Today rasi palan - 04.05.2026
இன்றைய ராசிப்பலன்
- 04.05.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
04-05-2026, சித்திரை 21, திங்கட்கிழமை, திரிதியை திதி
பின்இரவு 05.24 வரை
பின்பு தேய்பிறை சதுர்த்தி. அனுஷம் நட்சத்திரம் காலை
09.58 வரை பின்பு கேட்டை. நாள்
முழுவதும் சித்தயோகம். சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
அக்னி நட்சத்திரம் ஆரம்பம் இரவு
10.09.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம்
01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு
10.00-11.00.
|
சனி செவ் |
சூரிய புதன் |
சுக்கி |
குரு |
|
ராகு |
04.05.2026 |
|
|
|
|
கேது |
||
|
|
சந்தி |
|
|
இன்றைய ராசிப்பலன் - 04.05.2026
மேஷம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனமாகவும் நிதானமாகவும் பேசுவது நல்லது. பணம்
சம்பந்தபட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சியில் சாதகப்பலன் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
மிதுனம்
இன்று வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன்
கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். கடன் பிரச்சினை தீரும். வங்கி சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று உங்களுக்கு பயணங்களால் வீண்
அலைச்சலும் உடல்
சோர்வும் ஏற்படும். ஆடம்பர செலவுகள் மூலம் சேமிப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலனை அடையலாம்.
சிம்மம்
இன்று நீங்கள் எதிர்பாராத செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய
முடியும். கொடுத்த கடனை வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் குறையும்.
கன்னி
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடன்
பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சுப
முயற்சிகளில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். லாபம் பெருகும்.
துலாம்
இன்று வரவை
காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உற்றார் உறவினர்களுடன் மனஸ்தாப,ங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதரவு கிட்டும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றி தரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பொன்
பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். தேவைகள் யாவும் நிறைவேறும்.
தனுசு
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை
மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். தொழில் ரீதியாக தேக்கங்கள் விலகி நல்லது நடக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும்.
மகரம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் அனுகூலமாக இருக்கும்.
கும்பம்
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை
நீங்கும். வர
வேண்டிய தொகை
கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவியுடன் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். எதிர்பாராத பணவரவுகள் மகிழ்ச்சியை தரும்.
மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மந்த நிலை
ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலையில் பணிச்சுமை குறையும்.

No comments:
Post a Comment