Tuesday, June 30, 2026

Today rasi palan - 30.06.2026

 


Today rasi palan -
30.06.2026

இன்றைய ராசிப்பலன் -  30.06.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-06-2026, ஆனி 16, செவ்வாய்க்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை பிரதமை திதி. நாள் முழுவதும் பூராடம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

சனி

 

செவ்

சூரிய

ராகு

 

30.06.2026

புதன்(வ) குரு சுக்கி

 

கேது

சந்தி

 

  

 

 

இன்றைய ராசிப்பலன் - 30.06.2026

 

மேஷம்

இன்று கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறையும்.

 

ரிஷபம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.

 

மிதுனம்

இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளால் பெருமை சேரும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

 

கடகம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

 

சிம்மம்

இன்று குடும்பத்தினருடன் ஒற்றுமை குறையும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

 

கன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமதப்பலனே கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. உடன் பிறந்தவர்களால் சாதகமான பலன்கள் கிட்டும்.

 

துலாம்

இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

விருச்சிகம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

 

தனுசு

இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

 

மகரம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடனிருப்பவர்களோடு சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. புதிய நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.

 

கும்பம்

இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் கைகூடும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.

 

மீனம்

இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வங்கி கடன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் ஈட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.

No comments: