Thursday, May 24, 2012

வரவேற்பறை - ஹால்


     வீடு என்று ஒன்றிருந்தால் அதில் வரவேற்பறை என்பது அவசியமாகும். வந்தோரை வரவேற்று உபசரித்து பலவற்றை பேசி மகிழ்வதும், விவாதங்கள் செய்வதும் வரவேற்பறையில் தான். உற்றார் உறவினர்கள் யார் வந்தாலும் அமர்ந்து பேச வரவேற்பறையாது மிகவும் வசதியாக இருக்கும். வரவேற்பறையில் ஷோபா செட் போட்டு, தொலைகாட்சி, மற்றும் அலங்காரப் பொருட்களை வீட்டின் வரவேற்பறையில் உள்ள செல்ப்புகளில் அடக்கி வைப்பதில் ஒர் அலாதி பிரியம் அனைவருக்கும் உண்டு. வந்தவர்கள் அதை எல்லாம் பார்த்து இது அழகாக இருக்கிறதே எங்கே வாங்கினீர்கள்? எவ்வளவு விலை என்றெல்லாம் கேட்கும் போது ஏற்பட கூடிய இன்பம்  இருக்கின்றதே அலாதி தான் போங்கள்
.
     வாஸ்து சாஸ்திர ரீதியாக வரவேற்பறை எந்த இடத்தில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என பார்க்கின்ற போது அதற்கும் சில விதி முறைகள் உண்டு.
     ஒரு வீட்டின் மத்திய பகுதியில் வரவேற்பறை அமைப்பது, வடகிழக்கு பகுதிகளில் அல்லது வடக்கு திசையை ஒட்டிய பகுதிகளில் கிழக்கு திசையை ஒட்டிய பகுதிகளில் வரவேற்பறையை அமைப்பது மிகவும் சிறப்பாகும்.
    வடக்கு பார்த்த வீட்டிற்கு வீட்டின் வடகிழக்கு பகுதியில் வரவேற்பரை அமைப்பது நல்லது.
    கிழக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்குப் பகுதியில் வரவேற்வரை அமைப்பது சிறப்பு.
    தெற்கு பார்த்த வீட்டிற்கு மிக சிறிய இடமாக இருந்தால் தென்கிழக்கு பகுதியிலும்,சற்று விசாலமான இடமாக இருந்தால் தென் கிழக்கு மூலையில் ஒரு சிறிய வராண்டா அமைத்து விட்டு கிழக்கு சுவற்றை ஒட்டியது போல உட்புறமாக கிழக்கு மத்திய பகுதியில் வரவேற்பறை அமைப்பது மிகவும் சிறப்பு.
    மேற்கை  பார்த்த வீட்டிற்கு வடமேற்கு பகுதியில் வரவேற்பறை அமைப்பதும் சற்று விசாலமான இடமாக இருந்தால் ஒரு பகுதியில் சிறிய வராண்டா அமைத்து விட்டு வடக்கு சுவற்றை ஒட்டியது போல வடக்கு மத்தியில் வரவேற்பறை அமைப்பது மிகவும் சிறப்பு.
ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001


Friday, May 18, 2012

தனுசுலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்



தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் 10ம் அதிபதியாவார். பொதுவாகவே ஒருவர் ஜாதகத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் அவருக்கு நல்ல அறிவாற்றல், நினைவாற்றல், எதிலும் சிந்தித்து  செயல்படக்கூடிய திறன்போன்ற யாவும் சிறப்பாக இருக்கும். புதனே ஜீவனாதிபதியாக விளங்குவதால் அவர் பலம் பெற்றிருந்தால் செய்யும் தொழில், உத்தியோக ரீதியாக சிறப்பான உயர்வினை அடைய முடியும். புதன் பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், சனி சேர்க்கையுடன் லக்னாதிபதி குருவின் பார்வையும் பெற்று அமைவாரேயானால் அவருக்கு நிலையான தொழிலும், சமுதாயத்தில் ஓர் உன்னதமான நிலையும் உண்டாகும். புதன் பலம் பெற்று சூரியன், செவ்வாய் 10 ல் அமையப் பெற்றால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகளை வகித்து சிறப்பான வருமானத்தை ஈட்ட முடியும். மக்கள் செல்வாக்கு  காரகன் என வர்ணிக்கக்கூடிய  சனி வலிமை பெற்று, 10 ல் சூரியன் செவ்வாய் இருந்தால் அரசாங்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும். அதிகாரமிக்க பதவிகள் அமையும். மக்களிடம் செல்வம், செல்வாக்கு உயரும். 10ல் சூரியன் செவ்வாய் இருந்தாலும் புதன் சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
புதனுடன் 9,12 க்கு அதிபதிகளான சூரியன், செவ்வாய் இணைந்து 9,12 ல் சந்திரன், ராகு போன்ற கிரகங்கள் அமையப் பெற்றால், கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய அற்புத அமைப்பு உண்டாகும். அதுபோல புதன் பலம் பெற்று உடன் சனி, சுக்கிரன் சேர்க்கையுடன் வலிமையாக அமையப் பெற்றால், சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம், வியாபாரத்தில் லட்ச லட்சமாக சம்பாதித்து கொடி கட்டி பறக்கும் யோகம் உண்டாகும்.
புதன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் பூமி, வேளாண்மை, விவசாய தொடர்புடைய தொழில், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 10ல்  புதன் சந்திரன் சேர்க்கை பெற்று  பலம் பெற்றால் ஜல தொடர்புடைய தொழில் செய்யக்கூடும்.
புதனுடன் சனி சேர்க்கைப் பெற்றால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யக்கூடிய வாய்ப்பும், சனி பலமிழந்திருந்தால் அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். புதன், குரு சேர்க்கை பெற்றால் வக்கீல் தொழிலில் அரசாங்க ஜீவனம் உண்டாகும். புதன் சுக்கிரன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்று குரு பார்த்தால் பெண்கள் வழியில் முன்னேற்றம், நல்ல தன லாபத்தை அடையக்கூடிய வாய்ப்பு உண்டாகும. புதன், சுக்கிரன், சந்திரன் இணைந்து ரிஷபம், கடகம், துலாமில் அமையப் பெற்றால் கலை, இசை, இலக்கியத்துறைகளில் புகழ்பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 
புதன் அதிபலம் பெற்றால் கம்ப்யூட்டர், கணிதம், வங்கிப் பணி, பங்குச் சந்தை போன்றவற்றில் அனுகூலமும்,  குரு போன்ற சுபர் பார்வை பெற்றால் நூல் ஆசிரியர், பதிப்பகம், பத்திரிகைத் துறை, புத்தக வெளியீடு, ஆசிரியர் பணி போன்ற துறைகளில் புகழ் பெறக்கூடிய யோகமும் அமையும். ஆகவே, புதன் பகவான் பலமிழந்தாலும் பாவிகளுக்கிடையே அமையப் பெற்றாலும், புதனுக்கு 7ல் சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் இருந்தாலும் வாழ்வில் மேன்மையடைய இடையூறுகள் உண்டாகும். ராகு, கேது போன்ற பாவிகளின் சேர்க்கைப் பெற்றால் சட்டத்திற்கு புறம்பான தொழிலில் ஈடுபடக்கூடிய அவலநிலை ஏற்படும்.
தனுசு லக்னம் உபய லக்னம் என்பதாலும், புதன் 10ம் அதிபதி மட்டுமின்றி 7ம் அதிபதியாகவும் இருப்பதாலும், உபய லக்னத்திற்கு 7ம் அதிபதி பாதகாதிபதி என்பதாலும், திரிகோணங்களில் அமைந்தால் மட்டும் கூட்டால் நற்பலனை பெறமுடியும். தனுசு லக்னத்திற்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால், கூட்டுத் தொழில் செசய்வதைத் தவிர்த்து, எதிலும் தனித்து செயல்படுவது, உத்தியோகம் செய்வது உத்தமம்.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

விருச்சிகம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்



விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நவகிரகங்களில் முதன்மை கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் 10ம் அதிபதியாவார். 10ம் அதிபதி சூரியனானவர் ஒரு வீட்டு அதிபத்யம் கொண்டவர். நவகிரகங்களுக்கெல்லாம் அரசனாக விளங்கக்கூடிய  சூரிய பகவானை ஜீவன ஸ்தானாதிபதியாக பெற்ற பெருமை விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே உண்டு.

சூரியன் ஆட்சி உச்சம் பெற்று லக்னாதிபதி செவ்வாயின் சேர்க்கையுடன் குரு பார்வை பெற்றிருந்தாலும், தனக்கு நட்பு கிரகங்களான செவ்வாய், சந்திரன் குரு போன்றவற்றின் வீடுகளில் அமைந்திருந்தாலும் சமுதாயத்தில் கௌரவமான பதவிகளை  வகிக்கக்கூடிய யோகம், அரசு, அரசு சார்ந்த துறைகளில் அதிகாரமிக்க பதவிகளை வகிக்கக்கூடிய வாய்ப்பு சிறப்பாக அமையும். சூரிய பகவான் குரு, செவ்வாய் சேர்க்கையுடன் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலம் பெற்று அமைந்திருந்தாலும் மேற்கூறிய நற்பலன்களை அடைய முடியும். 10ம்  வீட்டில் சுக்கிரன், சந்திரன் இணைந்திருந்தாலும் சூரியன், சுக்கிரன், சந்திரன் போனற் கிரக சேர்க்கைகள் 9,10,12 ம் வீடுகளில் அமையப்பெற்றிருந்தாலும் கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய  வாய்ப்பு அமையும்.
சூரியன் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 10ல் அமைந்து குரு பார்வை பெற்றால் கூட்டுத் தொழில் முலம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். சுக்கிரன் 10ல் அமையப் பெற்றால் ஆடை, ஆபரணம், கலைத்துறை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் போன்றவற்றால் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
சூரியன் , புதன் சேர்க்கையுடன் குரு பார்வை பெற்று 10ல் அமையப் பெற்றால் கணக்கு வழக்கு தொடர்புடைய தொழில், வணிக  தொழிலில் ஏற்றம் ஏற்படும்.
சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று பலம் பெற்றால் நிர்வாகத் தொடர்புடைய தொழில், அதிகார பதவி, பூமி,மனை, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் ஏற்றம் உண்டாகும். சூரியன், செவ்வாய் பலமாக சேர்க்கை பெறுவதுடன் சனி பகவானும் ஆட்சி உச்சம் பெறுவாரேயானால் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவி தேடி வரும். சூரியன், சந்திரன், செவ்வாய், கேது போன்ற நட்பு கிரக சேர்க்கை பெற்றிருந்தால் மருத்துவத்துறையில் பல சாதனைகள் செய்யக்கூடிய அமைப்பு ஏற்ஙபடும்.
குரு, புதன் இணைந்து 10ம் வீட்டில் அமையப் பெறுமேயானால் வாக்கால், பேச்சால் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். 10 ம் வீட்டில் சந்திரன், ராகு அல்லது சந்திரன் கேது சேர்க்கை பெற்றிருந்தால் மருந்து, கெமிக்கல் போன்ற துறைகளில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
விருச்சிக லக்னத்திற்கு ஜீவனாதிபதியாகிய சூரியன் கேந்திர திரிகோணங்களில் அமைந்து சுபர் பார்வையுடனிருந்ஙதால் சமுதாயத்தில் கௌரவமான நிலை, கை நிறைய சம்பாதிக்கக்கூடிய யோகம்  உண்டாகும்.
அதுவே 10ம் அதிபதி சூரியன் தனக்கு பகை கிரகங்களான சனி, ராகு சேர்க்கைப் பெற்றால் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் அமைப்பு, அதிலும் சுபர் பார்வையின்றி இருந்து  விட்டால் சட்டத்திற்கு விரோதமான வகையில் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சனி, ராகு சேர்க்கையுடன் சூரியன் 8,12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் அமைந்தாலும் ஜாதகருக்கு நிலையான வருமானமில்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Wednesday, May 16, 2012

வாஸ்து ரீதியாக வீடு கட்ட எளிய விதி முறைகள்

     வீடு என்றால் மகிழ்ச்சி நிறைந்தாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கையும் செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகமும், படுத்தால் நிம்மதியான உறக்கமும் வருவதாக வீடு அமைய வேண்டும். காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் என்று கேட்டார் பாரதி. அவர் கேட்டது போலவே எல்லாரும் கேட்டிருந்தால் அனைவருமே காணி நிலத்திற்காவது சொந்தகாரர்களாகி இருப்பார்கள். அவ்வளவு நல்ல மனம் படைத்த மனித தெய்வங்கள் வாழ்கின்ற பூமியா இது? பணம் படைத்தவர்கள் ஏராளமான இடங்களை வளைத்துப் போட்டு கோடீஸ்வரர்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வசதியே இல்லாதவர்கள் கூவம் ஆற்றில் குடிசை கட்டி வாழ்வதற்கோ, ரோட்டோரங்களில் தங்குவதற்கோ தயங்குவதில்லை. ஆனால் இந்த நடுத்தர வர்கம் என்ற ஒன்று இருக்கிறதே அவர்கள் படும் பாடு அப்பப்பா சொல்லிமாளாது. கையளவு நிலம் கூட வாங்க முடியாமல் திண்டாடுகிறார்கள். எந்த பராசக்தியிடம் கேட்பது என்று கூட தெரியவில்லை. நிறைய ரியல் எஸ்டேட்டுகள் முளைத்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆள் அறவமற்ற இடத்திற்கு இங்கு கார் வரும், பஸ் வரும், ரயில் வரும் முடிந்தால் வான ஊர்தியே வந்திறங்கும் என்று புளுகு மூட்டையை  அவிழ்த்து விடுவதுடன் எங்களிடம் வாருங்கள் ஒரு மனை வாங்கினால் ஒன்றை இலவசமாக பெறுங்கள் என்ற அழைப்பு வேறு. சரி எப்படியோ கஷ்டபட்டு ஒரு மனையை வாங்கி விடுகிறோம் என்று வைத்து கொள்வோம். மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும். நமக்கென ஒரு வீடு நம் குடும்பம் நம் வாழ்க்கை என நாமே காணும் கனவுகள் எக்கச்சக்கம் என்றாலும் வயல் வெளிகள், வாய்க்கால், ஆறு, ஏரி குளங்கள் அனைத்தும் பிளாட் போட்டு விற்கப்பட்டு கொண்டிருப்பது தான் கொடுமை. இனி அரிசிக்கும், தண்ணிருக்கும் கூட அடுத்த நாட்டை எதிர்பார்க்க கூடிய அவல நிலையும் உண்டாகலாம்.
    மக்கள் தொகை பெருக பெருக இடப்பற்றா குறையும் ஏற்படுவது நியாயம் தானே இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 170 கோடியாக உயரும் என ஆராய்ச்சியாளர்களும் கருத்து கணிப்பை கூறியுள்ளனர்.
     எது  எப்படியோ நமக்கென ஒரு இடத்தை வாங்கி விட்போம் என வைத்துக் கொள்வோம் அதில் வாஸ்துப்படி எப்படி வீடு கட்ட வேண்டும். நாம் வாங்கும் மனையின் நீள, அகல எத்தனை அடிகள் இருக்க வேண்டும். எந்ததெந்த அளவுகளில் வீட்டின் நீள அகலம் இருந்தால் நற்பலன் கிட்டும். எத்தனை அடிகளில் வீட்டின் மனை இருக்க கூடாது என்பதற்கெல்லாம் வாஸ்து ரீதியாக சரியான விதிகள் உண்டு. ஒரு  மனையின் மொத்த அளவில் கட்டப்படும் வீட்டின் அமைப்பு, அறைகள் மற்றும் சகல விஷயமும் எப்படி அமைந்தால் நன்மை தீமையான பலன்கள் உண்டாகும் என்பதனை பார்ப்போம்.
ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Monday, May 14, 2012

மீனம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி குரு பகவானே பத்தாம் அதிபதியாகவும் இருப்பது சிறப்பாகும். 10ம் அதிபதி குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று பலமாக அமைந்து விட்டால் செல்வம், செல்வாக்கு, சமுதாயத்தில் கௌரவமான பதவியினை அடையும் யோகம் உண்டாகும். அது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதில் வல்லவராகவும் வழி நடத்துவதில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். பேச்சால், வாக்கால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, கல்வி நிறுவனங்களில் பணபுரியக்கூடிய வாய்ப்பு, வங்கிப் பணி போன்றவை சிறப்பாக அமையும். 10ல் குரு, புதன் சேர்க்கை பெற்றாலும் மேற்கூறிய பலன்களே உண்டாகும்.

10ம் அதிபதி குரு பகவான் தனக்கு நட்பு கிரகங்களான சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும் 10ல் சூரியன், செவ்வாய் திக் பலம் பெற்று அமைந்திருந்தாலும் அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு, அரசு அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.  அதுபோல சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் கௌரவமான பதவிகள் தேடி வரும். குரு, சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும் குரு, சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும் குரு, சனி, சந்திரன் சேர்க்கை பெற்றிருந்தாலும் பிறந்த ஊரை, விட வெளியூர், வெளிநாடுகள் மூலம் அனுகூலங்கள், பயணங்கள் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

குரு, சந்திரன், கேது சேர்க்கை பெற்று 10 ல் இருந்தாலும் திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் சமூக நலப் பணிகளில் ஈடுபாடு, மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பணிகள் செய்யும் அமைப்பு, ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.

மக்கள் தொடர்புக்கு காரகனான சனி பகவான் 10ல் அமையப் பெற்று குரு, சூரியனும் பலம் பெற்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அளவிற்கு உயர்ந்த பதவிகளை அடைய முடியும். இது மட்டுமின்றி சொந்த தொழில் செய்யக் கூடிய  வாய்ப்பு, இரும்பு, விவசாயம், எண்ணெய், தொடர்புடைய தொழில், பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

சூரியன் 10ல் அமைந்தால் அரசு சார்ந்த துறைகளிலும், செவ்வாய் 10 ல் அமைந்தால் நிர்வாகத் தொடர்புடையத் துறைகளிலும் மற்றும் பூமி, மனை, ரியல் எஸ்டேட், போன்றவற்றிலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் 10ல் அமைந்தால் குருவுக்கு சுக்ஙகிரன் பகை கிரகம் என்றாலும் ஆடை, ஆபரணம், கலை, இசை துறைகளிலும், பெண்கள் உபயோகிக்கக்வடிய பொருட்கள், டிராவல்ஸ் போன்றவற்றின் மூலமாகவும் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும்.  ராகு 10ல் இருந்தால் மருந்து, கெமிக்கல் தொடர்புடையவற்றிலும்  10 ல் சந்திரனுடன் ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றிருந்தால் மருத்துவத் துறையிலும் முன்ன«ற்றம் கொடுக்கும். 10 ல் புதன் அமைந்தால் கணக்கு, கம்ப்யூட்டர் தொடர்புடைய துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.

10 ல் புதன் அமைந்தால் புதன் 7ம் அதிபதி என்பதால் நெருங்கியவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்வது அல்லது உத்தியோகம் செய்வது நல்லது. குறிப்பாக மீன லக்னம் உபய லக்னம் என்பதால் கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே செய்ய வேண்டியிருந்தாலும் மேலே கூறியது போல மனைவி மற்றும் மிக நெருங்கியவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்வது உத்தமம். அதுவே, குரு பகவான் பகை நீசம் பெற்று பாவ கிரக சேர்க்கையுடன் பலமிழந்திருந்தாலும், அஸ்தங்கம் பெற்றிருந்தாலும், 6,8,12 ல் மறைந்திருந்தாலும் நிலையான வருமானம் இல்லாமல் கஷ்ட ஜீவனம் செய்ய வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக 10ம் வீட்டையோ 10ம் அதிபதி குருவையோ சனி பார்வை செய்தால் தகுதிக்கு குறைவான வேலை கிடைக்கப் பெற்று வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001