Today rasi palan - 10.05.2026
இன்றைய ராசிப்பலன்
- 10.05.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
10-05-2026, சித்திரை 27, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பகல்
03.07 வரை பின்பு தேய்பிறை நவமி.
அவிட்டம் நட்சத்திரம் இரவு 12.50 வரை
பின்பு சதயம். மரணயோகம் இரவு
12.50 வரை பின்பு சித்தயோகம். பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மாலை 04.30 -
06.00, எம கண்டம் - பகல் 12.00 -
01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 -
04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 -
11.00.
|
சனி செவ் |
சூரிய புதன் |
சுக்கி |
குரு |
|
ராகு |
10.05.2026 |
|
|
|
சந்தி |
கேது |
||
|
|
|
|
|
இன்றைய ராசிப்பலன் -
10.05.2026
மேஷம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெரியவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும்.
ரிஷபம்
இன்று இல்லம் தேடி இனிய
செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
மிதுனம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை முடிப்பதற்கு தடை
தாமதங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.13 மணி
வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பொருளாதார பிரச்சினைகள் மதியத்திற்கு பின்
சற்று குறையும்.
கடகம்
இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல்
12.13 மணிக்கு மேல்
சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.
சிம்மம்
இன்று எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள்
ஆசைகள் நிறைவேறும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
கன்னி
இன்று எந்த
ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல்
ஆரோக்கியத்தில் சிறு
உபாதைகள் தோன்றி மறையும். பெண்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வார்கள். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
துலாம்
இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்கள் மூலம் மனநிம்மதி குறையும். சுபகாரிய முயற்சிகளில் சிறு
தடை தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். ஆரோக்கிய பாதிப்புகள் சீராகும்.
குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். உடல்
நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகலாம். எடுக்கும் முயற்சிகளில் பல
இடையூறுகள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
மகரம்
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
கும்பம்
இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். நெருங்கியவர்கள் வகையில் தேவையில்லாத நெருக்கடிகள் தோன்றும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் வீண்
பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி
உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

No comments:
Post a Comment