Friday, June 19, 2026

Today rasi palan - 19.06.2026

 


Today rasi palan -
19.06.2026

இன்றைய ராசிப்பலன் -  19.06.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

19-06-2026, ஆனி 05, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி மாலை 05.00 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 10.07 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

 

சனி

செவ்

 

சூரிய புதன்

ராகு

 

19.06.2026

சந்தி குரு சுக்கி

 

கேது

 

 

  

 

 

இன்றைய ராசிப்பலன் -  19.06.2026

மேஷம்

இன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். வியாபார ரீதியான நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.

ரிஷபம்

இன்று எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சற்று கால தாமதமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மிதுனம்

இன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். சுப முயற்சிகளில் முன்னேற்றங்கள் உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.

கடகம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் சிறு வேலையை செய்வதற்கு கூட அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டில் பிள்ளைகளால் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் குறையும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் கவனமுடன் செயல்பட்டால் வெற்றி அடைய முடியும். தெய்வ வழிபாடு நல்லது.

துலாம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உங்கள் ராசிக்கு காலை 10.07 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு காலை 10.07 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.

கும்பம்

இன்று குடும்பத்தில் உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உயர் அதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்

இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சிலருக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். மன அமைதி ஏற்படும்.

No comments: