Today rasi palan - 30.09.2026
இன்றைய ராசிப்பலன்
- 30.09.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர் பாலஜோதிடம்
வார இதழ்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Online consultation at - 0091
7200163001. 9383763001,
Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb
இன்றைய பஞ்சாங்கம்
30-09-2026, புரட்டாசி 13, புதன்கிழமை, சதுர்த்தி திதி
பகல் 02.55 வரை
பின்பு தேய்பிறை பஞ்சமி. பரணி
நட்சத்திரம் காலை
07.37 வரை பின்பு கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 06.03 வரை
பின்பு ரோகிணி. சித்தயோகம் காலை
07.37 வரை பின்பு அமிர்தயோகம் பின்இரவு 06.03 வரை பின்பு சித்தயோகம். கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 -
12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை
09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
|
சனி (வ) |
சந்தி |
|
|
|
ராகு |
30.09.2026 |
செவ் குரு |
|
|
|
கேது |
||
|
|
|
புதன் சுக்கி |
சூரிய |
இன்றைய ராசிப்பலன் - 30.09.2026
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். ஆடை,
ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.
ரிஷபம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண்
பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். வியாபாரத்தில் வேற்று மொழி நபர்களால் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் நீங்கும்.
கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.
சிம்மம்
இன்று தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
கன்னி
இன்று உங்களுக்கு மன உளைச்சலும் குழப்பமும் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 01.13 வரை
சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை மதியத்திற்கு பின் செய்வது உத்தமம்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு பகல்
01.13 பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல்
ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன்
பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன்
பொருள் சேரும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்
இன்று எந்த
செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உடல்
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தேவை
அறிந்து உதவுவார்கள்.
கும்பம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.
மீனம்
இன்று உங்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாக இருக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த வங்கி கடன்
கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
