Today rasi palan - 03.06.2026
இன்றைய ராசிப்பலன்
- 03.06.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
03-06-2026, வைகாசி 20, புதன்கிழமை, திரிதியை திதி
இரவு 09.21 வரை
பின்பு தேய்பிறை சதுர்த்தி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 01.00 வரை பின்பு உத்திராடம். நாள்
முழுவதும் அமிர்தயோகம்.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 -
12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை
09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
|
சனி |
செவ் |
சூரிய |
புதன் சுக்கி |
|
ராகு |
03.06.2026 |
குரு |
|
|
|
கேது |
||
|
சந்தி |
|
|
|
இன்றைய ராசிப்பலன் - 03.06.2026
மேஷம்
இன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் யோசித்து செயல்பட்டால் வீண்
பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களில் கவனமுடன் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை
விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். ஆடை
ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
கடகம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத
பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும். வங்கி சேமிப்பு உயரும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். செலவுகள் வரவுக்கு மீறி
இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாக சிக்கனமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை தரும்.
கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல்
ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஊழியர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் உதவியால் கடன் சுமை
ஓரளவு குறையும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொன்
பொருள் சேரும்.
விருச்சிகம்
இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.
தனுசு
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவ
வீண் பேச்சை குறைப்பது நல்லது. பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் உதவியும் மகிழ்ச்சியை அளிக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
மீனம்
இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

No comments:
Post a Comment