ஒம்சரவணபவா
குரு பெயர்ச்சி பலன் - 2026 -
2027 - கன்னி ராசி
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
புதனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் பல விஷயத்தை அறிந்தவராகவும் பிறருக்கு வழிகாட்டியாகவும் விளங்கக்கூடியவராக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 4, 7-க்கு
அதிபதியான குரு
பகவான் இது
நாள் வரை
10--ம் வீட்டில் சஞ்சரித்தார். தற்போது ஏற்படக்கூடிய பெயர்ச்சியால் குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 02-06-2026 முதல் 26-06-2027 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 26-05-2026 முதல் 13-06-2027 வரை) லாப ஸ்தானமான 11-ல் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதன் மூலம் உங்களுக்கு இருந்து வந்த அனைத்து விதமான பிரச்சினைகளும் படிப்படியாக விலகி ஏற்ற மிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் மிக
மிகச் சிறப்பாக இருந்து உங்களது குடும்பத் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய ஒரு பலம்
உண்டாகும். உங்களுக்கு இருக்கக்கூடிய தேவையற்ற செலவுகள் தற்போது குறையும். அது
மட்டும் இல்லாமல் உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 6-ல் ராகுவும் வரும் 5-12-2026 வரையும் அதன் பிறகு லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் இது
உங்கள் பலத்தை மேலும் அதிகரிப்பதுடன் அனுகூலமான பலன்களையும் தரும்.
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் தனது சிறப்பு பார்வையாக உங்கள் ராசிக்கு 3, 5, 7-ஆகிய
ஸ்தானங்களை பார்வை செய்ய இருப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டாகும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். எந்த
ஒரு காரியத்திலும் தைரியத்தோடு செயல்பட்டு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல
வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற வீண் செலவுகள் எல்லாம் தற்போது குறைந்து சேமிக்க கூடிய அளவிற்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். நீண்ட நாட்களாக நீங்கள் எண்ணிய காரியங்கள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறி மனம் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது உங்களின் நல்ல
பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்கள் செயல்களுக்கு சமுதாயத்தில் நல்ல ஆதரவு கிடைக்கும்.
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை என்று ஏங்கியவர்களுக்கு அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய யோகம் உண்டு. பூர்வீக சொத்து வகையில் நீண்ட நாட்களாக பங்காளியிடம் இருந்து வந்த
மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது மறைந்து சுமூகமாக பாகப்பிரிவினை நடைபெற்று உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்துக்கள் கிடைக்கக்கூடிய யோகமானது உண்டு. பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு
நல்ல தீர்வு கிடைக்கும். திருமண சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது முழுமையாக குறைந்து ஒற்றுமை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.
தொழில் வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு சந்தையில் நல்ல
விலை கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அதிகப்படியாக லாபங்கள் கிடைப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்கள் தற்போது நிலவேறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த வங்கி உதவிகள் தற்போது கிடைக்கும். சனி
பகவான் உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளை சற்ற அனுசரித்து செல்வதன் மூலமாக தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்க முடியும். கடந்த காலங்களில் அரசாங்க வழியில் உங்களுக்கு இருந்து வந்த சட்ட
சிக்கல்கள் எல்லாம் தற்போது முழுமையாக மறைவதால் மன
நிம்மதி ஏற்படுவது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த தொழில் வளர்ச்சியை அடைய முடியும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகள் வரும் நாட்களில் கிடைக்கும். உங்களுக்கு இருக்கக்கூடிய போட்டிகள் குறைவதால் தொழிலில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய பலம்
உண்டாகும். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவது மட்டுமில்லாமல் திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் உங்களது பணிச்சுமை சற்று குறையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நேரம் ஆகும். கடந்த காலங்களில் இருந்து வந்த
சின்ன சின்ன உடல் உபாதைகளால் உத்தியோகத்தில் சரிவர செயல்பட முடியாத அளவிற்கு ஒரு
சோர்வான நிலை
இருந்தது. தற்போது முன்பிருந்த இடர்பாடுகள் எல்லாம் தற்போது விலகி பணியில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய வாய்ப்பு, பிறரால் முடிக்க முடியாத பணிகளை நீங்கள் சிறப்பாக செயல்படுத்தி அதிகாரியிடம் நல்ல
பெயர் எடுக்கக் கூடிய ஒரு
யோகமும் வரும் நாட்களில் உண்டு. கடந்த காலங்களில் நீங்கள் பட்ட
கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவு காலம் பிறந்து உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் எல்லாம் தற்போது கிடைக்கும். உடன்
வேலை செய்பவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பதால் நீங்கள் மன நிம்மதியுடன் பணி புரிய முடியும். ஒரு
சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சிலர் விரும்பிய இடம்
மாற்றங்களை அடையக்கூடிய யோகம் உண்டாகும். புதிதாக வேலை
தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு கௌரவமான வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் வெளி
மாநிலங்கள் மூலமாக அனுகூலமான செய்தி ஒன்று கிடைக்க கூடிய நேரமாகும். உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் மனைவி பிள்ளைகளின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
தற்போது உங்கள் ராசிக்கு 7-ல்
சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சர்ப கிரகங்கள் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத வளர்ச்சிகளை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. தற்போது ஏற்படக்கூடிய குரு பெயர்ச்சியின் மூலமாக உங்கள் வாழ்வில் ஒரு
மிகப்பெரிய முன்னேற்றமானது ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல்
ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் சிறப்பான உடல்
நலத்துடன் இருப்பதால் கடந்த கால
வீண் செலவுகள் குறையும். உங்களுக்கு உள்ள அலைச்சல் டென்ஷன் எல்லாம் குறைந்து மன
நிம்மதியான சூழ்நிலைகள் உண்டாகும். கடினமாக பணியை கூட
எளிதில் செய்து முடிக்கும் பலம்
உண்டாகும். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டு அதனால் ஆதாயம் கிடைக்கும்.
குடும்பம் பொருளாதார நிலை
இது வரை
தடைப்பட்டு வந்த
சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் விலகி ஒற்றுமையும் சந்தோஷமும் உண்டாகும். உங்களை புரிந்து கொள்ளாமல் விலகிய உறவினர்களும் தேடி
வந்து நட்பு கரம் நீட்டுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலையானது உயர்ந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். வீடு
மனை வண்டி, வாகனங்கள் வாங்க விரும்புபவர்களின் எண்ணங்களும் கனவுகளும் நிறைவேறும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி கைகூடும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் லாபம் காணக் கூடிய காலமிது. தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல்- வாங்கல் நல்ல முறையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி திரும்ப கிடைக்கும். அசையா சொத்து வகையில் இருந்த பிரச்சினைகள், தேவையற்ற வம்பு வழக்குகள் யாவும் ஒரு
முடிவுக்கு வரும். பெரிய மனிதர்கள் மூலம் எதிர்பாக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி லாபத்தையும் அபிவிருத்தியையும் பெற முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் உறுதுணையாக இருப்பார்கள். தொழிலாளர்களும் ஒத்துழைப்பாக இருப்பார்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் தொழிலில் புதிதாக இணைவார்கள். தொழில் வியாபாரத்தை பல இடங்களில் விரிவுபடுத்த நீங்கள் மேற்கொள்ளும் யுக்திகளில் வெற்றி கிட்டும்.
உத்தியோகம்
நீங்கள் சந்தித்து வந்த சோதனைகள், வீண் பழிச்சொற்கள் யாவும் விலகி எதிர்பாராத உயர்வினை அடைவீர்கள். மற்றவரை அதிகாரம் செய்ய கூடிய அமைப்பு, பலரை வழி
நடத்தி செல்லக்கூடிய பதவிகள் உங்களை தேடிவரும். பதவி
உயர்வுகள் உண்டாவதால் அதனுடன் ஊதிய
உயர்வும் உண்டாகி பொருளாதார நிலையினை உயர்த்தி கொள்ள முடியும். உங்கள் திறமைகளை அதிகரித்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் செல்ல விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.
அரசியல்
மக்களுடைய ஆதரவுகளை பெற்று உயர்வடையக்கூடிய பொற்காலமாகும். மாண்புமிகு பதவிகள் தேடி
வரும். மக்களின் தேவையறிந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதியாக செயல்படுவீர்கள். கட்சி பணிக்காக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைத்து மன
நிம்மதி ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைந்து லாபத்தினைப் பெறுவீர்கள். கடந்த கால
சோதனைகளை தற்போது சாதனைகளாக மாற்றும் ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் அதிகரிப்பதால் புதிய பூமி, நிலம், நவீன கருவிகளை வாங்குவீர்கள். அரசு
வழியில் மானிய உதவிகள் கிடைக்கும். பங்காளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி சுமுகமான நிலை ஏற்படும். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக முடிவு கிடைக்கும்.
கலைஞர்கள்
நீண்ட நாள்
எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடிக்க கூடிய மகிழ்ச்சியான வாய்ப்பு அமையும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சொகுசு வாழ்விற்கும் பஞ்சம் இருக்காது. அடிக்கடி படப்பிடிப்புக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்பு உண்டாகும். புதிய வீடு,
வாகனங்களை வாங்குவீர்கள்.
பெண்கள்
நீண்ட நாட்களாக இருந்த உடல்
பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திருமண வயதை
அடைந்தவர்களுக்கு மண
வாழ்க்கை அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர பாக்கியம் அமைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பொன் பொருள் ஆடை ஆபரணமும் சேரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.
மாணவ மாணவியர்
கல்வியில் நல்ல
முன்னேற்றமடைய கூடிய காலமிது. முயற்சி செய்வதால் முடியாதது ஒன்றுமில்லை என்ற
அளவிற்கு தேர்ச்சிகளை பெறுவீர்கள். பள்ளி கல்லூரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு ஊக்க
மருந்தாக அமையும். தேவையற்ற நட்புகள் விலகி நல்ல
நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டி தேர்வுகளில் பரிசுகளை தட்டிச் செல்வீர்கள்.
குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசியில் 31-10-2026 முதல் 13-12-2026 வரை
குருபகவான் அதிசாரமாக 12-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் ராகு
6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து சகல
விதத்திலும் அனுகூலங்களை அடைவீர்கள். உடல்
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண வயதை
அடைந்தவர்களுக்கு சுப
காரியங்கள் கை
கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு,
வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 7-ல்
சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன்கோபத்தை குறைத்து கொண்டு நிதானமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது
சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். வேலைபளு குறையும்.
குரு பகவான் வக்ர கதியில் 13-12-2026 முதல் 13-04-2027 வரை
குரு வக்ரகதியில் சஞ்சரித்தாலும், கேது
11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல்
ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை
போன்ற பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தேவையற்ற அலைச்சலால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். சனி 7-ல்
சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடைகளுக்குப் பின்
வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபங்களை ஓரளவுக்கு அடைவீர்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த
பிரச்சினையும் ஏற்படாது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு இருந்தாலும் சக
ஊழியர்களின் ஒத்துழைப்பால் எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநபர்களிடம் பேசும் போது குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் 7-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது, ஊனமுற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற
வஸ்திரம் சாற்றி, நீல நிற
சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது உத்தமம்.
உங்கள் ராசிக்கு கேது 12-ல்
சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, விநாயகரை வழிபடுவது உத்தமம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,7,8 நிறம் - பச்சை, நீலம் கிழமை - புதன், சனி
No comments:
Post a Comment