Thursday, April 4, 2019

Today rasi palan - 05.04.2019


Today rasi palan - 05.04.2019
இன்றைய ராசிப்பலன் -  05.04.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
05-04-2019, பங்குனி 22, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி பகல் 02.20 வரை பின்பு வளர்பிறை பிரதமை. நாள் முழுவதும் ரேவதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. அம்மன் வழிபாடு நல்லது.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  

சூரிய சந்தி

செவ்
ராகு
புதன் சுக்கி
திருக்கணித கிரக நிலை
05.04.2019

 

சனி கேது குரு

 


இன்றைய ராசிப்பலன் -  05.04.2019
மேஷம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
ரிஷபம்
இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுக்கு கல்வி விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.
கடகம்
இன்று நீங்கள் செய்யும் வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படும். வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.
கன்னி
இன்று உங்கள் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நவீன பொருட்கள் வீடு வந்து சேரும், பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். வியாபாரத்தில் தேக்கங்கள் விலகி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைபடும். பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் உதவி மகிழ்ச்சியை அளிக்கும்.
மகரம்
இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
கும்பம்
இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் பெறுவீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். சுப செலவுகள் செய்ய நேரிடும்.

சூரிய தசா என்ன செய்யும்

Vaara Rasi Palan (07-04-2019 to 13-04-2019) | Weekly Astrosign Predictio...

Wednesday, April 3, 2019

Today rasi palan - 04.04.2019


Today rasi palan - 04.04.2019
இன்றைய ராசிப்பலன் -  04.04.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
04-04-2019, பங்குனி 21, வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.51 வரை பின்பு அமாவாசை. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.36 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சர்வ அமாவாசை.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சூரிய சந்தி

செவ்
ராகு
புதன் சுக்கி
திருக்கணித கிரக நிலை
04.04.2019

 

சனி கேது குரு

 


இன்றைய ராசிப்பலன் -  04.04.2019
மேஷம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
ரிஷபம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். மன நிம்மதி ஏற்படும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழில் புரிபவர்க்கு தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கன்னி
இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
துலாம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்தடையும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அடையலாம். வருமானம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.
தனுசு
இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிட்டும்.
மகரம்
இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். கடினமான காரியங்களை கூட எளிதில் செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலப் பலன் உண்டாகும்.
மீனம்
இன்று நீங்கள் குடும்பத்தினரின் உதவியுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வண்டி வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.