Thursday, April 23, 2026

Today rasi palan - 23.04.2026

 


Today rasi palan -
23.04.2026

இன்றைய ராசிப்பலன் -  23.04.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

23-04-2026, சித்திரை 10, வியாழக்கிழமை, சப்தமி இரவு 08.49 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 08.57 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் இரவு 08.57 வரை பின்பு சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 8.50 மணி முதல் 9.26 மணி வரை.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

சனி செவ் புதன்

சூரிய

சுக்கி

குரு சந்தி

ராகு

 

23.04.2026

 

 

கேது

 

 

  

 

 

இன்றைய ராசிப்பலன் - 23.04.2026

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் ஓரளவு குறையும்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் நீங்கும். வருமானம் பெருகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். அலுவலகத்தில் வேலைபளு கூடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.

சிம்மம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வங்கி சேமிப்பு உயரும்.

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அனுபவமுள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.

துலாம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வண்டி வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் தோன்றும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வேலை பளு குறையும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு பகல் 3.13 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மாலை நேரத்திற்கு பிறகு உங்களுக்கு இருக்கும் நெருக்கடிகள் குறையும்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் பாதியில் தடைபட்டு உங்களுக்கு மனஉளைச்சலை உண்டாக்கும். உங்கள் ராசிக்கு பகல் 3.13 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்களை தவிர்ப்பது, பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வருமானம் பெருகும். ஆன்மீக செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

மீனம்

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். எடுக்கும் புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

No comments: