Sunday, April 12, 2026

Today rasi palan - 12.04.2026

 


Today rasi palan -
12.04.2026

இன்றைய ராசிப்பலன் -  12.04.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

12-04-2026,  பங்குனி 29, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பின்இரவு 01.17 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. திருவோணம் நட்சத்திரம் பகல் 03.14 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பகல் 03.14 வரை பின்பு மரணயோகம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

சூரிய சனி செவ் புதன்

சுக்கி

 

குரு

ராகு

 

12.04.2026

 

சந்தி

கேது

 

 

  

 

 

இன்றைய ராசிப்பலன் -  12.04.2026

மேஷம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்து வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். பொன் பொருள் சேரும்.

ரிஷபம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பம், கவலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் தோன்றும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை.

கடகம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வீட்டில் பெண்களின் பணிசுமை குறையும். எதிர்பாராத பணவரவுகள் உண்டாகி தேவைகள் நிறைவேறும்.

சிம்மம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக அமைந்து சந்தோஷம் அதிகரிக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வண்டி வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

துலாம்

இன்று நீங்கள் குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்கலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

தனுசு

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். சுப முயற்சிகளில் சிறு தடைகள் உருவாகலாம். நண்பர்களால் மன அமைதி சற்று குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

மகரம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

கும்பம்

இன்று எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

மீனம்

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

No comments: