Today rasi palan - 14.03.2026
இன்றைய ராசிப்பலன்
- 14.03.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
14-03-2026, மாசி 30, சனிக்கிழமை, தசமி திதி
காலை 08.11 வரை
பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 04.49 வரை பின்பு திருவோணம். நாள்
முழுவதும் சித்தயோகம். காருடையான் நோன்பு. நோன்பு நேரம் மாலை 6.30-8.30, இரவு 9.30-10.30.
இராகு காலம் - காலை
09.00-10.30, எம கண்டம் மதியம்
01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
|
சனி சுக்கி |
|
|
குரு |
|
சூரிய புதன்(வ) செவ் ராகு |
14.03.2026 |
|
|
|
|
கேது |
||
|
சந்தி |
|
|
|
இன்றைய ராசிப்பலன் -
14.03.2026
மேஷம்
இன்று வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு காலை
09.33 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது, உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
மிதுனம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு காலை 09.33 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.
கடகம்
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன்கள் கிட்டும்.
சிம்மம்
இன்று காலையிலே இனிய செய்தி வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். சிலருக்கு தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கன்னி
இன்று குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வீண் செலவுகள் குறையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். வேலையில் நல்ல
மாற்றங்கள் உருவாகும்.
துலாம்
இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன்
கிடைக்கும். கடன்கள் குறையும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத
கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். உடல் நிலை
சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தனுசு
இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். கடன் பிரச்சினைகளால் மன அமைதி குறையும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் உரிய
நேரத்தில் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மகரம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் பெருமை சேரும் படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.
கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். வெளி பயணங்களில் கவனம் தேவை.
தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.
மீனம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். வராத வெளிகடன்கள் வசூலாகும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலங்கள் உண்டாகும்.

No comments:
Post a Comment