Today rasi palan - 25.09.2026
இன்றைய ராசிப்பலன்
- 25.09.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர் பாலஜோதிடம்
வார இதழ்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Online consultation at - 0091
7200163001. 9383763001,
Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb
இன்றைய பஞ்சாங்கம்
25-09-2026, புரட்டாசி 08, வெள்ளிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு
11.07 வரை பின்பு பௌர்ணமி. சதயம் நட்சத்திரம் பகல்
11.22 வரை பின்பு பூரட்டாதி. நாள்
முழுவதும் சித்தயோகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.
ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற
நாள்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை
06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
|
சனி (வ) |
|
|
|
|
சந்தி ராகு |
25.09.2026 |
செவ் குரு |
|
|
|
கேது |
||
|
|
|
சுக்கி |
சூரிய புதன் |
இன்றைய ராசிப்பலன் - 25.09.2026
மேஷம்
இன்று உங்களுக்கு வருமானம் பெருகும். பணபற்றாக்குறை நீங்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தினருடன் இருந்த பிரச்சினைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
மிதுனம்
இன்று நீங்கள் கடினமாக முயற்சித்தால் மட்டுமே எடுத்த காரியத்தை முடிக்க முடியும். வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். கையிருப்பு குறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் கிடைக்கும் உதவியால் மனநிம்மதி உண்டாகும்.
கடகம்
இன்று எந்த
செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
சிம்மம்
இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சுப
செலவுகள் உண்டாகும்.
கன்னி
இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வேலை
சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். பணபற்றாக்குறை ஓரளவு குறையும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்களால் மன நிம்மதி குறையும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும். பணிச்சுமை குறையும்.
தனுசு
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அரசு
மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
மகரம்
இன்று குடும்பத்தில் வரவைவிட செலவுகள் அதிகரிக்கும். உடன்
பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பொறுப்புடன் நடந்துக்கொள்வதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல்
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி
வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சினையால் மன உளைச்சல் உண்டாகலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
