Thursday, June 11, 2026

Today rasi palan - 11.06.2026

 


Today rasi palan -
11.06.2026

இன்றைய ராசிப்பலன் -  11.06.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

11-06-2026, வைகாசி 28, வியாழக்கிழமை, ஏகாதசி திதி இரவு 10.36 வரை பின்பு தேய்பிறை துவாதசி. ரேவதி நட்சத்திரம் காலை 08.16 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் காலை 08.16 வரை பின்பு அமிர்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

சனி சந்தி

செவ்

சூரிய

புதன்

ராகு

 

11.06.2026

குரு சுக்கி

 

கேது

 

 

  

 

 

இன்றைய ராசிப்பலன் -  11.06.2026

மேஷம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன் பொருள் சேரும். சேமிப்பு உயரும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அலைச்சலும் உடல் நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர  பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம்

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு காலை 8.16 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது, உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

கன்னி

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு காலை 8.16 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல்& வாங்கலில் சற்று கவனம் தேவை.

துலாம்

இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சொந்த தொழில் புரிபவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டு தொடர்பு கிட்டும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு காரணமாக உடல் அசதி சோர்வு உண்டாகும்.  குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வராத கடன்கள் வசூலாகும்.

மகரம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும், எடுக்கும் புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலப்பலன் உண்டாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பழைய கடன்கள் தீரும்.

மீனம்

இன்று உடல்நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

No comments: