Rasi palangal

Saturday, July 16, 2016

குருப்பெயர்ச்சி பலன்கள் மிதுனம்
குருப்பெயர்ச்சி பலன்கள் மிதுனம்


(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)


எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்களுக்கு வரும் 02-08-2016 முதல் 02-09-2017 வரை ஆண்டுக்கோளான குரு ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இதனால் வீண் அலைச்சல், டென்ஷன், சுகவாழ்வு பாதிப்பு போன்றவை உண்டாகும். வீடு, வாகனம் போன்றவற்றாலும் வீண் செலவுகள் ஏற்படும். ராகு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், சனி 6-ல் சஞ்சாரம் செய்வதாலும் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல், பெரிய மனிதர்களின் ஆதரவு, பல பொது நலக்காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். கணவன், மனைவியிடையே பிரச்சினைகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் ஏற்படும். குரு பார்வை 8, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் மருத்துவச் செலவுகள் குறைவாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பதவி உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ் உயரும். பல்வேறு பொதுநல காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை, சோர்வு உண்டாகும் என்றாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தேவை யற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக்கொள்ள முடியும். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வருபவர்கள் மருத்துவ முறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்கவும்.

குடும்பம், பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே அடிக்கடி தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றி மறையும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள் வதால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பணவரவுகள் ஏற்ற இறக்க மாக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். சிலருக்கு அசையும்- அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும்.

கொடுக்கல்- வாங்கல்
பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை திருப்பிக் கேட்டாலே வீண் பிரச்சினை களை சந்திக்க வேண்டியிருக்கும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் சிறப்பாகவே நடைபெறும். எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். தொழிலாளர்களாலும், கூட்டாளிகளாலும் அனுகூலமான பலன்கள் உண்டாவதோடு, அபிவிருத்தியைப் பெருக்கவும் உறுதுணையாக இருப்பார்கள். எந்தவொரு காரியத்திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்து வதற்கு முன் சற்று நிதானித்து சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகம்
பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உழைப்பிற்கேற்ற பலனை தடையின்றிப் பெறமுடியும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப் பட்டாலும் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பணவரவுகள் திருப்திகரமாகவே இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி யாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

அரசியல்
எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் கிடைக்கப் பெற்று பெயர், புகழ் உயரும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்பதால் சற்றே அலைச்சல்களும் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்துவிட முடியும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சற்றே விரயங்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும்.

கலைஞர்கள்
எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று திறமைக்கு தீனி போட்டதுபோல இருக்கும். கைக்கு கிடைக்க வேண்டிய பணத் தொகைகள் தடையின்றிக் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை சற்றே குறைப்பது நல்லது. புதிய புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு கிடைக்கும்.

மாணவ- மாணவியர்
கல்வியில் மந்த நிலை உண்டாகக்கூடிய காலம் என்பதால் தேவையற்ற பொழுதுபோக்குகளையும் பழக்க வழக்கங்களையும் தவிர்ப்பது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாகவே இருக்கும். கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்
குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவை யற்ற அலைச்சல், டென்ஷன்கள், குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். என்றாலும் சனி பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். கணவன், மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க் கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிட்டும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்
குரு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களையே பெற முடியும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சனி 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் விலகி வம்பு வழக்குகளில் சாதகப்பலன் உண்டாகும். குரு பார்வை 8, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்ப தால் கணவன், மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி னாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்திலும் போட்டி, பொறாமைகளை சமாளிக்க முடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்படும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் 6, 11-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் சுக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். என்றாலும் பணவரவுகள் தேவைக் கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பதன் மூலம் வீண் விரயங்களைத் தவிர்க்க முடியும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களிலுள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் போட்ட முதலீட்டிற்கு பங்கம் ஏற்படாது. உத்தியோஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு சற்றே அலைச்சலை சந்திக்கவேண்டி வரும். என்றாலும் எதிர்பார்த்த உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். அரசியல் வாதிகளின் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்படாது.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்
குரு செவ்வாயின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீடான துலா ராசியில் அதிசாரமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைபட்ட திருமண சுபகாரியங் களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனைப் பெறமுடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கடன்களும் குறையும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். கூட்டாளிகளிடன் சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வதால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்க்கும் மதிப்பெண் களைப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். 

குரு பகவான் வக்ரகதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரை
குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால்  ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதால் மருத்துவ செலவுகள் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகஸ்தர் களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத ஊதிய உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். 

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் ஜென்ம ராசிக்கு தன ஸ்தானாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டிய சூழ்நிலை இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. உடன் இருப்பவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் வீண் மருத்துவச் செலவுகள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவது, பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். தொழிலில் போட்டிகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களும் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்
குரு ஜென்ம ராசிக்கு 6, 11-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் சுமாரான நிலையே இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உடல் நிலையில் சோர்வு, கை கால் மூட்டுகளில் வலி போன்றவை தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். 27-07-2017ல் ஏற்படவுள்ள 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் குரு பார்வை 10-ஆம் வீட்டிற்கு இருப்பதால் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கப்பெறும். வேலைப் பளுவும் குறையும்.

நட்சத்திரப்பலன்

மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள்
மிதுன ராசியில் செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. எனவே இக்காலங்களில் பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். உற்றார்- உறவினர்களும் ஆதரவுடன் செயல்படுவார்கள். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.

திருவாதிரை
மிதுன ராசியில் ராகுவின் நட்சத்திரமான திருவாதிரையில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். வீடு, வாகனம் போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து லாபத்தினைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது.

புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்
மிதுன ராசியில் குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சற்று அனுகூலமற்ற அமைப்பாகும். இதனால் பணவிஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சனி 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் வெற்றியினைப் பெறமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை தோன்றினாலும் பொருள்தேக்கம் ஏற்படாது. பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்:        5, 6, 8, 14, 15, 17
நிறம் : பச்சை, வெள்ளை
கிழமை : புதன், வெள்ளி
கல் : மரகதம்
திசை : வடக்கு
தெய்வம் : விஷ்ணு

பரிகாரம்
குரு பகவான் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு எந்திரம் வைத்து வழிபடுவது, சிவனை வணங்கி ருத்ரம் ஜெபிப்பது, ருத்ராபிஷேகம் செய்வது, அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிறப் பூக்களை அணிவது நல்லது. குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை தோறும் நெய் தீபமேற்றி மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது, 5 முக ருத்ராட்சம் அணிவது உத்தமம். 

No comments: