற்ற வம்பு வழக்குகள், தனவிரயம் வண்டி வாகன இழப்பு, தந்தைக்கு தோஷம், தந்தை வழியில் அனுகூலமற்ற நிலை, உறவினர்களிடம் விரோதம், மனைவி பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு, உஷ்ண கோளாறு, கண்களில் பாதிப்பு அரசு வழியில் தொல்லை உண்டாகும்.

புதன் திசையில் சந்திரபுக்தி

    புதன் திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 5 மாதங்கள் நடைபெறும். 

சந்திரன் பலம் பெற்றிந்தால் அனுகூலமான பயணங்கள், வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடும் யோகம், பணவரவுகளில் மகிழ்ச்சி எடுக்கும் காரியங்களில் வெற்றி, அரசு வழியில் அனுகூலம், ஆடை ஆபரண சேர்க்கை, பூமி மனையால் யோகம், ஆடம்பரமான உணவுகளை உண்ணும் யோகம், நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். ஜலதொடர்புடைய தொழில் ஏற்றம் ஏற்படும்.

சந்திரன் பலமிழந்திருந்தால் பயணங்களால் தேவையற்ற அலைச்சல், ஜலத்தால் கண்டம், மனதில் வீண் குழப்பம், நிம்மதியற்ற நிலை, உடல் நிலையில் பாதிப்பு, மனைவி மற்றும் தாயிக்கு தோஷம், வம்பு வழக்குகள்  தோல்வி, எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும் மனநிம்மதி குறையும்.

புதன்திசையில் செவ்வாய் புக்தி
   
புதன் திசையில் செவ்வாய் புக்தியானது 11 மாதம் 27நாட்கள் நடைபெறும். 

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி மனை யோகம், வண்டி வாகனங்கள்  வாங்கும் வாய்ப்பு, அரசு வழியில் அனுகூலம், நல்ல நிர்வாகத்திறன், தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, உடல் நலத்தில் சிறப்பு, எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். 

செவ்வாய்  பலமிழந்திருந்தால் ரத்த சம்மந்தமான பாதிப்புகள், உடலில் காயம்படும் அமைப்பு உடன் பிறப்புகளிடையே வீண் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை, காரியத்தடை, எதிர்பாராத விபத்தால் கண்டம் உண்டாகும்.

புதன் திசையில் ராகுபுக்தி

    புதன் திசையில் ராகுபுக்தியானது 2&வருடம் 6&மாதம் 18&நாட்கள் நடைபெறும். 

ராகு பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் மேன்மை, உயர் பதவிகளை வகுக்கும் யோகம் புதுமையான விஷயங்களில் ஈடுபாடு வீடு மனை ஆடை ஆபரண சேர்க்கை, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் பகைவரை வீழ்த்தும் பலம் உண்டாகும்.

ராகு பலமிழந்து நின்ற வீட்டதிபதியும் பலமிழந்திருந்தால் தீய  நட்புகளால் பிரச்சனை, உணவே விஷமாக கூடிய நிலை, விஷ பூச்சிகளால் ஆபத்து, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, வியாதி, மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள், தற்கொலை எண்ணம், இடம் விட்டு இடம் அலையும் அவ நிலை  பகைவர்களால் தொல்லை போன்றவை உண்டாகும்.

புதன் திசையில் குருபுக்தி
   
புதன் திசையில் குருபுக்தியான 2வருடம் 3மாதம் 6நாட்கள் நடைபெறும். 

குருபகவான் பலம் பெற்றிருந்தால் தாராள தனவரவு, குடும்பத்தில் சுப காரியம் கைகூடும் அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு, ஆடை ஆபரண சேர்க்கை பூமி மனை, வண்டி வாகனங்கள் சேரும் யோகம்  குடும்பத்தில் சுபிட்சம், புத்திர வழியில் பூரிப்பு, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பூர்வீக சொத்துகளால் லாபம் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

குரு பலமிழந்திருந்தால் உடல் நிலை பாதிப்பு உறவினர்களிடையே பகை, பூமி மனை வண்டி வாகன இழப்பு, பிராமணர்களின் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, குடும்பத்தில் பிரச்சனை, சுபகாரியங்களுக்கு தடை உண்டாகும்.

புதன் திசையில் சனி புக்தி

   புதன் திசையில் சனி புக்தியானது 2&வருடம் 8&மாதம் 9&நாட்கள் நடைபெறும். 

சனி பகவான் பலம் பெற்றிருந்தால் தொழில் வியாபாரம் முலம் லாபம், இரும்பு சம்பந்தபட்ட தொழிலில் அனுகூலம்  நிறைய வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் வாய்ப்பு, தன தான்ய விருத்தி, ஆடை ஆபரணம் சேரும் அமைப்பு, புண்ணிய தீர்த்த யாத்திரை, தெய்வ பக்தி உண்டாகும் அமைப்பு, தாய் தாய் வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.

சனி பலமிழந்திருந்தால் விபத்துகளை சிந்திக்கும் நிலை, தூர பிரதேஷங்களில் சென்று வாழும் நிலை, உறவினர்களுடன் விரோதம் கலகம் அரசு வழியில்  அனுகூலமற்ற நிலை, திருமணதடை வீண் பழி, வம்பு வழக்குகளை  சந்திக்கும் நிலை எடுக்கும் காரியங்களில் தோல்வி போன்ற சாதகமற்ற நிலை உண்டாகும்.

புதன் பகவானுக்கு பரிகாரங்கள்
    
விஷ்ணு பகவானை புதன் கிழமைகளில் விரதமிருந்து வழிபாடு செய்வது, சதர்சன ஹோமம் செய்வது, சதர்சன எந்திரம் வைத்து வழிபடுவது பச்சை பயிறு, பச்சை நிற ஆடை,நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை படிக்கும் பிள்ளைகளுக்கு தான அளிப்பது நல்லது. மரகதக்கல் மோதிரத்தையும் அணியலாம்.

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
Guest Faculty For M.Sc. B.Sc. astrology, KARPAGAM UNIVERSITY, Coimbatore.
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.


Monday, February 4, 2013

சனிதிசை




    சனிதிசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும். நவகிரகங்களில் சனி ஆயுள் காரகன் என்பதால் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு சிறப்பான ஆரோக்கியம் யாவும் அமையும். சனி ஒரு பாவ கிரகம் என்பதால் 3,6,10,11 போன்ற ஸ்தானங்களில் அமைவது நல்லது. அது போல சனிக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்தாலும் இக்கிரகங்களின் வீடுகளின் இருந்தாலும் சனி திசை நடைபெறும் காலங்களில் செல்வம் செல்வாக்கு யாவும் தேடி வரும். சனி மக்கள் காரகன் என்பதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியலில் உயர்பதவிகளும் தேடி வரும். லட்ச லட்சமாக சம்பாதிக்கும் அமைப்பு கொடுக்கும் சனி பகவான் கொடுக்க ஆரம்பித்தால் யாராலும் தடுக்க முடியாது. இத்திசை காலங்களில் பூமி மனை, வண்டி வாகன சேர்க்கைகள், செல்வம் செல்வாக்கு யாவும், நிறைய கடன் வாங்கும் தைரியமும் அதனால் வாழ்வில் முன்னேற கூடிய வாய்ப்பு கடன்களையும் அடைக்க கூடிய வல்லமை போன்ற யாவும் அமையும். பலரை வழி நடத்தி செல்லும் வாய்ப்பு, வேலையாட்களால் அனுகூலம் பழைய பொருட்கள், இரும்பு சம்மந்தப்பட்டவை போன்ற வற்றாலும் அனுகூலம் உண்டாகும்.

   அதுவே சனி பகவான் பலமிழந்திருந்து திசை நடைபெற்றால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், எலும்பு தொடர்புடைய நோய்கள் உண்டாகும். அதிலும் சூரியனின் வீட்டிலோ, சாரத்திலோ சனி அமைந்தால் தாய் தந்தையருக்கு பாதிப்பு, கல்வியில் தடை, தகுதிக்கு குறைவான வேலைகளை செய்யும் அமைப்பு, வேலையாட்களால் பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் பகை உண்டாகும். நிறைய கடன் வேண்டிய சூழ்நிலையும் அதை அடைக்க முடியாமல் அவப்பெயரும் உண்டாகும். மற்றவரால் வெறுக்க கூடிய நிலை ஏற்படும். பொருளாதார நிலையும் மந்தமடையும்.

   பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் சனிக்குரியதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனிதிசை முதல் திசையாக வரும். சனி பலம் பெற்று அமைந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட அயுள், தாய் தந்தையருக்கு அனுகூலம் உண்டாகும். இளம் வயதில் நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் அமைப்பு, கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் கடின உழைப்பை மேற்கொண்டு பல்வேறு வழியில் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டாகும். வேலையாட்களால் அனுகூலமும் பலரை வைத்து வேலை வாங்கும் யோகமும் சமுதாயத்தில் செல்வம் செல்வாக்குடன் வாழம் அமைப்பு  கொடுக்கும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் பலரை வழிடைத்தும் அமைப்பு நோயற்ற வாழ்க்கை அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

   அதுவே சனி பலமிழந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் அற்ப ஆயுள், அடிக்கடி நோய்கள் ஏற்பட கூடிய அமைப்பு மந்த நிலை கொடுக்கும். இளம் வயதில் நடைபெற்றால் ஆரோக்கியத்தில் பாதிப்பு, கல்வியில் தடை, சோம்பேறி தனம் பெரியோர்களிடம் கருத்து வேறுபாடு கொடுக்கும். மத்திம வயதில் நடைபெற்றால் சோம்பேறி தனம் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை, அடிமை தொழில் அமையும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் பொருளாதார நெருக்கடி ஆரோக்கியத்தில் பாதிப்பு, கண்டங்கள் ஏற்படும் சூழ்நிலை மன நிம்மதி குறைவு உண்டாகும்.

    சனி பலமின்றி அமைந்திருந்தால் தனித்து சொத்துகள் வாங்குவதோ, கடன்கள் வாங்குவதோ கூடாது. பேச்சில் நிதானமுடன் செயல் படுவது நல்லது. 

சனி திசை சனிபுக்தி

    சனிதிசை சனி புக்தியானது 3 வருடங்கள் 3 நாட்கள் நடைபெறும். 

சனிபலம் பெற்று அமைந்திருந்தால் இரும்புப் பொருட்கள் மற்றும் வண்டி வாகனங்களால் அனுகூலங்கள், அரசு வழியில் அனுகூலம், பெயர் புகழ் உயரும் வாய்ப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, பகைவரும் நட்பாக மாறும் அமைப்பு, உற்றார் உறவினர்களால் உதவி, மனைவி பிள்ளைகளுடன் ஒற்றுமை, ஆசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் போன்ற யாவும் உண்டாகும்.

   சனி பலமிழந்திருந்தால் தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வேலையாட்களால் நிம்மதி குறைவு, மறைமுக எதிர்ப்புகளும் பகைவர்களும் அதிகரிக்க கூடிய நிலை, தேவையற்ற மனசஞ்சலம், பணநஷ்டம் மனைவி புத்திரர்களால் கடன் படும் நிலை, சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை, எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், வீண்பழிகளை சுமக்கும் நிலை, சிறை செல்லும் அமைப்பு போன்றவை ஏற்படும்.

சனிதிசை புதன் புக்தி

   சனிதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.

புதன் பலம் பெற்றிருந்தால்  திருமண சுப காரியங்கள் கை கூடும் வாய்ப்பு, உற்றார் உறவினர் மற்றும் பங்காளிகளிடையே சமுகமான நிலை, நல்ல அறிவாற்றல், ஞாபக சக்தி புத்தி சாலிதனம், கல்வியில் ஏற்றம், கணக்கு கம்பியூட்டர் துறைகளிலும், கலை துறைகளிலும் ஈடுபாடு உண்டாகும். ஏஜென்ஸி கமிஷன் மூலம் அனுகூலம் உண்டாகும். கவிதை கட்டுரை எழுத்து துறையில் ஆர்வம் ஏற்படும். தாய் மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும்.

புதன் பலமிழந்திருந்தால் உறவினர்களிடம் பகைமை, மனைவி பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு கலகம், பகைவரால் பயம், ஞாகசக்தி குறைவு, தலைவலி, நரம்பு தளர்ச்சி, இடம் விட்டு இடம் மாறும் நிலை, கல்வியில் ஈடுபாடு குறைவு, தாய் வழி உறவுகளிடையே பிரச்சனை ஏற்படும்.

சனி திசை கேதுபுக்தி

    சனி திசை கேது புக்தியானது 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் நடைபெறும். 

கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் வண்டி வாகன யோகம், மனைவிப் பிள்ளைகளால் மேன்மை, நண்பர்களின் உதவி ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்க்கொள்ளும் வாய்ப்பு உணடாகும். உத்தியோகத்திலும் உயர்வுகள் கிட்டும். சேமிப்பு பெருகும். 

கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் சொந்த பந்தங்களுடன் விரோதம் பெண்களால் பிரச்சனை, கலகம், பிரயாணங்களில் எதிர்பாராத விபத்து, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, பணவிரயம், உடல் நிலையில் பாதிப்பு, இடம் விட்டு இடம் சென்று வாழ வேண்டிய நிலை, மனநிலை பாதிப்பு, உத்தியோகத்தில் எதர்பாராத மாற்றம் போன்றவை உண்டாகும்.

சனிதிசை சுக்கிர புக்தி

    சனிதிசையில் சுக்கிரபுக்தி 3வருடம் 2மாதம் நடைபெறும். 

சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, இல்லற வாழ்வில் இனிமை, அழகிய குழந்தை பாக்கியம், புதிய வீடு மனை, வண்டி வாகன யோகம், ஆடை ஆபரண சேர்க்கை, உறவினர்களால் உதவி, அரசாங்கத்தால் அனுகூலம், கலைத்துறையில் ஈடுபாடு, தொழில் வியாபார நிலையில் மேன்மை உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் கிடைக்கும்.

    சுக்கிரன் பலமிழந்திருந்தால் பல பெண்களுடன் தொடர்பு கொள்ளும் அவல நிலை, அவமானம், இடமாற்றம், உற்றார் உறவினர்களிடையே வீண் பழி வறுமை, பயம், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கடன் பிரச்சனைகள், சர்க்கரை நோய், சிறு நீரக கோளாறு வண்டி வாகனம், வீடு மனை போன்றவற்றை இழக்கும் அவலநிலை உண்டாகும்.

சனிதிசை சூரிய புக்தி
    
சனிதிசையில் சூரிய புக்தி 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும். 

சூரியன் பலம் பெற்று அமைந்திருந்தால் அரசு வழியில் அதிகார மிக்க பதவிகளை பெறும் அமைப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, பிதுர் வழியில் சிறப்பு உறவினர்களால் உதவி எடுக்கும் காரியங்களில் வெற்றி, உடல் நிலையில் சிறப்பு, தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்களும் உயர்வுகளும் உண்டாகும்.
சூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷம், தந்தை வழி உறவுகளிடையே பகை குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கண்களில் பாதிப்பு, இருதய கோளாறு, அரசு வழியில் பிரச்சனைகள், பணவிரயம் தொழில் வியாபாரத்தில் லாபமற்ற நிலை ஏற்படும்.

சனிதிசையில் சந்திர புக்தி

    சனி திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 7 மாதங்கள் நடைபெறும். 

சந்திரன் பலம் பெற்றிருந்தால் பயணங்களால் அனுகூலம், ஜலதொடர்புடைய தொழில்களால் லாபம், அசையும் அசையா சொத்துக்களால் லாபம், குடும்பத்தில் ஒற்றுமை, மனைவி பிள்ளைகளால் அனுகூலம், ஆடை ஆபரண மற்றும் வண்டி வாகன சேர்க்கைகள், ஆலய தரிசனம் செய்ய கூடிய வாய்ப்பு, தாய் தாய் வழி உறவுகளால் அனுகூலங்கள் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

    சந்திரன் பலமிழந்திருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள், மனநிலை பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனைகள் ஜலத்தால் கண்டம், பயணங்களால் அனுகூலமற்ற நிலை, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, நாடு விட்டு நாடு சென்று அலையும் அவல நிலை, வயிறு மற்றும் சிறு நீரக பிரச்சனைகள் ஏற்படும்.

சனி திசையில் செவ்வாய் புக்தி

   சனி திசையில் செவ்வாய் புக்தி 1வருடம் 1மாதம் 9மாதங்கள் நடைபெறும். 

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் அரசு வகையில் ஆதரவு, பெரிய உயர்பதவிகளை வகுக்கும் யோகம், சகோதர வழியில் அனுகூலம், மனை பூமி வீடு, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபார நிலையில் உயர்வு, தன தான்ய விருத்தி, எதிரிகளை வெல்லும் ஆற்றல், தைரியம் துணிவு யாவும் உண்டாகும்.

    சனி செவ்வாய் இணைந்தே, பார்த்துக் கொண்டோ இருந்தால் எதிர்பாராத விபத்துக்களால் ரத்த காயம் படுதல், அறுவை சிகிச்சை செய்யக் கூடிய நிலை, பூமி மனை இழப்பு, பங்காளிகளிடையே வீண் விரோதம், பகைவர்களால் ஆபத்து ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகள், குடும்பத்தில் பிரச்சனை அரசு வழியில் அனுகூலமற்ற பலன் தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வண்டி வாகனங்களால் வீண் விரயம் ஏற்படும்.

சனிதிசையில் ராகு புக்தி

    சனி திசையில் ராகு புக்தியானது 2வருடம் 10மாதம் 6நாட்கள் நடைபெறும்.

ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று அமைந்திருந்தால் வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு, அரசு வழியில் அனுகூங்கள், பதவி உயர்வு, தாராள தன வரவு, தெய்வ அருளை பெறும் வாய்ப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, கமிஷன் ஏஜென்ஸி மூலம்  அதிகம் சம்பாதிக்கும் அமைப்பு கொடுக்கும்.

    ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மன கவலை, எதிர்பாராத விபத்துக்களால் கண்டம், வயிறு கோளாறு, விஷத்தால் கண்டம், உண்ணும் உணவே விஷமாகும் நிலை, விஷ பூச்சிகளால் பாதிப்பு, ஜீரம், தோல் நோய், குடும்பத்தில் பிரச்சனை மேலிருந்து தவறி கீழே விழும் நிலை, தவறான பெண் தொடர்பு, இடம் விட்டு இடம் சென்று திரியும் அவலநிலை உண்டாகும்.

சனிதிசையில் குரு புக்தி

சனிதிசையில் குருபுக்தி 2வருடம் 6மாதம் 12நாட்கள் நடைபெறும். 

குரு பகவான் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, மனைவி பிள்ளைகளால் அனுகூலம், திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, அழகிய புத்திர பாக்கியம் உண்டாகும் யோகம், புத்திர வழியில் பூரிப்பு, பெரிய மனிதர்களில் தொடர்பு உயர் பதவிகளை வகுக்கும் ஆற்றல், செல்வம் செல்வாக்கு உயரும் நிலை, தெய்வீக ஆன்மீக  பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

குரு பலமிழந்திருந்தால் தன தான்யம் நலிவடையும், பெரியோர்களிடம் வீண் சண்டை சச்சரவு பிராமணர்களின் சாபம், பிள்ளைகளால் மனசஞ்சலம், கருசிதைவு, அரசு வழியில் அவமானங்கள் கொடுக்கல் வாங்களில் பிரச்சனைகள் ஏற்படும்.

சனிக்குரிய பரிகாரங்கள்

    சனிக்கிழமைகளில் விரதமிருந்து கறுப்பு துணி, கறுப்பு எள்ளை முட்டை கட்டி அகல் விளக்கில் வைத்து எள் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடுவது, சனிபகவானுக்கு கறுப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது, எள் கலந்த அன்னம் படைத்து காக்கைக்கு வைப்பது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது உத்தமம். சனிப் பரீதி ஆஞ்சநேயரையும் துளசிமாலை, வடைமாலை வெண்ணை முதலியவற்றை சாற்றி வழிபடுவது உத்தமம். நீலக்கல்லை அணிவது உத்தமம்.

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.