Wednesday, October 7, 2026

Today rasi palan - 07.10.2026

 


Today rasi palan -
07.10.2026

இன்றைய ராசிப்பலன் -  07.10.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் பாலஜோதிடம் வார இதழ்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Online consultation at - 0091  7200163001. 9383763001,

Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb

 

இன்றைய  பஞ்சாங்கம்

07-10-2026, புரட்டாசி 20, புதன்கிழமை, துவாதசி இரவு 11.17 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. மகம் இரவு 09.40 வரை பின்பு பூரம். சித்தயோகம் இரவு 09.40 வரை பின்பு அமிர்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

சனி (வ)

 

 

 

ராகு

 

07.10.2026

செவ் குரு

 

சந்தி கேது

 

 

 புதன் சுக்கி (வ)

சூரிய

 

இன்றைய ராசிப்பலன் - 07.10.2026

 

மேஷம்

இன்று பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனகசப்பு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினை குறையும்.

 

ரிஷபம்

இன்று நீங்கள் சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

 

மிதுனம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

 

கடகம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். வியாபார ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

 

சிம்மம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

 

கன்னி

இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் கிட்டும்.

துலாம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

 

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

 

தனுசு

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படக்கூடும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்கலாம். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

 

மகரம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை.  வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

 

கும்பம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

 

மீனம்

இன்று உங்களின் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன்- மனைவியிடையே மன ஸ்தாபங்கள் மறைந்து சந்தோஷம் கூடும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வருமானம் பெருகும். சுபகாரிய முயற்சிகளில் அ-னுகூலம் கிட்டும்.

No comments: