Wednesday, September 2, 2026

Today rasi palan - 02.09.2026

 


Today rasi palan -
02.09.2026

இன்றைய ராசிப்பலன் -  02.09.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் பாலஜோதிடம் வார இதழ்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Online consultation at - 0091  7200163001. 9383763001,

Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb

 

இன்றைய  பஞ்சாங்கம்

02-09-2026, ஆவணி 16, புதன்கிழமை, பஞ்சமி திதி காலை 06.13 வரை பின்பு சஷ்டி திதி பின்இரவு 04.26 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பரணி நட்சத்திரம் பின்இரவு 01.43 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பின்இரவு 01.43 வரை பின்பு அமிர்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

சனி (வ)

சந்தி

 

செவ்

ராகு

 

02.09.2026

குரு

 

சூரிய புதன் கேது

 

 

  

சுக்கி

 

இன்றைய ராசிப்பலன் -  02.09.2026

 

மேஷம்

இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

 

ரிஷபம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் மன அமைதி குறையலாம். புதிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் உண்டாகும்.

 

மிதுனம்

இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.

 

கடகம்

இன்று உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். சேமிப்பு உயரும். பெண்களுக்கு வேலைபளு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

 

சிம்மம்

இன்று குடும்பத்தில் செலவுகள் அதிகமாக காணப்படும். உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வீண் பேச்சை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான விஷயங்களில் நிதானம் தேவை.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வெளி இடங்களில் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

துலாம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் பெருகும். தேவைகள் பூர்த்தியாகும்.

 

தனுசு

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். தெய்வ வழிபாடு நல்லது.

 

மகரம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகளால் மனநிம்மதி குறையும். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறைந்து காணப்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சலுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

 

கும்பம்

இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்தி வரும். தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

 

மீனம்

இன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும்.

No comments: