Today rasi palan - 23.07.2026
இன்றைய ராசிப்பலன்
- 23.07.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர் பாலஜோதிடம்
வார இதழ்
தினமும் NewsTamil
24/7-ல் இன்றைய ராசிப்பலன்கள்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Online consultation at - 0091
7200163001. 9383763001,
Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb
இன்றைய பஞ்சாங்கம்
23-07-2026, ஆடி 07, வியாழக்கிழமை, நவமி திதி
காலை 07.03 வரை
பின்பு வளர்பிறை தசமி. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 01.43 வரை பின்பு அனுஷம். நாள்
முழுவதும் சித்தயோகம். தனிய நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மதியம்
01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை
09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை
04.00-06.00, இரவு 08.00-09.00.
|
சனி |
|
செவ் |
புதன்(வ) |
|
ராகு |
23.07.2026 |
சூரிய குரு |
|
|
|
சுக்கி கேது |
||
|
|
|
சந்தி |
|
இன்றைய ராசிப்பலன் - 23.07.2026
மேஷம்
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளி
வட்டார நட்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வருமானம் பெருகும்.
ரிஷபம்
இன்று உத்தியோகஸ்தர்கள் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல்
நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் நீண்ட நாள்
கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை
சற்று சுமாராக இருக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்
கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கடகம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண்
செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். எதிர்பாராத உதவி
கிட்டும்.
சிம்மம்
இன்று மன
உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன்
எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புத்திர வழியில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கன்னி
இன்று உங்களுக்கு பொருளாதார பிரச்சினைகளால் மன நிம்மதி குறையும். வியாபார ரீதியாக பண
நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
துலாம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத விதமாக திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.
தனுசு
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் தொடங்க உகந்த நாளாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று இனிய
செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் வீண்
பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.
மீனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன
உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

No comments:
Post a Comment