Thursday, April 29, 2021
Wednesday, April 28, 2021
Today rasi palan - 29.04.2021
Today rasi palan - 29.04.2021
இன்றைய ராசிப்பலன் - 29.04.2021
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33
வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
29-04-2021, சித்திரை 16, வியாழக்கிழமை, திரிதியை திதி இரவு 10.10 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. அனுஷம் நட்சத்திரம் பகல் 02.09 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பகல் 02.09 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
|
|
சூரிய புதன் சுக்கி |
ராகு |
செவ் |
|
குரு |
திருக்கணித கிரக நிலை 29.04.2021 |
|
|
|
சனி |
|
||
|
|
சந்தி கேது |
|
|
இன்றைய ராசிப்பலன் - 29.04.2021
மேஷம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் தாராள தனவரவும், சுபிட்சமும் உண்டாகும். பிள்ளைகள் கல்வி விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை நீங்கி சற்று முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.
கடகம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை கூடும். வியாபாரத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பொறுப்புடனும், சிக்கனத்துடனும் செயல்பட்டால் பண நெருக்கடிகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி தேடி வரும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் மறையும். வருமானம் பெருகும்.
துலாம்
இன்று உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எதிர்பாராத வகையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் உங்களை தேடி வரும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் அறிமுகம் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். வெளி நபர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். தொழில் வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும்.
மகரம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
கும்பம்
இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செயல்படுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.
Tuesday, April 27, 2021
Today rasi palan - 28.04.2021
Today rasi palan - 28.04.2021
இன்றைய ராசிப்பலன் - 28.04.2021
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33
வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
28-04-2021, சித்திரை 15, புதன்கிழமை, துதியை திதி பின்இரவு 01.34 வரை பின்பு தேய்பிறை திரிதியை. விசாகம் நட்சத்திரம் மாலை 05.12 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
|
|
சூரிய புதன் சுக்கி |
ராகு |
செவ் |
|
குரு |
திருக்கணித கிரக நிலை 28.04.2021 |
|
|
|
சனி |
|
||
|
|
கேது |
சந்தி |
|
இன்றைய ராசிப்பலன் - 28.04.2021
மேஷம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 11.05 மணிக்கு பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வரவேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். எந்த செயலையும் நிதானமாக செய்வது நல்லது.
ரிஷபம்
இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
கடகம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வருமானம் பெருகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பிள்ளைகள் வழியில் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
கன்னி
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
துலாம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.
தனுசு
இன்று குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும்.
மகரம்
இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணபிரச்சினையை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.
மீனம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு பகல் 11.05 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளையும் சுபகாரியங்களையும் மதியத்திற்கு பிறகு மேற்கொள்வது உத்தமம். இதுவரை இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக குறையும்.