Sunday, November 1, 2026

Today rasi palan - 01.11.2026

 


Today rasi palan -
01.11.2026

இன்றைய ராசிப்பலன் -  01.11.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் பாலஜோதிடம் வார இதழ்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Online consultation at - 0091  7200163001. 9383763001,

Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb

 

இன்றைய  பஞ்சாங்கம்

01-11-2026, ஐப்பசி 15, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி பகல் 02.52 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. பூசம் பின்இரவு 04.30 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். பைரவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

சனி (வ)

 

 

 

ராகு

 

01.11.2026

செவ் சந்தி

 

குரு கேது

 

 

 சூரிய புதன்(வ)

சுக்கி (வ)

 

 

இன்றைய ராசிப்பலன் -  01.11.2026

 

மேஷம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் உண்டாகலாம். வாகனங்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

 

ரிஷபம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைத்து உங்கள் பிரச்சினைகள் குறையும்.

 

மிதுனம்

இன்று குடும்பத்தினருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் மனசங்கடங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியாக ஒரு சில உதவிகள் கிட்டும்.

 

கடகம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

 

சிம்மம்

இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். திருமண பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும்.

 

கன்னி

இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய வாய்ப்புகள் கிட்டும். தொழில் வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலம் உண்டாகும்.

 

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.

 

விருச்சிகம்

இன்று நீங்கள் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.

 

தனுசு

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளிப் பயணங்களையும் சுப முயற்சிகளையும் தவிர்ப்பது உத்தமம்.

 

மகரம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும்.

 

கும்பம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தரும காரியங்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

 

மீனம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.