Today rasi palan - 28.07.2026
இன்றைய ராசிப்பலன்
- 28.07.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர் பாலஜோதிடம்
வார இதழ்
தினமும் NewsTamil
24/7-ல் இன்றைய ராசிப்பலன்கள்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Online consultation at - 0091
7200163001. 9383763001,
Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb
இன்றைய பஞ்சாங்கம்
28-07-2026, ஆடி 12, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி மாலை
06.19 வரை பின்பு பௌர்ணமி. பூராடம் நட்சத்திரம் பகல்
01.11 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் பகல் 01.11 வரை
பின்பு பிரபலாரிஷ்ட யோகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.
இராகு காலம் மதியம்
03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம்
12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
|
சனி (வ) |
|
செவ் |
புதன் |
|
ராகு |
28.07.2026 |
சூரிய குரு |
|
|
|
சுக்கி கேது |
||
|
சந்தி |
|
|
|
இன்றைய ராசிப்பலன் - 28.07.2026
மேஷம்
இன்று உடல்
ஆரோக்கியத்தில் சிறு
பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை
உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். தேவை
இல்லாத செலவுகள் செய்ய நேரிடும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பணம்
சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.
மிதுனம்
இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். இதுவரை வராத பழைய
பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.
கடகம்
இன்று எந்த
ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய
உயர்வு கிட்டும். குடும்பத்தில் உடன்பிறப்புடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த
காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
கன்னி
இன்று குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைய கடினமாக உழைக்க நேரிடும். நெருங்கியவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
தனுசு
இன்று தொடங்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை
விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
மகரம்
இன்று உங்களின் பொருளாதார நிலை
சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன்
பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். கடன்கள் குறையும்.
கும்பம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல்
ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.
மீனம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி
உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை தரும்.

No comments:
Post a Comment